Friday, July 12, 2024

SALEM SUNDARI- 30

 SALEM SUNDARI- 30

சேலம் சுந்தரி -30

மறுநாள் சற்று வேலை அதிகம் . கிட்டத்தட்ட லஞ்ச் நேரம் வரை, நிறைய வேலைகளை கொடுத்துக்கொண்டிருந்தார் சுப்புரெத்தினம்.

என்னவோ தெரியவில்லை-- சுப்புரெத்தினத்திற்கு காலை முதல் வயிறு படுத்துகிறது..

அவர் பாணியில் சொன்னால் "வகுரு பொடச்சுக்கிட்டு" அவ்வப்போது கோடை மழைபோல கடபுட என்று உருட்டல். .

நல்ல வேளை, இவள் சுந்தரி. சாரதாவாக இருந்தால், "என்ன சார் பெட்டர்னிட்டி [PATERNITY]   லீவா" என்று வம்பிழுத்திருப்பாள்இப்போது தான், சுப்புரெத்தினம், மாடசாமி தரும் மருத்துவ சேவையை எண்ணி உள்ளூர பாராட்டினார். தெய்வம் போல் மாடசாமி எதிரே நிற்க ,  சார் வகுரு உருட்டுது டாக்டர் கிட்ட போய் வரலாமான்னு பாக்கிறேன் என்றார்.

சார் கொஞ்சம் இருங்க என்று டாக்டர் பிரசாத்துக்கு போன் போட்டார் மாடசாமி ..

வாங்க இங்கதான் இருக்கேன் 3-15 மணிக்கு RMO இன்ஸ்பெக்ஷன் அதுனால இங்கதான் என்கிறார்.

ஒரு செக்கப்பிற்கு வரலாமா  என்றார் மாடசாமி. வாங்க சார் என்கிறார் டாக்டர்.

இப்போது சு. ரெ மாடசாமி யின் பின் கன்றுகுட்டிபோல் சுருண்டு உட்கார்ந்து பயணம். . டாக்டர் வயிற்றை அமுக்கி இது பெப்டிக் அல்சர் அறிகுறி 20 நாளுக்கு காரம் எண்ணை இல்லாம இட்டிலி, தயிர் சாதம் , நுங்கு, இளநி சாப்பிடுங்க . பிரியாணி, பரோட்டா இதெல்லாம் கூடாது. வயிறு உபாதை இருந்தா 1 ஸ்பூன் ஜெல் என்று மருந்து மாத்திரை கொடுத்தார்.

அடுத்த 3/4 மணியில் சுப்புரத்தினம் கிட்டத்தட்ட நார்ர்மல்; கேழே கேன்டீனில் வெங்காய பஜ்ஜி -மூக்கைத்துளைக்கிறது. சுப்புவுக்கு சபலம் 2 பஜ்ஜியை உள்ள தள்ளினால் என்ன என்று . உடனே ஐயோ ஆப்பரேஷன் அது இதுனு உடம்பெல்லாம் தையல் போட்ட்ருவாங்க .

இந்த சுந்தரிக்கு தையல் போட்டு தையல் நாயகியா  இருப்பான்னு பாத்தேன். அது நம்ம பக்கம் திரும்பிடும்போல இருக்கு அரே தேவுடா   என்று மானஸீகமாக ஏழுமலையானை கும்பிட்டார்.

அத்துணை டாகுமெண்ட் களையும் தயார் செய்து சிலவற்றை மெயிலில் அனுப்ப மெயில்பாக்ஸ் திறந்தாள். மெயில்அனுப்பிவிட்டு நிமிரும் முன் சாரதாவிடம் இருந்து  மெய்ல் --சுந்தரிக்கு.

சும்மா கண்ணைப்பறிக்கும் 5 வெவ்வேறு டிசைன்களில் கல்யாண பத்திரிகை. இப்படி அமைப்பில் சுந்தரி பத்திரிகை பார்த்ததே இல்லை. இந்த சாரதா.  பலே கில்லாடி தான் போல; யூனிவர்சிட்டி மேடம் சொன்னாங்களே நல்லா ஹெல்ப்     பண்ணுவா னு   --இவங்களுக்கு நான் எப்படி நன்றி செலுத்துவேன் என்று உள்ளூர கலக்கம் கொண்டாள் .

P S : இன்னும் தேதி, முகூர்த்தம் நிர்ணயம் ஆன பின் உங்களுக்கு விருப்பமான டிசைன் அமைப்பில் செய்யலாம். திருத்தங்கள் ஏதேனும் வேண்டுமெனில் தொடர்புக்கு என்று மெய்ல் id மற்றும் போன் நம்பர் கொடுத்துவிட்டு சுபாசாரு என கையெழுத்தை பதிவேற்றி இருந்தாள்.

சுந்தரி எல்லையில்லா மகிழ்ச்சி கொண்டாள்

நான் வீட்ல போய் ரெஸ்ட் எடுக்குறேன் ரொம்ப டயர்டா இருக்கு என்றார் சுப்புரெத்தினம்.

சார் 2 நிமிஷம் நில்லுங்க வெயில் கொல்லுது நம்ப இஞ்சினீரிங் ஆளுங்க காஜாமலை சைடுல போகணும்னு வேன் ரெடி பண்றாங்க அதுல போங்க;  நம்ப பசங்க தான் உங்கள வீட்டுல விடச்சொல்லிடறேன். அதுலயே சிவராமன் னு ஒரு பையன் அவன்கிட்ட சொன்னா உங்க ஸ்கூட்டரை வீட்டுல கொண்டுவந்து குடுத்துருவான் வெயில்ல 2 வீலர் ஓட்டாதீங்க அல்சர் அது இதுனு தொந்தரவு வந்துரும். .   கொஞ்சம் பொறுங்க என்றார் மாடசாமி

தொடரும்

அன்பன் ராமன்

No comments:

Post a Comment

ANGER AND EGO -8

  ANGER AND EGO -8 கொந்தளிப்பும் அகம்பாவமும்-8 SEEKING- FEED-BACK   கருத்து கோரி பெறுதல் இது ஒரு மனித செயல்பாடு குறித்த அளவீ...