Friday, July 12, 2024

Teacher –Beyond your Image- 5

 

Teacher –Beyond your Image- 5     

ஆசியர் -- உங்கள்  பிம்பத்தை தாண்டி -5,

செயல் வடிவம் -II  [வகுப்பறை செயல் சார் நுணுக்கங்கள் ]

ஆசிரியப்பணியின் -குறிப்பாக கல்லூரி மற்றும் முதுநிலை பாடத்திட்டங்கள் போதிக்கும் வாய்ப்பு சிலருக்கே வாய்க்கும். அந்த சிலரும் முறையான பயிற்சி வழங்காவிடில் பயில்வோர் மேம்பாடு மற்றும் ஆய்வுப்பணிசார்ந்த துறைகளில் கால் பதிப்பது மிகவும் கடினமாகப்போய்விடும்.

இதனால் NET /SLET பிற தேர்வுகளில் பங்கேற்க நமது இளைஞர்கள் தயக்கம் கொள்கின்றனர். அவர்களின் பார்வையில் தெளிவோ, அல்லது கருத்துகளை விவாதிக்கும் அனுபவமோ இல்லை.எனவே தான் பெங்களூர் /ஹைதராபாத் கேரள /பூனே /டெல்லி கல்விநிலைய பயிற்சிகளில் இருந்து வரும் இளையோர் இவ்வகை தேர்வுகளில் முத்திரை பதிக்கின்றனர்.

எப்படி எனில் அவர்களால் எந்த வினாவுக்கும் பொருத்தமான /தேவையான அளவுக்கு விடை அளிக்கவும் , விவாதங்களில் நேரடியாக பங்குகொண்டு பிறரை எதிர்கொள்ளும் உத்திகளை வகுப்பறைகளிலேயேசெயல்படுத்தவும்  கற்று , களம் காண்கின்றனர்.

அப்படி எனில் ஏன் இந்த வேறுபாடு?

இதுதான், ஆசிரியர்கள் பயிற்றுவிக்கும் அணுகுமுறையில் எழும் வேறுபாடு /மாறுபாடு.

இங்கே பல வகுப்புகள், செய்தி வாசிப்பது போல நோட்ஸ் வாசிப்பதே போதிப்பது என்று உடலை வருத்தாமல் பாடத்திட்டம் [SYLLABUS ] நிறைவேற்றப்படுகிறது . அதுவும் கூட குறைந்தது 5 ஆண்டு க்கு முன் எழுதப்பட்ட நோட்ஸ்.

அதில் தற்போதைய தகவல் [UPDATED INFORMATION] இல்லை.   தமிழகத்தில் பல இடங்களில், மாணவர்கள் நேரடியாக புத்தகங்களை ஆழ்ந்து படிப்பதில்லை. அவர்கள் 'ASSIGNMENT தேவைக்கு, 1 அல்லது 2 புத்தகங்களைப்பார்த்து நேரடியாக காபி அடித்து மதிப்பீட்டுக்கு கொடுத்துவிடுகிறார்கள்.

உரிய ஆசிரியர் அவற்றில் வினா எழுப்பி அது என்ன, இது என்ன என்று துருவினால், காபி அடித்தது தெரியும். எனவே உயர் நூல்களில் இருந்து தகவல் திரட்டுவதோ /பல நூல்களின் வாயிலாக எடுக்கப்பட்ட தகவலோ எவ்வாறு தொகுப்பது என்ற அடிப்படை உத்திகளைக்கூட அறியாமல் முதுகலைப்பட்டம் பெற்று வேலைக்கு Q வரிசையில்  நின்று வாழ்வோர் அநேகர். இவை அனைத்திற்கும் அடிப்படை-- தகவல் திரட்டி, தொகுக்கும் நேரடி  முயற்சியோ பயிற்சியோ இல்லாதது தான்.

உண்மையிலேயே, உயர்கல்வியின் பலன், "சொந்தக்காலில் நிற்பது தான்" இவர்களுக்கு சொந்தக்காரர்களின் காலில்   நிற்கும் பயிற்சி கூட    சரியாக இல்லை.   

இவற்றிற்கான தீர்வு யாது?

மாணவன் எப்படி சொந்தக்காலில் நிற்பான் என்று குழம்பாதீர்கள்.

போட்டித்தேர்வு நோக்கி பிற மாநில குழந்தைகள் பயணிக்க, தமிழகத்தில் அவற்றை சந்தேகக்கண்ணோடு பார்ப்பது ஏன்? சில காலமாகவே தகவல் அறியாமல் [பாடத்தில் தான்], கேள்விக்கென்ன பதில்?  என்றே தயார் செய்யப்பட்டு, அதிலும் போட்டி மனப்பான்மையை வளர்க்காமல், spoon feeding எனும் வாயில் உணவுவூட்டும் தாயை ப்போல,  தேர்வுகளைக்கூட ஒரு குறுகிய எல்லைக்குள்ளேயே வைத்துவிட்டு 200/200, 98% பெண்கள் , 95%ஆண்கள் பாஸ் என்று பெருமை பேசி, அந்த சில கேள்விகளைத்தவிர வேறெதுவும் தெரியாது என்ற அளவிலேயே வளர்ந்தவர்களால் உண்மையான போட்டிகளை எதிர்கொள்ளுதல் எளிதன்று.

தற்போது நிலைமை சற்று மாறியுள்ளது எனினும் 10 வகுப்பு தாண்டிய யாரும் எந்த விவரத்தையும் சொந்த சொற்களில் எழுதும் அளவிற்கு அடிப்படை மொழி ஆளுமை [தமிழில் தான்] இல்லையெனில் அவர்கள் பாஸ் என்று சொல்வதில் என்ன பயன்?

பழைய SSLC [சுமார் 55ஆண்டுகள் முன்தமிழ் மீடியம் ] பயின்றோர் தமிழ்/ஆங்கிலம்  இரண்டிலும் பிழையின்றி எழுதவும் , அச்சமின்றி பேசவும் நன்கு பயிற்றுவிக்கப்பட்டிருந்தனர்.

அவர்கள் தான், வடஇந்திய பகுதிகளில் பணி அமர்ந்து, தென்னாட்டவர் குறித்து பெருமையாக பார்க்கப்பட்டனர்.  இப்போதைய இந்த வீழ்ச்சி ஏன்?

பின் வரும் இணைப்பில் வெறும்  3 ம் வகுப்பு வரை படித்த  ஒரு மூதாட்டி யின் மொழி ஆளுமையை கவனியுங்கள். எங்கே போனது இவ்வகை பள்ளிக்கல்வி? சிந்திக்க வேண்டிய தகவல்

https://www.youtube.com/watch?v=hcMDfQMk104 WATCH  TO UNDERSTAND WHAT I MEAN.

காலப்போக்கில் "எளிமையாக்குவது  ஒன்றே " மாணவர் நலன் காப்பது என்ற தவறான கொள்கை முடிவால், PLUMMET என்ற சொல்லுக்கு நம்மவர் உதாரணம்  ஆனோம் .   "எளிமையாக்குவது உயர்வுக்கு உதவாது; மாறாக பயிற்சியை வெகு நுணுக்கமாக கீழ் வகுப்புகளில் துவங்கி, கற்பது எளிமையான மகிழ்வான நிகழ்வு என்று மாணவர்கள் உணரவைப்பது அடிப்படைத்தேவை.

ஆசிரியப்பணியில், APTITUDE எனும் போதிக்கும் ஆர்வம் சிறிதும் இல்லாத நபர்களை விலக்கிவைத்தால் நன்மை ஏற்படும்.

இவ்விடத்தில் ஒரு பெரும் தவறு- அதிக மார்க் என்பதே ஆசிரியர் தேர்வுக்கு அளவுகோல்.

 மன்னிக்கவும் தனக்கு புரிந்துகொள்வதும், பிறர்க்கு புரிய வைப்பதும் ஒன்றல்ல. பிறர்க்கு உதவும் வகையில் பயிற்று விக்க, ஆர்வமும் அர்ப்பணிப்பும் தேவை. ராணுவத்தினருக்கு ஆரோக்கியமும், துணிவும் தேவை என்பதை சமரசம் செய்தால் என்ன ஆகும் அதைவிட ஆபத்து ,   ஆர்வமும் அர்ப்பணிப்பும்இல்லாத நபர்கள் ஆசிரியப்பணிக்கு தேர்வு செய்யப்படுவது.

இதை மேம்போக்காக ஏதோ எல்லாம் எல்லோர்க்கும் என்ற ஒரே நோக்கில் பயணித்தால் , ஆசிரியர்கள் பெரும் ஆளுமைகளாக உருவாவது கடினம். எல்லாம் எல்லோர்க்கும் என்பது பயிற்சியின் வலிமையினால் ஏற்படவேண்டுமே அல்லாமல், எளிமையாக்குதல் மூலம் அல்ல. எனவே சொந்தக்காலில் நிற்பது கடும் தொடர் பயிற்சியினால் மட்டுமே சாத்தியம்.

இந்த முயற்சியில் நல்ல புத்தகங்களை [வேவ்வேறு ஆசிரியர்களின் ஆக்கங்கள்] தொடர்ந்து பின்பற்றிவர ஒரு தெளிவும், நல்ல தகவல் திரட்டும் திறனும்  கிடைக்கும்.

நல்ல புத்தகங்கள்  எவை? உலக அரங்கில் குறிப்பிட்ட துறையில் நன்கு அறியப்பட்ட பலரும் நூல்களை எழுதுகின்றனர் . அவர்கள் நேரடி ஆராய்ச்சியின் வாயிலாகக்கண்ட பொருளை விளக்கும்போது , தெளிவும், நம்பகத்தன்மையும் [Clarity / authenticity]  மேலோங்கி இருக்கும்.  அவற்றை படித்துவிட்டு-- வேறு எழுத்துகளை படித்தால் நான் சொல்லும் 'நல்லபுத்தகங்கள்" என்ற சொல் நன்கு விளங்கும்.

அவற்றை இனம் காண்பது எங்ஙனம்?   மேலும் புதிது புதிதாக நூல்கள் வரும்போது "நல்ல"   என்பதை எவ்வாறு நிர்ணயிப்பது ?.

இது குறித்து பெரிதும் தேடிக்கொண்டிருப்பதை விட, ஒருசிறிய நடைமுறை நமக்கு உதவி செய்யும். Author எனும் ஆசிரியர் பற்றி அறியாவிடினும்  publisher எனும் பதிப்பாளர் பற்றி அறிந்திருந்தால் போதும்.

ஆம், நல்ல பதிப்பாளர்கள், சிறப்பாக சீர்தூக்கிப்பார்க்காமல் எந்த நூலையும் வெளியிட மாட்டார்கள். அவர்களின் தேர்வில் கருத்து + எழுத்து இரண்டும் நன்கு உள்ள நூல்களை மட்டுமே வெளியிடுவர்.. அவ்வகை பதிப்பாளர்கள், நல்ல நூல்களை தேடிப்பிடித்து வெளியிடுவதால்,  தரம் குறைந்த நூல்களை தவிர்ப்பார்கள். ஏனெனில், அவர்கள் உலக அரங்கில் போற்றப்படும் நூல் பதிப்பாளர்கள். அவர்கள் பெரும்பாலும் பல நாடுகளில் படைப்புகள் /பதிப்புகளை .வெளியிடுவதால், நல்ல எழுத்துகளை மட்டுமே வெளியிட்டு நூல் மற்றும் பதிப்பாளர் பண்புகள் குன்றாதபடி பார்த்துக்கொள்வார்.

எனவே , நல்லபதிப்பாளர் நூல்கள் நம்பிக்கை தருவன. அவற்றை மாணவர்கள்/ ஆசிரியர் பயன்படுத்தினால், தகவல் சேகரிப்பில்   இருக்கவேண்டிய நுணுக்கங்கள்  மற்றும் பல தகவல்களை தொகுக்கும்[நோட்ஸ் assembling] உத்திகளை  அனைவரும் கற்க உதவி யாக இருக்கும். சொந்தமாக நோட்ஸ் உருவாக்கிக்கொள்ள இயலும்..

இது,  தேர்வுக்கும், வகுப்பறை /செமினார் தொடர்பான தகவல் புரிதலுக்கும் நல்ல ஆதரவு தரும், தன்னம்பிக்கையும், செயல் ஆர்வமும் மேம்படும். போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ளும், மனவலிமை அதிகரிக்கும்.

அதுவே- உண்மையான உயர் கல்வி தரும் மேம்பாடு.  

நோட்ஸை    நம்பி, வாழும் எவர்க்கும், ஆளுமையும் தன்னம்பிக்கையும் மேம்பட வாய்ப்புகள் மிக மிகக்குறைவு.   

தனி மனித திறன்/ புரிதல், மொழி ஆளுமை இவற்றை வளப்படுத்தாத எந்தக்கல்வியும், பயன் தராது.

வகுப்பறையில் ஆசிரியர்கள் விவாத முறையில் கருத்துகளை முன் வைத்து போதித்தால், பயில்வோர் அது போன்ற அணுகுமுறையின் உயர்வினை உணர்வர். செமினார்களில் பேசும் முறை, விளக்கம் தருதல் போன்ற திறமைகளை கட்டமைக்க அரிய வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்டால், தனி மனிதர்கள் அச்சம் விலக்கி, படிப்படியாக முறையான முன்னேற்றம் காண்பர்.

வளரும்

அன்பன் ராமன்

 

 

 

https://www.youtube.com/watch?v=0iuWbtmLlm0 how to read kolahala srinivasan

No comments:

Post a Comment

ANGER AND EGO -8

  ANGER AND EGO -8 கொந்தளிப்பும் அகம்பாவமும்-8 SEEKING- FEED-BACK   கருத்து கோரி பெறுதல் இது ஒரு மனித செயல்பாடு குறித்த அளவீ...