Wednesday, August 21, 2024

SALEM SUNDARI-43

 SALEM SUNDARI-43

சேலம் சுந்தரி- -43

காலை 10.20 க்கு போன் மாடசாமிக்கு , ராமசாமியிடம் இருந்து . முடிந்தால் 11.20க்கு சுந்தரியை பேப்பர் பேனாவுடன் காண்டீன் வரச்சொல், முடிவாக சொல்லச்சொல்லு. மாடசாமி சுந்தரிக்கு SMS மீட் RS sir ,11.20 am with writing materials . சே. சு மிரண்டாள் , ஐயோ நான் மட்டுமாவா? நீங்க ? என்றது SMS .

அழைப்பு உங்களுக்கு த்தான் என்ற து பதில். உயிரை கையில் பிடித்துக்கொண்டு பெரியவரை [அவள் மனதில் ராமசாமிக்கு அதுதான் பெயர்] சந்திக்கப்போனாள். அவன் எங்க? -ராமசாமி ;

சுந்தரி தயங்கினாள். ரா சா போன் மா சாவுக்கு   வரலியா? . நீ என்னைக்கூப்பிடவேயில்லை -மா சா . துரையை கூப்பிட்டாதான் வருவீங்களாக்கும் , சீ வாடா சரி த்தான்   என்றார் ரா சா.

மாடசா மி வேண்டுமென்றே பவ்யமாக நின்றுகொண்டு கிண்டலாக "அய்யா சமூகம் கூப்பிட்டதாக சொன்னாங்க, என்ன ஏதுனு கேட்டுக்கிட்டு போவலாம்னு வந்தேனுங்க என்று கோவைப்பகுதி கிராமவாசி போல பேச. உக்காருங்கய்யா பெரியவுங்க நிக்கறீங்களே என்று ராமசாமி எழுந்து நின்றார். சுந்தரிக்கு சிரிப்பு பொத்துக்கொண்டு வருகிறது சிரித்தால் ராமசாமி திட்டிவிடுவார் என்று பயம்.

."ஏய் காப்பி சொல்லுடா" -ரா சா. .  ஆங் நல்லாருக்கே , போன்பண்ணி வரச்சொல்லி , நான் காப்பி வாங்கணுமா , முடியாது நியாயமா நீ தான் வாங்கணும் , வேற எவனையாவது பாரு நான் வாங்க மாட்டேன் என்றார் மாடசாமி. இப்ப நீ வாங்கி தரல்லேன்னா உன்னை ரூமுக்கு போக விடமாட்டேன் என்று மிரட்டினார் மாடசாமி. .  இது என்னடா நண்பர்களுக்குள் இப்படி ஒரு உரசல் என்று பயந்தாள் சே சு. சார் நீங்க பெரியவங்க நானே வாங்கிடறேன் சார் என்று டோக்கன் வாங்கப்போனாள் .

எப்பிடி நம்ப ஐடியா என்று கிசுகிசுத்தார் ராமசாமி. எப்பிடி காப்பி வாங்கித்தானு கேக்குறது? அதுக்கு தான் இப்பிடி ஒரு வேலையை ஆரம்பிச்சேன்.

அதெல்லாம் ஒன்னும் இல்லடா காபி வங்கித்தானு சொன்னா மாட்டேன்னிருவாங்களோ? . பெண்கள்-- ஒரு நாளும் சொல்லமாட்டாங்க. அதாவது கல்யாணம் கட்டிக்கிறவரைக்கும். அப்புறம் புருஷனே கேட்டாலும் போடா னு சொல்லாம சொல்லுவாங்க. என்றார் மாடசாமி.

அடே  பாவி நீ கல்யாணமே  பண்ணிக்கல்ல, ஆனா இப்பிடித்தான் செய்வாங்கனு சொல்றியே எப்பிடிறா என்று ராமசாமி வியக்க, சுந்தரி காபிக்கு ஏற்பாடு செய்துவிட்டு நெருங்கி வந்துகொண்டிருக்க , ராமசாமியை பார்த்து மாடசாமி "எல்லாம் உன்கூட சேந்து இப்பிடி ஆயிட்டேன்". . என்று  முடித்தார்.

இதற்குள் காபி வந்தது . இரண்டு சாமிகளும் காப்பியை சுவைத்ததும்,  ஸ்பெஷல் காப்பியா" என்றனர். இல்ல சார்  15 ரூபாய் காப்பிதான் சார்என்றாள்.

மாடசாமி கிண்டல்செய்தார் "பெண்கள்,  காபி வாங்கினா நல்லா  போட்டு தருவாண்டா   . நம்ப மூஞ்சியை பாத்தாதான் எல்லாருக்கும் வெறுப்பு வரும்.என்றார் மாடசாமி , ஆமாம் டா என்றார் ரா சா.

சுந்தரிக்கு புரிந்தும் புரியாமலும் இருந்தது. சரி தவறு என் மீது தான் ஆனால் நான் அவர் முகத்தையே வெறுப்பதாக நினைத்து பேசுகிறார். காலம் தான் இந்தக்காயத்தை ஆற்ற முடியும் -ஆஞ்சநேயா என்று உள்ளூர பிரார்த்தித்தாள்

என்ன ஆஞ்சநேயரை வணங்கியாச்சா? -ராமசாமி .        சரி அப்படியே எழுது என்று சொன்னார்.

ராமசாமி சொல்ல சொல்ல சுந்தரி எழுதினாள் . ஹலோ அப்படி எழுதாத லிஸ்ட் மாதிரி ஒன்றின் கீழ் ஒன்றாக எழுது என்றார். மள மள என்று மந்திரம் போல் சொல்லிக்கொன்டே வந்தார். சுமார் 40 ஐட்டங்கள்- வரிசையாக. அத்தனையும் கல்யாண ஏற்பாடுகள் குறித்தது. இதில் முடிந்ததை எல்லாம் டிக் அடி என்றார் . சுமார் 28, 29 நிறைவடைந்திருந்தது.

தொடரும்

நன்றி

அன்பன் ராமன் .

 

No comments:

Post a Comment

TEACHER BEYOND YOUR IMAGE-23

  TEACHER BEYOND YOUR IMAGE-23 ஆசிரியர் - உங்கள் பிம்பத்தை தாண்டி-23 அன்பர்களே இதுகாறும் ஆசிரியப்பணியில் ஆசிரியர் மேற்கொள்ள உகந...