Wednesday, December 11, 2024

SONG FOR SONGSTER ‘PATTU’ -3

 SONG FOR SONGSTER ‘PATTU’ -3           

பாட்டு "பட்டு ஐயங்காரு"க்கு பாட்டு -3

“அதுக்கு வேண்டிய தமிழ் பாண்டித்யம் நமக்கு இல்ல -வஞ்சுளம்  ,

ஓ -நம்படவா வாலிகூட தான் இழுதறார்? நான் இழுதினா என்ன?

வஞ்சுளம் : எழுதினா ஒண்ணுமில்லை

இதோ பாருங்கோ கொடுத்ததெல்லாம் கொடுத்தான் னு வாலி எழுதியிருக்கார் தொடர்ந்து எழுதுங்கோ பாப்போம்

 கொடுத்ததெல்லாம் கொடுத்தான்

கொடுத்ததையே எடுத்தான்

    போறுமா என்றார் பட்டு . கஷ்டம் கஷ்டம் என்று வெறித்துப்பார்த்தாள் வஞ்சுளம் , ஏதாவது இருக்கா கொடுத்ததையே எடுத்தான் னு எழுதுவேன் னு பெருமை வேற. என்ன அர்த்தம்?

போடி அசடே   கொடுத்ததெல்லாம் கொடுத்தான்

கொடுத்ததையே எடுத்தான்  அப்பிடீன்னா பெருமாள் தான் ஜீவன் கொடுத்தார் அவர்தான் பிராணனை எடுக்கறார் . இல்லையா பின்ன ? என்றார் பட்டு. இப்படி எழுதினா, கதவை சாத்திண்டு நன்னா ஒதைச்சுடுவான் , கொடுத்ததையே எடுத்தான் னு   எம் ஜி ஆரை பத்திப்பாடலாமா , ஒன்னும் தெரியாது பாட்டெழுதறேன் -இல்ல இல்ல சாஹித்யம் இழுதறேன் னு ஜம்பம்.அதெல்லாம் marketting பண்ண முடியாது        

பட்டு : ஏன் நம்ப பாட்டெழுத போகக்கூடாது னு சொன்ன?

இப்பவும் சொல்றேன் " நம்ப போகக்கூடாது"-  வஞ்சுளம்

பட்டு -"எழுதினா ஒண்ணுமில்லை" னு நீ தானே அப்ப சொன்னே ?

ஆமாம் எழுதினா ஒண்ணுமில்லை - பைசாக்கு பிரயோஜனம் இல்லைனு -ஒண்ணுமில்லை னு சொன்னேன் அது புரியல்லையா? --வஞ்சுளம்

வஞ்சுளம் "இதுல வாலியை வேற இழுக்கறேள்".   அவர் [வாலி] சீரங்கத்துல சுவாமிநாத தேசிகர் , புலவர் சேதுமாணிக்கம் , இவாகிட்ட தமிழ் படிச்சவர். நீங்க எங்கயோ நீடாமங்கலம் அலமேலுமாமிகிட்ட சமஸ்க்ரிதம் படிச்சுட்டு , வாலி யோட comparison , கண்ணதாசன் பாட்ட திருத்துவேன் னு பெருமை வேற".

இனிமே அந்தப்பக்கம் போனா,கார் தரமாட்டா நடந்து தான் வரணும்."   விடிஞ்சுடுத்து போய் தர்ப்பணம் பண்ணுங்கோ, அதோட சினிமால பாட்டெழுதரத்துக்கும் சேத்து பண்ணுங்கோ    என்று கோடாலித்தலையுடன் அமாவாசை தீர்த்தமாட புறப்பட்டாள்.

பாட்டுக்கு அலையாமல்  இரும் என்பது போல் பட்டுக்கு, பட் பட்டென்று  அறையாத குறையாக பாட்டு விட்டாள் வஞ்சுளம் என்ற மிஸஸ் பட்டு. @ வஞ்சுளம் பட்டாபி .

பட்டாபி கொட்டாவி விட்டுக்கொண்டிருக்கிறார்.

நன்றி அன்பன் ராமன்

          ANNOUNCEMENT . “பாடலை உணர்வோம்

பாடலை உணர்வோம் என்ற புதிய அமைப்பிற்கு ஆதரவினை [yes / no வடிவில் ]  தெரிவிக்குமாறு நான் வைத்த வேண்டுகோளினை செவி மடுத்து கருத்து தெரிவித்தோர் மற்றும் வாய் வழி ஒப்புதல் கொடுத்தோர் எண்ணிக்கை மொத்தம் 9 [55 பேர் BLOG பதிவுகளை அன்றாடம் பெறுவோர் ] 9/55 என்ன விழுக்காடு எனில் சுமார் 17% மீதி 83% அன்பர்களுக்கு விருப்பம் இல்லை என்பதே எனது புரிதல்.

எனவே விருப்பம் இல்லாதோருக்கு தொடர்ந்து தொல்லை தர எனக்கும் விருப்பம் இல்லை.

எனவே கருத்து தெரிவிக்காத யாருக்கும் "பாடலை உணர்வோம் " பதிவு தொடர்ந்து வரப்போவதில்லை .

கருத்து தெரிவித்தோர் அனைவருக்கும் என் நன்றி.

நன்றி அன்பன் ராமன்


2 comments:

  1. "தொடர வேண்டும்" என்று கருத்து தெரிவித்தவர்கள் சார்பாகவும், "தொடர வேண்டும்" என நினைத்தாலும் அக்கருத்தை பதிவிட இயலாதவர்கள் சார்பாகவும் எனது வேண்டுகோள்:
    "தயவுசெய்து தொடரவும்."

    ReplyDelete

SWEET FLAG

  SWEET FLAG   Acorus calamus [Tam: vasambu ]  A herb that grows to about 2 feet and has prominent leaves   Vacha ( Acorus calamus  L...