ANGER AND EGO -8
கொந்தளிப்பும் அகம்பாவமும்-8
SEEKING- FEED-BACK
கருத்து கோரி பெறுதல்
இது ஒரு மனித செயல்பாடு குறித்த அளவீட்டு முறை. கிட்டத்தட்ட அனைத்து துறைகளிலும்
FEED BACK என்ற
கருத்துக்கோரல் ஒரு செயல்வடிவாகவே உருவெடுத்து வருகிறது, எனவே இதில் உளவியல் குறித்த பண்புகளை முறையாக ஆய்ந்திட/ அறிந்திட உகந்த ஒரு நிலைப்பாடு என்று பன்னாட்டு தொழில் நிறுவனங்கள் FEED BACK தகவல்;களுக்கு உயர்ந்த முக்கியத்துவம் தந்து வருகின்றன.
அதன்
தகவல்களை
NUMERICAL DATA , / விழுக்காடு என்ற [%] தகவலாக வேண்டுகின்றன..
கருத்து கேட்பில் .சில நுணுக்கங்கள் பின்பற்றுதல் அவசியம் . எப்படி இருந்தது? என்றால் நன்றாக இருந்தது என்று பொய்யாக சொல்லி ஏமாற்றுவர். மாறாக ஒரு குறிப்பிட்ட அம்சம் குறித்துக்கேட்டால் அநேகமாக உண்மை வெளிப்படும் . உதாரணம் "நான் வேகமாக பேசிவிட்டோனோ?" எனில், இல்லையே சரியாகத்தான் இருந்தது என்றோ, ஆமாம் சற்று வேகம் தான் , புது மெம்பர்களுக்கு கடினம் தான் என்று விடை வரும்.
இது போல் குறிப்பிட்ட பண்புகள் சார்ந்த தம்பட்ட நோக்கம் இல்லாத கேள்விகள் சரியான தெளிவைத்தரும்.
கேள்வியே
பிழை
எனில்
விடைகளும்
பொய்யுரை
தாங்கி
வரும்
. உண்மை
உணர
நினைத்தால்
கேள்வியிலே
யே அதை முன்னிறுத்தவேண்டும். விடைகளை ஊன்றிப்படித்து , குறிப்பெடுத்து , நமது செயல் பாடுகளை மாற்றியமைத்துக்கொண்டே வந்தால் , வெற்றியும் , அதன் மகிழ்ச்சியும் கைகூடும்.
இவ்வாறு குறை களைதல் என்ற பாதையில் பயணித்தால் ஈகோ மடியும், பண்பான சொல்லும் செயலும் நமது அடையாளங்கள் என்ற நிலை தோன்றும். ஈகோவை விட்டொழித்தால்
நற்பண்புகளும்
மன
அமைதியும் நமதே.
SUSTAINING HUMILITY
தன்னட க்கம் பற்றுதல் :
இது சற்று கடினமான நடைமுறை எனினும் , இதை நிர்வகித்தால், பலரும் உங்கள் மீது உயர் கௌரவமும் அன்பும் பாராட்டுவர். துவக்கத்தில் இவனு [ளு] க்கு , ஒன்றும் தெரியாது என்று சிலர் குறைத்துமதிப்பிட எண்ணுவர். ஆனால் உங்களின் செயல் திறன் விசாலமான புரிதல் போன்ற பண்புகளை வெவ்வேறு சூழல்களில் எதிர்கொள்ள நேரிடும் போது, அவர்கள் புரிந்துகொள்ளத்தவறியதை , உள்ளூர ஏற்றுக்கொள்வர்..நமது முயற்சியின் நோக்கமே ஈகோ விலக்குதல்- என்றானபின், பிறர் கொள்ளும் தவறான மதிப்பீடுகளை நாம் பொருட்படுத்தவேண்டியதில்லை.
எல்லாம் அறிந்தவர்போல் தன்னடக்கமின்றி இருப்போரை உயர் தகுதியினர்
என்று
மதிப்பிட்டவர்கள், பின்னாளில் , குறைந்தமதிப்பீ டு
செய்யநேர்ந்தால், உங்கள் பிம்பம் சிதைந்து , பெரும் கேலிப்பொருள் ஆவது அதலபாதாள வீழ்ச்சிக்கு இட்டுச்செல்லும். எனவே எப்போதும் தன்னடக்கம் காப்போர் , பிறர் நிலைப்பாடுகள் குறித்து சஞ்சலம் கொள்ளாது இயங்கினால், அவர் எப்போதும் அகம்பாவம் கொள்ளாதவர் என ஏற்கப்படுவது இயல்பு..
தன்னடக்கம் நிரந்தர பண்பாயின், எந்த வித இடையூறும் இன்றி அனைவரும் ஏற்பர் .எனவே நமது சமூக அளவுகோல்களில்
ஏற்ற
இறக்கம்
இன்றி
, சீராக
பயணிக்க
உதவும் .
தன்னடக்கம் பற்றி, அதனை காத்தல்
எளிதன்று. ஏனெனில் மனித மனம் இயல்பாகவே புகழை விரும்பும்.
எனவே, எங்கே தனது புகழ் பேசப்படாது போய்விடுமோ என்ற சுயபச்சாதாபம் காரணமாக, தன புகழ் பற்றி தானே எடுத்துரைக்க
மனம் முற்படும்.
மனிதர்கள் செய்யும் -இமாலயத்தவறு--
இதுவே.
எவ்வளவு நியாயம் இருப்பினும், ஒருவர் தனது புகழை பேச முயன்றால், அது உண்மை என்பதை விட, சுயபுராணம், தற்பெருமை, சுய தம்பட்டம் என்று இழிவாகக்கருதப்படும்.
எளிதில்
பெயரைக்கெடுத்துக்கொள்ளலாம், நற்பெயர் ஈட்டுவதும், காப்பதும், நீண்ட முயற்சியினால் மட்டுமே நிறுவிட இயலும்.
நமது
பெருமைகளே
ஆயினும்,
அதைப்பிறர்
பேசட்டும்
எனும்படி
அமைதி
காத்தால்,
காலப்போக்கில்
அது
பாராட்டுக்குரிய இடத்தை அடையும்.
எனவே தான், ஈகோ எனும் நிலையை தவிர்த்திட, தன்னடக்கம் ஒரு பெரும் காரணி எனில் மிகை அல்ல. இன்னும் பிற செயல் நடைமுறைகள் உள ; அவற்றை பின்னர் காண்போம்
தொடரும்
அன்பன் ராமன்
No comments:
Post a Comment