Sunday, January 19, 2025

G PAY JEEVAA -4

 G  PAY JEEVAA-4                   

ஜீ -பேஜீவா-4

சிறப்பு செருப்பு தயாரிப்பில் பெரும் புகழ் பெற்றான். விடா முயற்சியால் முன்னேறி, தங்கைக்கு நல்ல பையனாகபார்த்து மணம் முடித்து வைத்தான்இப்போது 6 ஆண்டுகள் கழித்து  உயர் நிலை தொழில் முனைவோர் வரிசையில் ஜீவாவும் முக்கிய நபர் ஆனான். 

ஒரு செவ்வாய் அன்று ஒரு தனவந்தர் காரில் இருந்த படியே ஒரு மெடிக்கல் பரிந்துரையுடன் பல் வேறு குறிப்புகளுடன் , நீள  அகல உயர,மென் வடிவில் ஒரு வலதுகால் செருப்புக்கு பிளாஸ்டிக் சர்ஜன் சட்டர்ஜீ கொல்கத்தாவில் இருந்து ப்ரிஸ்க்ரிப்ஷன் கொடுத்திருந்தார்.

அதைப்பார்த்த ஜீவா சார் எனக்கு இங்கிலீஸ் தெரியாது-   .அதுனால இங்க கவர்மெண்ட் ஆஸ்பத்திரி டாக்டர் கிட்ட காட்டி என்ன எது னு தெரிஞ்சுக்கிட்டு என்ன செய்யலாம் னு சொல்றேன் , அந்த பைலை கொடுங்க என்று வாங்கிக்கொண்டு சைக்கிளில் பறந்தான் 40 நிமிடத்தில் திரும்பி வந்தான். சார் செருப்பு அளவு, உயரம் , எங்கெங்கே ஸ்பாஞ் , பஞ்சு வெக்கணும் மொத்தவெய்ட் இவ்வளவு, கால் வலிக்காம அமைப்புக்கு என்னென்ன செய்யணும் னு எழுதியிருக்கு.  அதே படி  செய்ய 20-25 நாள் ஆகும் சுமார் 6000/- ரூ ஆகும்.

செல்வந்தர் அவ்வளவா ? குறையாதா  என்றார்.. சார் எல்லா பொருளும் வாங்கிகிட்டு வந்து கொடுங்க ,கூலியா 1500/- ரூவா குடுங்க என்றான் ஜீவா, இதெல்லாம் நான் எங்க போய் வாங்கறது. நீயே வாங்கி செஞ்சு குடு என்றார். சார் நீங்க ரூபாய் தந்தாதான் பொருள் வாங்கி செய்ய முடியும் என்றான் ஜீவா.    G Pay   அட்டையை காட்டினான். தனவந்தர்  4500/- ரூபாயை பணமாகவே கொடுத்தார். சரி சார் 25 நாள் போனதும் வாங்க ட்ரையல் பாத்துட்டு பைனல் பண்ணிரலாம் 2 மணி நேரம் ஆவும் என்றான் ஜீவா..

தனவந்தர் பெரிய வணக்கம் போட்டு காரில் பறந்தார்

ஜீவாவின் மனதில் பிடாதி  அம்மன் வந்து போனாள்.

குறித்த நாளுக்கு முதல் நாள் தனவந்தர் வந்தார் . சார் நாளைக்கு தானே ட்ரையல் , இன்னைக்கே ? என்று இழுத்தான் ஜீவா. இல்ல ஞாபகப்படுத்திடலாம் னு வந்தேன் என்றார் தனவந்தர்.

எனக்கு எதுவும் மறக்காது , உங்களுக்கும் மறக்காது சார் என்று பொடிவைத்தான் ஜீவா. தனவந்தர் லேசாக அதிர்ந்தார். சரி நாளை வருகிறேன் என்று காரை புறப்படச்சொல்லி விர் ரென்று மறைந்தார்

மறுநாள் காலை 10.30க்கு வந்தார் தனவந்தர்  ட்ரையல் பாத்துரலாம் உள்ள வாங்க என்று ஷோரூமிற்குள் அழைத்தான்.  தனவந்தர் இறங்கமுடியாமல் இறங்கி வலது கால் பூமியில் இருந்து 5 அங்குல உயரத்தில் ஊசலாடி நிற்க, ட்ரைவர் அவரை தாங்கி பிடிக்க மெல்ல மிகுந்த முயற்சியில் ஒருவாறு உள்ளே வந்தார்.

தொடரும்

2 comments:

  1. இவர்தான் "அந்த " செல்வந்தரோ?

    ReplyDelete
  2. ஜீவாவின் வார்த்தைகளை பார்க்கும்போது அதே அந்த பழைய செல்வந்தர் என்றுதான் தோன்றுகிறது.

    ReplyDelete

MSV PROFILE 8

MSV PROFILE 8 எம் எஸ் வி    ஒரு பார்வை - பதிவு 8 இன்றைய பதிவில் திரு   எம்   எஸ்வி அவர் களின் இசையில் காணப்படும் கர்நாடக இச...