Wednesday, March 12, 2025

A BHIMSINGH -4

 A BHIMSINGH -4

A-பீம்சிங்-4

கொடி அசைந்ததும் [பார்த்தால் பசி தீரும் -1963] கண்ணதாசன் , விஸ்வநாதன் ராமமூர்த்தி ,      குரல்கள்                             

 பி சுசீலா டி எம் எஸ்

கேள்விகளாலேயே அமைந்த பாடல்கள் பழைய படங்களில் இடம் பெருவதுண்டு . அதில் ஒன்று இது. எந்தக்கேள்விக்கும் விடை இல்லை என்பதை விட , விடை தேவை இல்லை என்பதே பொருத்தம். இப்பாடல்கள் தொடர்ந்து மனதில் வட்டமிடக்காரணம் அவற்றின் ஆர்ப்பாட்டமில்லாத நளின ட்யூன் மற்றும் இயல்பான காட்சி அமைப்பும். தர்க்க ரீதியான உரையாடல் போல் அமைந்த காட்சி, மற்றும் இருவரின் இணக்கமான நட்பு.

காலை விந்தி விந்தி நடந்து வரும் சிவாஜி [அடுத்த பாடலிலும் அதே நடை -எவ்வளவு தொழில் உணர்வு?] என மனதை விட்டு அகலாத காட்சி நடை நடிப்பு இசை குரல்களில் பாவம் என பன்முக அடையாளம் ரசிக்க இணைப்பு

https://www.google.com/search?q=paarthaal+pasi+theerum+kodi+asaindhadhum+video+song+download&newwindow=1&sca_esv=b6effe6b46dbd085&sxsrf=AHTn8zr_80b3qpJXtkzDyrFp8NO4K9xRQg%3A1740906257657&ei=ER_EZ43jJ_6Z4-EPxsuayQg&oq=pAARTHAAL+PASI+THEERUM+KODI+ASAINDHADHUM+VIDEO+SONG+&gs_lp=Egxnd3Mtd2l6LXNlcnAiNHBBQVJUSEFBTCBQQVNJIFRIRUVSVU0gS09ESSBBU0FJTkRIQURIVU0gVklERU8gU09ORyAqAggAMgcQIRigARgKMgcQIRigARgKMgcQIRigARgKSM74AVAAWPPdAXAAeACQAQ PARTHAL PASI 1963 KD VR TMS PS

யாருக்கு மாப்பிள்ளை யாரோ [பார்த்தால் பசி தீரும் -1963] கண்ணதாசன் , விஸ்வநாதன் ராமமூர்த்தி , சுசீலா

எவ்வளவு நேத்தியான பாடல் , ஓங்கி ஒலித்த குதூகலக்குரல், ஹஹ்ஹ ஹஹ்ஹ ஓஹஹோஹோ என்று சுழன்றடிக்கும் குறலு க்கென்றே தொகுக்கப்பட்ட இசை வடிவங்கள். குதூகலிக்க வென்றே யாத்த சொற்கள் ஆங்காங்கே தொடர்ந்து வர முத்தாய்ப்பாய் "ஊரறிய மாலை விடுவாரோ, இல்லை ஓடி விட எண்ண மிடுவாரோ"

என்ற பெண்ணின் உள்ளார்ந்த அச்சத்தை தெளிவாக உணர்த்திய கவி , இசையால் உயர்த்திய எம் எஸ் வி,    டி கே ஆர் , குரலால் வருடிய சுசீலா அனைத்தையும் வெகுவாக ரசிக்க இணைப்பு இதோ

https://www.google.com/search?q=paarthaal+pasi+theerumYAARUKKU+MAPPILLAI+YAARO+video+song+download&newwindow=1&sca_esv=b6effe6b46dbd085&sxsrf=AHTn8zoJjfwkdKAA4Knt5BmcM1zjWmWqcQ%3A1740906728912&ei=6CDEZ9KyN_Da4-EPj5iL4AY&ved=0ahUKEwjSxqf5huuLAxVw7TgGHQ_MAmwQ4dUDCBA&oq=paarthaal+pasi+theerumYAARUKKU+MAPPILLAI+YAARO+video+ KD VR PS

வட்டவட்ட பாறையிலே  [பழனி -1965] கண்ணதாசன் விஸ்வநாதன் ராமமூர்த்தி சீர்காழி கோவிந்தராஜன் பி சுசீலா

கிராமிய பாணியில் அமைந்த  சிறுகூடல்பட்டியார் [கவியரசர்] எழுதிய சிறு ஊடல் பாடல்.

யாரோ தந்த சேலையை அணிந்துள்ளாள் காதலி என்று பொங்கும் நாயகன் . சிறிது நேரம் அவன் திணறட்டும் என்று என்னை தன்னோடு அணைத்து அவன் "வாங்கி வந்த சேலை இது" என்று அவன் வயிற்றைக்கலக்கியவள் பின்னர் இறுதி சரணத்தில் அவன் யார் என்பதை "மாமா உன் பெயர் எப்படிச்சொல்ல? " என்று அவனை வீழ்த்தி விட்ட பெண்.

இசையில் தேர்ந்த கிராமிய மனம் /மணம் /மானம் எல்லாம் 1965 லேயே ஓங்கி ஒலித்தது எப்படி மறந்தனர் நம் மாந்தர்.? கேட்டு ரசிக்க இணைப்பு இதோ 

https://www.google.com/search?q=movie+pazhani+vatta+vatta+paaraiyile+video+song+download&newwindow=1&sca_esv=b6effe6b46dbd085&sxsrf=AHTn8zo0KhHS1fzQvO42rv2g0lzBmuZr8g%3A1740905149355&ei=vRrEZ6a0FbaZ4-EP8MLGSA&oq=MOVIE+PAZHANI+VATTA+VATTA+PAARAIYILE+VIDEO+SONG+&gs_lp=Egxnd3Mtd2l6LXNlcnAiME1PVklFIFBBWkhBTkkgVkFUVEEgVkFUVEEgUEFBUkFJWUlMRSBWSURFTyBTT05HICoCCAAyBxAhGKABGAoyBxAhGKABGAoyBxAhGKABGApI9NU 1965 KD SG PS V R

வளரும்

அன்பன்  ராமன்

No comments:

Post a Comment

A BHIMSINGH -4

  A BHIMSINGH -4 A - பீம்சிங்-4 கொடி அசைந்ததும் [ பார்த்தால் பசி தீரும் -1963] கண்ணதாசன் , விஸ்வநாதன் ராமமூர்த்தி ,       குரல்க...