Thursday, March 13, 2025

P B SRINIVAS-6

 P B SRINIVAS-6

 பி பி ஸ்ரீனிவாஸ் -6

முள்ளில் ரோஜா [கலைக்கோயில் -1964] கண்ணதாசன் விஸ்வநாதன் ராமமூர்த்தி , பி பி ஸ்ரீனிவாஸ் , எல் ஆர் ஈஸ்வரி .

இது ஒரு அட்டகாசமான பாடல் . ஆம் சொல்வரிசையில், கிறக்கம் தரும் வர்ணனை , துள்ளல் ட்யூன் , கேட்பவரை கட்டிப்போடும் பெண் குரல், தன் நிலை மறைந்த போதை ஆடவன் இவை ஒரு புறம் இருக்க, இசையின் விளக்கவொண்ணாத கம்பீரம், கருவிகளின் வெகு விரைவான மீ ட்டல், பாய்ந்து சரிந்து ஓடும் வயலின்கூட்டம், சமகாலத்தில் ஒலிக்கும் கிட்டார் -ட்ரம் , மற்றும் நாயகன் ஒரு வார்த்தைகூடப்பாடாமலே , பல்லவியை மட்டும் அவ்வப்போது நா குழற பாடி [பி பி ஸ்ரீனிவாஸ் ] ஸ்வரம் மட்டுமே நாக்குழற பாடும் அதீத இசை /குரல் ஆளுமை. இவ்வனைத்தையும் எதைப்பார்ப்பது கேட்பது கருவிகள் எந்த வரிசையில் ஒலிக்கின்றன என்று தடுமாறும் நிலை கேட்பவருக்கு. இத்தனைக்கும் இடையில் கிட்டார் தரும் முறுக்கேற்றும் ஒலி [பிலிப்]  நஞ்சப்பாவின் குழல் நம்மை பாடலுக்குள் இழுத்துச்செல்லும் ஆகர்ஷண ஒலி . கண்ணதாசன் வெளிப்படுத்திய சொல் நளினம் , மேலும் ஒருவினாடி இடைவெளி இன்றி புயலும் சுனாமியும்    ஏக காலத்தில் நிகழ்ந்தது போல் புரட்டிப்போடும் இசை அமைப்பு. பாடல் முடிந்ததும் பெரு மழை பெய்து ஓய்ந்த நிலைபோல் மனம் தாக்குண்டு நிற்பது உறுதி.. மதுவிடமும் மாதுவிடமும் மயங்கிய நாயகன் தொழில் தர்மம் விலகாமல் கர்னாடக இசை மரபில் ஸ்வரம் மட்டுமே அதுவும் மேற்கத்திய இசைக்கோர்வைகளுக்கு அமைத்த எம் எஸ் வியின் சாதுர்யம் மகத்தானது.  

[இதே போன்ற சூழலில் அமைந்த வேறொரு பாடலில் நிகழ்ந்தஅமைப்பைப்பார்த்தாலே புரியும் எம் எஸ் வியின் உயரம் என்ன என்று]. இதுபோன்ற பாடல்களில் ஈஸ்வரியுடன் போட்டிபோட,  ஈஸ்வரியால் மட்டுமே இயலும். நெடிய பாடல் ஆழ்ந்து மனம் செலுத்திப்பாடலை கேளுங்கள் உழைப்பின் மகத்துவம் விளங்கும்

இப்பாடலை எடுத்துப்பாட எந்த இசைக்குழுவும் துணிந்ததில்லை. போதைப்பாடல்  எனவே பாடலை எவ்வளவு குழப்பமான அமைப்பை கொடுத்து மனதை மயக்கினர் விஸ்வநாதன் ராமமூர்த்தி , 60 ஆண்டுகள் முன்னர் 1964இல் .

MULLIL ROJAA 

kalaikoil,1964 kd vr LRE PBS எம் எஸ் வியின் முன்னுரையுடன் கேட்டு ரசிக்க

https://www.google.com/search?q=mullil+roja+kalloorum+roja++song+download&newwindow=1&sca_esv=04bc5e5999945e04&sxsrf=AHTn8zpEmzwrLgq2LGX8ush9wJh9DxPHFw%3A1741741077427&ei=FdzQZ4HkGb2WseMP3uv-mAg&ved=0ahUKEwjBwteRq4OMAxU9S2wGHd61H4MQ4dUDCBA&oq=mullil+roja+kalloorum+roja++song+download&gs_lp=Egxnd3Mtd2l6LXNlcnAiKW11bGxpbCByb2phIGthbGxvb3J1bSByb2phICBzb25nIGRvd25sb2FkMggQIRigARjDBDIIECEYoAEYwwRI4XRQ9QVY6FdwAXgAkAEAmAGxAaABzQ-qAQQzLjE0uAEMyAEA-AEBmAISoALWEMICBxAAGLADGB7CAgsQABiABBiwAxiiB

இப்பாடலின் ஆக்கத்திலும் அமைப்பிலும் இருக்கும் எண்ணற்ற  இசைக்கோலங்கள் 60 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் சினிமாவில் இசை பெற்றிருந்த மேன்மையை பறைசாற்றும் வகையில் இருந்ததை சுபஸ்ரீ அவர்களின் விளக்கத்துடன் கேட்டு ரசிக் இணைப்பு இதோ 

https://www.google.com/search?q=qfr+episode+321+full+episode&oq=QFR+EPISODE+321&gs_lcrp=EgZjaHJvbWUqBwgCECEYoAEyBggAEEUYOTIHCAEQIRigATIHCAIQIRigATIHCAMQIRiPAtIBCTE2OTEyajBqNKgCALACAQ&sourceid=chrome&ie=UTF-8#fpstate=ive&vld=cid:1cd95052,vid:6SAmtUv1AjY,st:0 qfr episode 321

யாரோடும்பேசக்கூடாது [ஊட்டி வரை உறவு 1967 ] கண்ணதாசன் , எம் எஸ் விஸ்வநாதன்,  குரல்கள் பி பி ஸ்ரீனிவாஸ் , எல் ஆர் ஈஸ்வரி  

படத்தில் இடம்பெறாத ஆனால் மக்கள் மனதில் இடம் பிடித்த பாடல்களில் இதுவும் உண்டு. ஸ்ரீதர் படங்களில் பாடல் நீக்கப்படுவது பல படங்களுக்கு நிகழ்ந்துள்ளதை நாம் அறிவோம். அவை அனைத்துமே வெற்றிப்பாடல்கள் என்பதே கூடுதல் செய்தி. இதுவும் காதலர்கள் ஒருவருக்கு ஒருவர் நிபந்தனை விதிக்கும்   அக்கால பாடல்கள்  தர்மத்தை ஒட்டி எழுதப்பட்டுள்ளதை காணலாம். வெகு நேர்த்தியான பாடல், இசை தாளம் என பல சிறப்புகள் கொண்ட பாடல் இணைப்பு இதோ

https://www.youtube.com/watch?v=iAW5Fl8UyJk yaarodum pesakkoodaadhu  lre pbs

நான் குறிப்பிட்ட

மக்கள் மனதில் இடம் கொண்ட பாடல் என்பதால், மேடை நிகழ்ச்சியில் இப்பாடல் இடம் பெற்றுள்ளதை இணைத்துள்ளேன். கேட்டு மகிழ இணைப்பு இதோ 

https://www.youtube.com/watch?v=9z15finlvUg yaarodum live jayasri

கண்ணிரண்டும் மின்ன மின்ன [ஆண்டவன் கட்டளை 1964] கண்ணதாசன் விஸ்வநாதன் ராமமூர்த்தி , குரல்கள் பிபி ஸ்ரீனிவாஸ் , எல் ஆர் ஈஸ்வரி

இது ஒரு வெளிப்புற படப்பிடிப்பில் அமைந்த காதல் காட்சி . எனினும் சர்வ அலட்சியமாக பியானோ வை உபயோகித்து அந்நாளி லேயே இசையில் புது முயற்சி நடந்துள்ளதை அறியலாம். சிறிதும் விலகாத ரிதம் மற்றும் நேர்த்தியாக பயணிக்கும் குரல்கள் என பாடல் மாறுபட்ட டூயட் வகையினது . வி எம் ராஜன் புஷ்பலதா [சமீபத்தில் மறைந்துவிட்டார்] இணை பங்குபெற்ற வெற்றிப்பாடல்களில் முக்கியமானது இப்பாடல். கேட்டு மகிழ இணைப்பு இதோ

https://www.youtube.com/watch?v=tFFxqr8kKyQ KANNIRANDUM MINNA MINNA

இப்பாடலை ஏன் பேசவேண்டியுள்ளது? சுபஸ்ரீ அவர்கள் தரும் தகவல்களை உள்வாங்கி புரிந்து கொண்டால் மெல்லிசையில் ஏதேதோ வேள்விகள் எப்போதோ அரங்கேற்றப்பட்டுவிட்டதை உணரலாம் . பாடலுக்கு இணைப்பு இதோ  https://www.youtube.com/watch?v=3ZEpe-Dy5Ag qfr episode 467

தொடரும்                                                     அன்பன் ராமன்

No comments:

Post a Comment

SIBLING EMOTION -3

  SIBLING EMOTION -3 உடன் பிறப்புகள் - உணர்ச்சிகள்-3 அன்னான் என்னடா தம்பி என்னடா [பழனி- `1965] கண்ணதாசன் விஸ்வாநரதன்-ராமமூர்த்தி , டி எ...