Tuesday, March 11, 2025

LET US PERCEIVE THE SONG -13

 LET US PERCEIVE THE SONG -13                

பாடலை உணர்வோம்-13

சிலை எடுத்தான் ஒரு [சர்வர் சுந்தரம் -1964] கண்ணதாசன், விஸ்வநாதன் ராமமூர்த்தி , பி சுசீலா குழுவினர்.

சென்ற பதிவில் நான் தெரிவித்திருந்த சில கருத்துகளையும் விளக்கி , பாடலின் போக்கினையும்  விளக்க முயலுகிறேன். நான் குறிப்பிடும் தகவல்களை கண்ணை அகல விரித்து காட்சிக்குள் கவனியுங்கள்.

1  உச்சி வெயிலில் படப்பிடிப்பு செய்து உருவாக்கிய  படம். [எந்த நடிகைக்கும் நிழல் நீண்டு படராமல் , அவரவர் காலடியில் இருப்பதே உச்சிவெயில் சூரியனுக்கு சான்று.]

 2 உச்சிவெயிலில் மூக்கின் நிழல் வாய் மீதும் , தலையின் நிழல் கண்ணை மறைத்தும் இருக்கும். தெளிவான கண்கள் தோன்றும்படி reflector என்ற பிரதிபலிப்பு தகடுகளை நன்கு பயன்படுத்தி முகத்தில் நிழல் இல்லாமல் கவனமாக ஒளிப்பதிவு செய்துள்ளனர்.

3 உச்சி வெயில் நேரத்தில் கடற்கரைகளில் வெளிச்சமும் வெப்பமும் மிக அதிகமாக இருக்கும்.; மேலும் வானும் , நிலத்தில் உள்ள மண்ணும் மிகவெளிச்சமாக கண்ணை கூசும் . அந்த நிலையில் ஒட்டுமொத்த ஒளியை   கட்டுப்படுத்த ஒரே பொதுவான ND FILTER [Neutral density filter] பொருத்தினால் ஒளியின் தாக்கம் மட்டுப்படுத்தப்பட்டு காட்சி  ரசிக்கும் படி இருக்கும்.

நீல நிற ப்பகுதிகளை அடக்கிட yellow filter வழியே காட்சியை பதிவிடுவர்.அப்போது நீல வானமும் கடலின் நீல நீரும் கருமை பெறும், மேகங்கள் பளிச்சென காட்சி தரும்.

இவை ஒளிப்பதிவுக்குழுவினரின் கவலை.

நடன இயக்குனரின் மேற்பார்வையில் பெண்கள் நடனமாட படப்பிடிப்பு செய்வர்.

சரி பாடலுக்கு வருவோம்.

பாடலே இசை ஆன விந்தை இப்பாடலின் சிறப்பு

பல்லவியின் சொல்லாடலுக்கென பாடலை உளியின் ஒலியுடன் துவங்கியுள்ளார் எம் எஸ் வி. வெகு நேர்த்தியான  குழைவுடன் பாடல் பயணிக்க, இசைக்கருவிகளின் கூட்டியக்கம் வேறெங்கும் நாம் அறிந்திடாத வகை பயணம். கோரஸ் குரல்கள் லல் லல லல்  லல் ல லல்  என்று பல்லவியுடன் ஒலிக்க அதே ஒலி அமைப்புகளில் கருவிகளும் இசைக்க நாம் உணர்வது கிட்டார், மாண்டலின், ட்ரம் போங்கோ நேர்த்தியான தொகுப்பில். இவை, பல்லவியை தொடர்ந்து வரக்காணலாம். 

ஆனால், ஒவ்வொரு சரணமும் மீண்டும் இசைக்கருவிகளின் வாயிலாக இசைக்கப்பெற்ற மாறுபட்ட இசை அமைப்பு. ஆம் இடை இசை என்று வெவ்வேறு அமைப்புகளில் இல்லாமல் , ஒவ்வொரு சரணமும் இசைக்கருவிகளின் ஒலியில் ஒலிக்க,  மிக சுகமான அனுபவம் இப்பாடல். பல இடங்களில், கோரஸ் குரல்களின் அமைப்பிலேயே கருவிகளை இசைக்க வைத்து அற்புதமான பாடலைப்படைத்துள்ளனர் எம் எஸ் வி குழுவினர்.     

பாடலுக்கு பாடல் தரம் குன்றா இசையையும் வெற்றியையும் வழங்க, இசைக்குழுவினர் எப்போதும் ஆயுள் முழுவதும் அயராது உழைப்பர்.  பாடலின் அம்சங்களை கூர்ந்து கவனித்து,இன்புறுங்கள். https://www.youtube.com/watch?v=2ZnWq_yalFU silai eduththaan

பிறிதொரு பாடலுடன் பின்னர் தொடர்வோம்

நன்றி அன்பன் ராமன்

1 comment:

SIBLING EMOTION -3

  SIBLING EMOTION -3 உடன் பிறப்புகள் - உணர்ச்சிகள்-3 அன்னான் என்னடா தம்பி என்னடா [பழனி- `1965] கண்ணதாசன் விஸ்வாநரதன்-ராமமூர்த்தி , டி எ...