RENGAA VENDAAM -2
ரெங்கா வேண்டாம்...
2
பாக்கட்டில் தடித்த பிசுக்கேறிய புத்தகம் . மந்திரவாதி போல் தோற்றம் . இடது கையில்?
அந்த ஆள் தெளிவாகவும் நிதானமாகவும் தெரிந்தார்; ஆனால் முக அலங்கார அமைப்புகளின் உதவியும் சுழன்று சுழன்று பார்க்கும் கண்ணும் அவரை, மந்திரவாதி' என்றே அடையாளப்படுத்தின.
. வெளியே வந்துவிட்ட பின் இன்னதான் சொல்கிறார் என்று அனைவருக்கும் ஆவல்.
“ரெங்கசாமி--- நல்லாருக்கீங்களா”? - ரெங்கராஜு
ரங்கசாமி சற்றே அ திர்ந்தார்.
--"நீ [ங்க ] யாரு?
“ஏய் என்னை தெரியலையா ? நான்தான் ரெங்கராஜு”
ரெங்கராஜு வா ? புரியலையே.
ரெங்கசாமியும் ரெங்கராஜுவும் பள்ளியில் க்ளாஸ்மேட்ஸ் பலருடன் பல ஆண்டுகள் படித்ததில் ரெங்கசாமிக்கு, ரெங்கராஜுவை முற்றாக மறந்துவிட்டிருந்தது. ஆனால் ரெங்கராஜூவுக்கு எதுவும் மறக்கவில்லை
ரெங்கராஜு பேசினார்
உன் வேலையை என்கிட்டயே காட்டுறியே ,
ஊக்கும் அதெல்லாம் வேணாம் இன்னைக்கி காலைல 8 மணிக்குள்ளாற உன்னையும் [உங்க வீட்டாரையும்] கண்டிப்பா பார்க்க சொல்லி பகவதி உத்தரவு ஆமாம் என்று சொல்லியபடியே இடது கையை கீழே இறக்கினார் ரெங்கராஜு .
இடக்கையில் ஒரு கிளி க்கூண்டு அதில் 3 அறை , 2 கிளிகள் .
பேசிக்கொண்டே திண்ணையில் கையில் இருந்த ஜமுக்காளத்தை விரித்து அதன் அருகில் பாயை விரித்து ,
அதன் ஒரு முனையில் கிளிக்கூண்டை வைத்து விட்டு கிழக்கு நோக்கி திரும்பி , இருகைகளையும் கூப்பியபடியே பகவதி உச்சாடனம் செய்தார் .
ரெங்கசாமிக்கு ஆத்திரம் , இவனை அடித்து விரட்ட வேண்டும் என்று உள்ளூர கருவிக்கொண்டு வீட்டினுள் நுழைந்து எதையாவது [குச்சி] எடுக்கலாம் என்று திரும்ப முயல , கண்ணை மூடிக்கொண்டே ஜபித்துக்கொண்டிருந்த ரெங்கராஜு,கண்ணை திறக்காமல் "ஊஹூம் அதெல்லாம் வேலைக்காவாது பேசாம நில்லுங்க , பகவதி சொல்றத கேட்டுக்கிட்டிருக்கேன் உங்களுக்கு என்ன என்ன உதவி வேணும் னு அம்மா சொல்லிக்கிட்டிருக்கு , எனக்கு இல்லாட்டி னும் பகவதி அம்மாவ மீறாதீங்க தெய்வக்குத்தம் வந்திரும்" என்று மீண்டும் முதலில் இருந்து உச்சாடனம் தொடங்கினான்.
3 நிமிடத்தில் கண்திறந்து அனைவருக்கும் கை கூப்பி , ஒரு செம்பு தண்ணீர் குடுங்க என்று வாங்கி அதில் மஞ்சள் பொடி சேர்த்து இடது கையில் வைத்துக்கொண்டு , தம்பி வாங்க என்று சந்தானத்தை அழைத்து அவனது இடது தோளை வலது கையால் பிடித்துக்கொண்டு , இருவரும் வாசலில் இருந்த கோலத்தை மும்முறை சுற்றி வந்து , தம்பி உள்ளே போயிருங்க என்று சொல்லி அனுப்பி விட்டு கிழக்கு நோக்கி வானைப்பார்த்தபடி பகவதி-மித்திரர் ஸ்தோத்திரம் சொல்லி மஞ்சள் நீரை கோலத்தில் நடுவேமெல்ல ஊற்றி அது கொஞ்சம் கொஞ்சமாக பூமிக்குள் போகும் படி நிதானமாக ஊற்றிவிட்டு , வடக்கிலும் மேற்கிலும் கும்பிட்டான்.
இப்போது தான் முற்றாக கண்ணைத்திறந்து பார்த்து, முண்டாசை அவிழ்த்து கண்ணை துடைத்துவிட்டு , புன்னகை தவழ, சந்தானத்துக்கு பகவதி அருள் பூரணமா இருக்கு., முன்னால தாத்தா வெங்கடாசாரி சாமிக்கு கிடைச்ச அதே அருள் சந்தானத்துக்கு இப்போ கிடைச்சுக்கிட்டுருக்கு என்றான் முண்டாசு ரெங்கராஜு.
ஏய் என்ன வெங்கடாச்சாரி சந்தானம் அது இதுனு அவுத்து விடறியே என்றான் ரங்கசாமி .
அ , அவுத்து விடறேனா ? நான் எங்க அவுத்து விடறேன் --பகவதி சொன்னத அப்பிடியே சொல்றேன். காலையில பிரும்ம முகூர்த்தத்துலி யே பகவதி சொல்லிச்சு இன்னக்கி 8
மணிக்கு ள்ளாற உங்கவீட்டுல போய் என்னைக்கூப்பிடு நான் சொல்றதை சொல்லிட்டு நீ வேற வேலையைப்பாருனு .
அம்மா உத்தரவு.
.
நான் சொன்னா நம்ப மாட்டீங்க, இப்ப பாருங்க 5 விழலைனா நான் திரும்பிப்போயிருவேன் , விழுந்தா அம்மா உத்தரவுப்படி தான் போவேன் .
என்று பாக்கெட்டில் இருந்த சோழிகளை குலுக்கிப்போட்டான்
க்ளாங் என்று சோழிகள் உருண்டு, வந்தது -5 .
நல்லா டபாய்க்கிறியே --5 விழும்படி போட்டு எங்களை ஏமாத்தறியா ?
என்று பொங்கினான் ரங்கசாமி.
அதான் நல்லதுக்கே காலம் இல்ல ,
தம்பி நீ உருட்டு என்று சோழிகளை சிறுவன் சந்தானம் கையில் கொடுக்க மீண்டும் க்ளாங் --5. சிரித்துக்கொண்டே முறைத்தான் ரெங்கராஜு ஓரக்கண்ணால் -சிவனின் ருத்ரம் போல் கண்ணில் சிவந்த ஒளி.
இப்ப நான் குறி சொல்லிட்டு தான் போவணும் . என்று திண்ணையில் அமர்ந்தான் .
ரெங்கசாமி க்கு கோபம் பீறிடுகிறது ,
நொடியில் அடக்குகிறான் ரெங்கராஜு.
நீ ஒன்னும் சொல்ல வேண்டாம் கிளம்பு, பொழுது விடிஞ்சதும் பணம் பிடுங்க வந்துட்ட என்று அதிர்ந்தான் ரெங்கசாமி.
மீண்டும் ஓரப்பார்வை பார்த்தான் ரெங்கராஜு அதே சிவ ஜ்வாலையுடன்
“ரெங்கா வேணாம்” என்றான் [காலையில்
அம்மா சொன்ன அதே 'ரெங்கா வேணாம்']
உங்க பணம் யாருக்கு வேணும் ?
திரும்ப திரும்ப பகவதி கட்டளை னு சொல்றேன் ,
நீங்க ஏதேதோ பேசறீங்க நான் சாதாரண கிளி சோசியன் இல்லை .உங்க தகப்பனார் சாமி வெங்கடா சாரியார் கிட்ட தீச்சை வாங்கித்தான் பகவதி அம்மா உத்தரவுக்கு கட்டுப்பட்டு குறி சொல்றேன். பணத்துக்கு அல்ல . யார் கூப்பிட்டாலும் போய் கிளி வச்சு பாத்து சொல்லமாட்டேன் .
கோமதி அம்மாளுக்கு வெங்கடாச்சாரியின் நினைவு அசைத்தது, அவர் எங்க இருக்கார் ?
என்றாள் . அதை செல்லக்கூடா துனு . உத்தரவு தாயி என்று கும்பிட்டான் .
தாயி பேர் சொல்லுங்க என்றான் ரெங்கராஜு. –‘கோமதி’
ஒரே வினாடியில் சிலை போல ஆனான் ரெங்கராஜு .
சுற்றிலும் பீதி கலந்த அமைதி.
ரெங்கராஜு பாடினான்
வெகுமதியாய் , முழுமதி போல், வந்த கோமதி என்ற பேர் ராசிக்கு நல்ல சீட்டு எடுத்து தாம்மா என் செல்லப்பிள்ளை மதுமதி என்று கூண்டை திறந்தான் ரெங்கராஜு , வெளியே வந்த மதுமதி [கிளி] அனைவரையும் ஒரு பார்வை பார்த்து கீச் என்று ஓங்கி உரக்க ஒலித்தது.. கண்ணில் நீர் பெருக தாயே என்று திண்ணையிலே நீண்டு நெடுஞ்சாண் கடையாக கிழக்கு பார்த்து கும்பிட்டான்
தொடரும் அன்பன் ராமன்
No comments:
Post a Comment