LET US PERCEIVE THE SONG- 20
பாடலை உணர்வோம் -20
இளமை கொலுவிருக்கும் [ஹலோ மிஸ்டர் ஜமீன்தார் - 1965]
கண்ணதாசன் , விஸ்வநாதன் -ராமமூர்த்தி
பி பி சீனிவாஸ்
மற்றும் பி சுசீலா இருவரும் தனித்தனியே பாடுவது படத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால் டூயட் வகை பாடல் அல்ல. .
இந்த உத்தியில் பல கருத்துகள் பொதிந்துள்ளன..
அடிப்படையாக ஒரு பெண், ஆண் ஒருவனது
செயல்களை பிசகாமல் கவனித்து அவன் செய்வதை இவளும் செய்கிறாள். இது அவளின் காதல் வயப்பட்ட தன்மையை , குறிப்பால்
உணர்த்துகிறது. படத்தில் வேறு, டூயட் பாடல்கள் உண்டு. ஆனால் இதுவே [இப்பாடலே] ஆரம்பம் .
சரி ஒருவன் பாடியதை வேறொருத்தி பாடுவது ஏன்? அதுதான்
கவிஞர் கண்ணதாசன் கையில் எடுத்த கவிதை என்னும் ஆயுதம். அதாவது ஒரு ஆத்மார்த்தமான கவிதை.
இந்த உத்தி தான் அவளுக்குள் கிளர்ந்த காதலுக்கு வித்து . எந்த பெண்ணும் ஒரு ஆண் என்பவனை
ஆண் என்பதற்காக வயப்படுவது இல்லை. ஆனால் அவனிடம் ஏதோ ஒரு பண்பு, ஈர்ப்பு கொண்டதாக அமைந்துவிட்டால்
-யானை க்கும் அடி சறுக்கும் என்ற சூழலுக்குள் பெண் இழுத்துவரப்படுவாள்.
இதற்கு என்ன ஆதாரம் என்று கேட்கத்தோன்றும்.. அதாவது ஆண்
பாடிய அதே சொற்களை பெண் பாடுவது ஏன்?. கவிஞனின்
சொல் விளையாட்டில் எந்த இடத்திலும் இது ஆணின் உணர்வு என்றோ, இது பெண்ணின் உணர்வு என்றோ
வகைப்படுத்த இயலாத அளவில் 'பாலினக்கவர்ச்சி"- என்ற முத்திரை விழாதபடி அதியற்புதமாக
பாடலை வடிவமைத்துள்ளார் கண்ணதாசன் ஆக ஆணின் குரலில் வெளிப்பட்ட எந்தக்கருத்தையும் ஏதோ
ஒரு ஈர்ப்பினால் பாடுகிறான் என்று எவரும் குறிப்பிட முடியாது.
அதாவது, அவன் எந்தப்பெண்ணையும் வர்ணித்துப்பாடவில்லை.
மாறாக பெண் என்பவள் மதிப்பில்லாப்பொக்கிஷம் என்பதை வெவ்வேறு அலகுகளால் [units of [e]valuation]
விளக்கிப்பாடுகிறான். . அதை விவாதப்பொருளாக்கி, வெறுத்து
ஒதுக்க எவருக்குமே மனம் வராது; அப்படி இருக்க அந்த மதிப்பீடுகளை பெண் அப்படியே ஏற்றுக்கொண்டுவிட
அவள் அதே அமைப்பில் பாடுகிறாள். ஆண் ஒருவனின் பெண்ணினம் குறித்த சீரிய பார்வையே ஒரு
பெண்ணை. அவனிடம் மயக்கம் கொள்ள செய்வதை ஒரே
பாடல் மூலம் விளக்கியுள்ளனர் படக்குழுவினர்.
அது ஒரு மாறுபட்ட ஆனால் கௌரவமான முயற்சி என்பதை மறுப்பதற்கில்லை.
சரி, அந்தப்பாடலில் அப்படி என்ன தான் இருக்கிறது? அதுதான்
சுவாரசியம்
பெண்ணின் அங்கங்கள் எதையும் குறிப்பிடாமல் பெண்ணின் பண்புகளை
மட்டுமே வியந்து போற்றும் நாயகன் என்பதை முதலில் ஆண் பாட, அதை கவனித்த பெண் பின்னர்
வீட்டில் பாடுகிறாள்.
இளமை இனிமை, இயற்கை இவை என்னதான் நிறைவாக இருந்தாலும்
"பெண்' என்ற அந்த படைப்பு இல்லை எனில் சுகம் என்ற நிலை இல்லை என்று வர்ணிக்கிறார்
கவிஞர். இயற்கையின் அமைப்பில் 'பெண்' அளிக்கும் பங்கு மகத்தானது என்பதை நிறுவிட, அவளே
தாரம் மற்றும் தாய் எனவே அணைப்பதும் அணைப்ப்பில் கட்டுருவதும் அவளே என்று முதல் மகோன்னதம்
முதல் சரணத்தில்.காண்கிறோம்.
சரணத்தின் அடுத்த பகுதியில் கவிஞர்கள் பாடல் புனையவும்,
கலைஞர்கள், , இளைஞர்கள் அனைவரும் எதிர்நோக்குவது
"பெண்" எனும் இயற்கையின் சீதன பரிசு என்று 'பெண்" ஒரு சீதனம் என்கிறார்
கவிஞர்
எந்த சீதனுமும், பெண்ணுக்கு இணை ஆகாது என்று வலுவாக பேசுகிறார்
கவியரசர். அதாவது பொன், பொருள் எதுவும் பெண்ணைப்போல் அன்பு வார்த்தை பேசுமா அல்லது
பெண்ணை மணப்பது போல் அவற்றிற்கு மாலையிட்டு மகிழ்ந்திட முடியுமா என்று பெண் ஒரு உயர்
சீதனம் என்கிறார்.கண்ணதாசன்.
செல்வம் இன்று தேடி வரும், நாளை ஓடிவிடும் ஆயின் எந்த
செல்வமும் மலர்ந்த அன்புடன் ஒருவனுக்கு உணவு தருமா [பெண் என்ற சீதனம் மிக உயர்ந்தது
என உணர்த்தும் இடம்], இவ்வனைத்தையும் கடந்து எந்த செல்வமும் பெண் அளிக்கும் அன்பு அரவணைப்பு
இனிமை இவற்றை தராது என்று ஆண் வாயிலாகப்பாட , பெண் அவனின் உயர்ந்த பண்பினால் ஈர்க்கப்படுவதை
இப்பாடல் காட்டுகிறது. ஏனெனில் இதே சொற்களை அவள் இம்மியும் மாறாமல் அதே மெட்டு எனும்
ராக அமைப்பில் பாடுவது இவ்வனைத்தையும் நமக்கு வலியுறுத்துகிறது.
இசை அமைப்பாளர் செய்தது என்ன?
இசை அமைப்பாளர் பாடலை நன்கு உள் வாங்காமல் இசை அமைப்பையே துவங்க மாட்டார்கள் . எனவே
அதன் வெளிப்பாடாகவே ஆண் குரல் [pbs ] , பெண்
குரல் [சுசீலா] இரண்டையும் ஒரே மெட்டில் பாட வைத்துள்ளார்.
அது ஏன் ?
ஆம் பெண் வேறொருவர் பாடுவதை திரும்பப்பாடுகிறார் எனவே
ராக மாற்றத்திற்கு வழி இல்லை மாற்றினால் மன ஈர்ப்பில் கற்றுக்கொண்ட பாடல் என்பது பொய்த்துவிடும்.
[எவ்வளவு ஆழ்ந்த கவனம் பாடல் உருவாக்கத்தில்?]
எனினும் இருவரின் [ஆண் /பெண் ] ஹம்மிங்கிலும் வேறுபாடு நிறையவே உள்ளது. ஆண் ஹம்மிங் வேறு வகை
அமைப்பிலும் பெண் ஹம்மிங் மற்றொரு அமைப்பிலும் உள்ளன.
பெண் குரலை விட ஆன் குரல் பாடலுக்கு இசைக்கருவிகள், அவற்றின்
ஒலி அதிகம் [வெளிப்புறக்காட்சி]
பெண் குரலுக்கு கருவிகள் குறைவு, ஒலியும் குறைவே [உட்புற
காட்சி]
ஆண் குரலுக்கு ஹார்ப் ,மாண்டொலின் , குழல், கிட்டார்
, மற்றும் போங்கோ கலந்து நெடுகிலும் ஒலிக்க கேட்கலாம் . பெண் குரல் பாடலுக்கு துவக்கம்
குழல் பின்னர் வயலின் மண்டலின், குழல் மற்றும் போங்கோ உதவியில் பயணிக்கிறது இவ்வாறு
மாறுபட்ட கருவிகள் எனினும், இரண்டும் ஒரே அமைப்பாக தென்படுவது தான் இசை அமைப்பின் சூட்சுமம்
.
எனவே பாடல்களை மேம்போக்காக இல்லாமல் ஆழ்ந்து கேட்டு உணர்ந்தால்
எண்ணற்ற நுணுக்கங்கள் புலப்படும். கேட்டு ரசியுங்கள்
https://www.youtube.com/watch?v=bH1CV9hgopY PBS
https://www.facebook.com/watch/?v=397230396403772 PS
நன்றி அன்பன்
ராமன்
No comments:
Post a Comment