Friday, August 22, 2025

THE MEETING POINT

 THE MEETING POINT        

Dear Reader,

Seeing the title, one may be tempted to assume that a new topic has its beginning here. Honestly nothing of that kind is in the offing. At best, it is the logical end point of an interaction constituting ‘education/ teaching-learning’ –a key determinant of certain prospects in life.

I perceive that quite a few are angered over my persistent efforts to bring out the critical facets in Education, just to make it clear that it is well within anyone’s reach to learn things just by adhering to a set of approaches. Essentially, the interacting minds ought to understand that learning is a two-way process, where the teacher is a perpetual learner and at a later stage the learner dons the role of teacher [=turns another perpetual learner].

Put in plain terms, cessation of learning signals the end of teaching.     This is the functional code on which the edifice of education is gloriously surviving since times immemorial, for education is a legacy of handing down message and strategy of delivery together as an intertwined ensemble.

It [the legacy] is much like a family tree suggesting the donor and the beneficiary and the ramifications of the mental synapses that have bridged the learners of the past and of the present with not even a perceptible whisper. Look at the glory of the legacy with an unwritten history.  

Any dispassionate recall of our fathers and forefathers in the larger canvas of learning a specific discipline reveals that message has percolated down generations much like the genes among those biologically related.

The ever-changing form and format of knowledge stands parallel to environmental influence conferring adaptive changes in a living system much the same way as amendments to understanding of information for the resultant knowledge. 

 I think we are at the right   juncture, fit to gather our wits and realize the ‘meeting point’. Ultimately, it is interactive influence that eradicates misconceptions and puts the record straight by removing the cobweb of confusion.

In the first place confusion originates from ‘discontinuity’. Discontinuity has its roots in ‘digression’. Digression is the logical child of lacuna in understanding. This is the precise spot where the synapse between the teacher and the taught snaps, as one or both them fail to keep track of the ‘on going’ to ensure that the message is imbibed. No point in trying to fix the blame on someone.

The teachers need to be closely monitoring the wards to assess by their responsive facial manifestations –both negative and positive. Likewise, learners need to closely follow the statements. Every unclear spot should be taken up with the teacher –not in a confrontational attitude but by politely registering the requirement –saying ‘I have not picked it right’. 

Any sensible teacher would not allow the occasion to slip by, as [s]he has an occasion given on a platter to make things absolutely clear. Such mental proximity helps to reach the ‘meeting point’.  Any unfounded ego can lead to a melting pot of anger and hatred instead of coming to a meeting point that helps delightful learning.

Thursday, August 21, 2025

GOOD- BUT LESS KNOWN -5

 GOOD- BUT LESS KNOWN -5

நல்ல ஆனால் அறியப்படாதவை-5

நான் பாடிய பாடல் மன்னவன் கேட்டான் படையுடனே வந்தான் [வாழ்க்கை வாழ்வதற்கே -1964] கண்ணதாசன் விஸ்வநாதன் ராமமூர்த்தி , பி பி ஸ்ரீனிவாஸ், பி சுசீலா.

அச்சு அசலாக பாடல் எங்கும் எம் எஸ் வியின் ஆளுமை மிளிர்கிறது கவனியுங்கள். எடுத்த எடுப்பிலேயே ராக ஆலாபனையில் தொடங்கி இடை வெளியே இல்லாமல் பயணித்த அற்புதம்.   பல்லவி, சரணம்  இரண்டுக்கும் பேதம் இல்லை ஏன் ?.

பாடலின் மையக்கருத்துக்கு உயிர் ஊட்டிய உத்தி. ஆம் பின் வரும் சரணத்தில் காவிரி என்றும் கடல் இது என்றும் பேதம் இல்லையம்மா என்ற உயிர் நாதத்திற்கு வலு சேர்க்க பாடல் முற்றிலும் ஒரே ராகத்தில் சீராக பயணிக்கிறது. அதே போல் இசையிலும் ஒரே அமைப்பே என்ற உயிரோ ட்டமான செயல் பாடு - கேட்டு உணர இணைப்பு இதோ

NAAN PAADIYA PAADAL MANNAVAN KETTAAN https://www.youtube.com/watch?v=qC_IXGS9SFY

ஆத்தோரம் மணல் எடுத்து [வாழ்க்கை வாழ்வதற்கே ]கண்ணதாசன், வி, ரா, லதா , ரமாமணி

வாழ்க்கை வாழ்வதற்கே படத்தில் அமைந்த குழந்தைப்பருவ குதூகல ப்பாடல் , கவி அரசரின் சொற்கள் மெல்லிசை மன்னர்களின் மெருகேற்றலில் அன்றைய சிறுமிகள் லதா, ராமாமணி இருவரும் பாடி வெற்றி கண்ட பாடல். . எவ்வளவு இயல்பாக சொல்லும் இசையும்? கேட்டு மகிழ இணைப்பு இதோ

https://www.youtube.com/watch?v=Q_zPCT32aJ4

AATHORAM MANALEDUTHTHU KD  V R  ,LATHA RAMAAMANI

சில ஆண்டுகள் முன், ரமாமணியின் நேர்காணல் MMFA அன்பர்களுக்காக திரு விஜயகிரிஷ்ணன் அவர்களுடன் ,ரசிக்க இணைப்பு இதோ 

https://www.youtube.com/watch?v=4wy-RTMiscM RAMAMANI INTERCIEW with Vijay Krishnan

குழந்தைப்பருவ பாடல் பின்னாளில் சோகமாக ஒலித்த பெரியவர்கள் பாடல் குரல்கள் பி பி ஸ்ரீனிவாஸ் மற்றும் சுசீலா . கேட்டு உணர இணைப்பு இதோ

https://www.youtube.com/watch?v=1YDO0HELCY4&list=RD1YDO0HELCY4&start_radio=1

aathoram [PATHOS] PBS PS

Tuesday, August 19, 2025

MSV SPECIAL -3

 

MSV  SPECIAL -3                                     

எம் எஸ் விஸ்வநாதன் --சிறப்பு பதிவு -3

சங்கீதம் தெரிந்தால் போதாது இங்கிதமும் அவசியம் என்பார் எம் எஸ் வி அவர்கள். பல தருணங்களில் வயதில்குறைந்தவர்களாயினும், தயாரிப்பாளர்கள்/ இயக்குனர்கள் என்றால் எம் எஸ் வி பழகும் விதமே அலாதி கௌரவம் மிக்க அணுகுமுறையாக இருக்கும். அவர் இசை அமைப்பாளர் நௌஷாத் எதிரில் அமரக்கூட தயங்குவார். ஆனால் அவர் [நௌஷாத் ] எம் எஸ் வி யின் இசை அமைப்பு முறைகளை பெரிதும் சிலாகிப்பார். இப்படி திரைத்துறையில் எம் எஸ் வி பதித்த முத்திரைகள் ஏராளம். அவற்றின் பல பரிமாணங்களை நாம் உணரும் விதமாக சில வீடியோ இணைப்புகள் இன்றைய பதிவில் இடம் பெற்றுள்ளன. அவற்றை நன்கு கவனித்து பல தகவல்களை பெறலாம். கவனாக பார்த்து ரசியுங்கள் இணைப்புகள் கீழே 

https://www.youtube.com/watch?v=YfyoRHrwnz4 AVM KUMARAN ON MSV

https://www.youtube.com/watch?v=1UAxoML8P9w MSV ON       ANBE VAA

https://www.youtube.com/watch?v=cQ_BMOBbw5o MSV’S PREDICAMENT

 https://www.youtube.com/watch?v=FKJMX1jXGrM MSV VAISHAALI PS  SINGAPORE STAGE

நன்றி

அன்பன் ராமன் 

LET US PERCEIVE THE SONG -34

LET US PERCEIVE THE SONG -34          

பாடலை உணர்வோம் -34

குங்குமப்பொட்டின் மங்கலம் [குடியிருந்த கோயில் -1968]

பாடல் : குமாரி ரோஷனாரா பேகம் , இசை எம் எஸ் விஸ்வநாதன் , குரல்கள் டி எம் எஸ் , பி சுசீலா.

 பாடல் வரிகளைக்கே ட்டால் ஒரு தேர்ந்த கவிஞரின் கற்பனை ஊற்றில் விளைந்த கவிதை என்றே சொல்ல தோன்றும். ஆனால் உண்மை என்ன?

பாடலை யாத்தவர் ஒரு இளம் பெண், கோவையை சேர்ந்தவர். ரோஷனாரா பேகம். கட்டு க்கோப்பான இஸ்லாமிய மரபுகளில் வளர்ந்தவர். கவி புனையும் ஆற்றல் மிக்கவர். அவர் தந்தைக்கோ மகளின் திறமை மீது பெரும் ஈர்ப்பும் மதிப்பும் . அவர் எம் எஸ் வியின் நண்பர். எம் எஸ் விஇடம் , எப்படியாவது ஒரு பாடலையாவது திரைப்படத்தில் இடம் பெறச்செய்யுங்கள் என்று வலியுறுத்திவந்தார். நல்ல தருணம் பார்த்து ஜி என் வேலுமணியின் தயாரிப்பில் பாடலை எம் ஜி ஆர் ஜெயலலிதாவுக்கான டூயட்டில் இடம் பெற வைத்து, பாடல் பெரும் வெற்றி ஈட்டியது.

ஒரே நாளில் ரோஷனாரா பெரும் புகழ் அடைந்தார். ஆனால் அவர்களின் மத மரபுகளுக்கேற்ப திரைத்துறையில் இடம் தேடாமல்  ஒதுங்கி க்கொண்டார்.

தொடர்ந்திருந்தால் பெரும் பெண் கவிஞர் என்ற நிலையை அடைந்திருப்பார். இந்த ஒரு பாடலில் அவர் வெளிப்படுத்தியுள்ள மனோரீதியான உணர்வுகளும் கௌரவ சொற்களும், அவரின் அபார திறமைக்கு சான்று. இப்பாடலில் பல இடங்களில் கவிதைச்செழுமை போற்றுதலுக்குரியதே எனில் மிகை அன்று .

எவ்வளவு இயல்பான துவக்கம்?

குங்குமப்பொட்டின் மங்கலம்

நெஞ்சமிரண்டின் சங்கமம், இன்றெனப்பாடும்

இள     மை  ஒன்றெனப்பாடும்  

கவிதை இந்த வடிவில் தான் எழுதப்பட்டிருந்ததாதெரியாதுநிச்சயம் இது போன்ற தருணங்களில் வரிகளை சேர்த்து அல்லது பிரித்து பாட வைத்து மெருகேற்றுவதில் எம் எஸ் வி கை தேர்ந்தவர்.

அவ்வகை யில் பாடும் போது இள     மை ஒன்றெனப்பாடும் என்று சுவைகூட்டி உடனே ஸ்ட்ரிங்ஸ் எனப்படும் நரம்புக்கருவிகளை மீட்டி பாடலை மெல்ல உயரத்தில் மிதக்கவிட்டுள்ளார் எம் எஸ் வி

ஆண்

எந்தன் பக்கம் வந்தென்னவெட்கம்

உந்தன் கண்ணில் ஏனிந்த அச்சம்  [இது போன்ற சொல்லாடல் ஆண்  கவிஞர்கள் வெளிப்படுத்தும் கம்பீரம் , இங்கே பெண் கவி தெளிவாக உரைத்துள்ளார்].

தொடர்ந்து  பெண் ஆலாபனை செய்ய

ஆண்

தித்திக்கும் இதழ் மீது மோகம்

தந்ததே மாந்தளிர் தேகம்

தந்ததே மாந்தளிர் தேகம்  தேகம்  தேகம் 

உணர்வை செம்மைப்படுத்த இசை அமைப்பில் மும்முறை பாட வைத்துள்ளார். அதே சமயம்  மாந்தளிர் தேகம்  என்ற சொற் கோவை  சாதாரண வரிவடிவம் அல்ல. .

பெண்

மனம் சிந்திக்க சிந்திக்க துன்பம்

தினம் சந்திக்க சந்திக்க இன்பம்

 பெண்ணான பின் என்னை தேடி வந்ததே எண்ணங்கள் கோடி

வந்ததே எண்ணங்கள் கோடி  கோடி  கோடி     மும்முறை பாடி உணர்வின் அழுத்தத்தை உணர வைக்கிறார்     எம் எஸ் வி

பல்லவி

ஆண்

தங்கம் மங்கும் நிறமான மங்கை

அங்கம் எங்கும் ஆனந்த கங்கை

ஜில்லென குளிர் காற்று வீசும்

மௌன….மே தான் அங்கு பேசும் 

மௌனமே தான் அங்…..கு  பேசும்    பேசும்    பேசும் 

பெண்

 மண்ணில் சொர்க்கம் கண்டிந்த உள்ளம்

விண்ணில் சுற்றும் மீனென்று துள்ளும்

கற்பனை கடல் ஆன போது 

சென்றதே பூந்தென்றல் தூ…….து

 பூந்தென்றல் தூது தூது தூது

ஆண்

பல்லவி

ஆண் , பெண் இருவரும்

குங்குமப்பொட்டின் மங்கலம்

நெஞ்சமிரண்டின் சங்கமம், இன்றெனப்பாடும்

இள     மை ஒன்றெனப்பாடும்  

ராக அமைப்பில்  நெடுகிலும் எம் எஸ் வி கம்பீரமாக  தெரிகிறார்.

எதுகை மோனை, சொல்லாடல் காதல் மனத்தின் உவமைகள் என அற்புதமான கவிதை. கவிஞர் ஆழ்ந்த புலமை கொண்டவர் என்பது தெளிவாக தெரிகிறது. மிகவும் சிறப்பான இசை அமைப்பும், கருவிகளின் நளின ஒலிகளும் பாடலை தெளிவாக செம்மைப்படுத்தியுள்ளன. அலுப்பே ஏற்படுத்தாத பாடல். பலமுறை கேட்டு ரசியுங்கள் இணைப்பு இதோ.

https://www.youtube.com/watch?v=Ln2plSHq8PE KUMGUMAPOTTIN MANGALAM

சொந்தத்துக்கு எழுதிய கவிதை என்று நினைத்தேன், சுபஸ்ரீ தகவலில் எம் எஸ் வியின் சந்தத்துக்கு ரோஷனாரா எழுதியதாக குறிப்பிடுகிறார். அப்படி என்றால் அந்த பெண்மணி மிகவும் திறமை மிக்க கவிதாயினி தான் என்பது புரிகிறது

இப்பாடலின் பிற சிறப்புகளை சுபஸ்ரீ விளக் குகிறார் . இணைப்பு இதோ

Kungumappottin mangalam  qfr 692

https://www.youtube.com/watch?v=OYzrIfyNI60

பிறிதொரு பாடலுடன் பின்னர் சந்திப்போம்

நன்றி

அன்பன் ராமன்

 


THE MEETING POINT

  THE MEETING POINT         Dear Reader, Seeing the title, one may be tempted to assume that a new topic has its beginning here. Honestl...