Monday, November 24, 2025

TEJAS ACCIDENT

 TEJAS  ACCIDENT 

தேஜஸ் விபத்து

தேஜஸ் விமானம் நமது வான்படையின் நவீன லகுரக போர் விமானம் என்பது மட்டுமல்ல உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை பறைசாற்றிய ஒன்று என்று புகழ் பெற்றது.

சென்ற வெள்ளியன்று துபாயில் நிகழ்ந்த பன்னாட்டு போர் விமான பயிற்சி மற்றும் சாகச நிகழ்வில் பங்கு கொண்டு தீவிரம் காட்டிய நிலையில் எதிர்பாராமல் விபத்துக்குள்ளாகி பெரும் சோகத்தை விளைவித்தது.  மட்டுமல்ல விலை மதிக்கவொண்ணா விமானியின் [திரு நமன் ஷ் ஸியால் -ஹிமாச்சல பகுதியினர்] உயிரும் பறிபோனது. இவர் மிகுந்த அனுபவமும் தேஜஸ் விமானத்தில் மிகுந்த ஆளுமை செலுத்தும் சிறப்பும் ஒருசேரப்பெற்றவர். அவருக்கே நொடியில் மரணம்.

விமான சாகசங்கள் ஆபத்து நிறைந்தவை தான் உலகில் எந்த நாடும் இவ்வகை துயரங்களிருந்து தப்பித்தது இல்லை என்பது ஆதாரப்பூர்வமானது.

இங்கு நடப்பதென்ன?

இந்தியாவிற்கு எதிர்ப்பு வெளிநாடுகளை விட உள்நாட்டில்தான் அதிகம். இந்திய திருநாட்டிற்கென்று  சில  சாபக்கேடுகள் உண்டு.

1 படிக்காத 4 பேர் சேர்ந்து கொண்டு இந்திய கல்வித்திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று சந்துமுனையில் கூடி முழக்கமிடுவர். மோசமான இந்தியக்கல்வி கற்றவனையா அமெரிக்கா , கனடா ,ஆஸ்திரேலியா , ஜெர்மனி அனைத்தும் வேலைக்கமர்த்தி பொருளும் வசதியும் கொடுக்கிறது? என்று கேட்டால் அது அது என்று மென்று விழுங்கும் மேதாவிகள் பலர் தெருக்களில் உலவக்காணலாம் .

2 வேறெந்த  மொழியையும் அறியாத வர்கள், பிற மொழிகள் எதுவும் எனது மொழிக்கு ஈடாகுமா என பேசுவர்

3  4000 ஆண்டுகளுக்கு முன்னரே எய்ட்ஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடித்தவர் நம்மவர் என்று சூளுரைப்பர் . [அப்படி எனில் 4000 ஆண்டுகளுக்குபல்லாண்டுகளுக்கு  முன்னரே எய்ட்ஸ் வகை நோய் நம் முன்னோரிடம் குடிகொண்டிருந்திருக்கும் போலிருக்கிறதே என்று ஆராம்பித்தால் -அமைதி நிலவும்]

4 தற்காலத்தில் சமுக ஊடகம் என்ற பெயரில் பொய்யை கட்டமைப்பது, கட்டவிழ்த்துவிடுவது இரண்டும் அன்றாட நிகழ்வு.

5 இந்தியாவைக்குறை கூறுவதே எமது குலத்தொழில் என்று ஒரு கூட்டம் வளைய வந்துகொண்டிருக்கிறது.

அந்த கூட்டம் ஆஹா தேஜஸ் படுதோல்வி ,வேஸ்ட் , சீனாவைப்பார் என்பர். அவர்களில் சிலர் சீனா வந்துவிட்டானா என்று நண்பனை தேடுவர். இது போன்ற ஜவடால் ஜம்புலிங்கங்கள் அநேகர். ஒழிக ஒழிக என்று கூவியே யிர் வாழ முனையும் திறமையற்ற பலர்.

அவர்கள் அனைத்தும் கற்றவர் போல் பேசி பொழுதை ஓட்டுபவர்கள்.

இவர்கள் தான் தேஜஸ் விமானம் தோற்றுவிட்டது அவனைப்பார் இவனைப்பார் என்று பேசி தங்களை பெரும் அறிவுசால் பெருந்தகைகளாக காட்சிப்படுத்தி வாய் கூசாமல்   விமரிசனம் கிளப் புவர். இந்த விபத்து குறித்து விவரம் தெரிந்த இருவரின் வீடியோ பதிவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இருவரின் பொதுவான கருத்து விமானமோ விமானியோ குற்றவாளிகள் அல்லர். இதுபோன்ற சாகச முயற்சிகளில் தன்னை மீட்டு நிலைப்படுத்திக்கொள்ள சிறிது கால அவகாசம்  தேவை. பூமியோடு அருகில் பறக்கும் நிலையில் புவிஈர்ப்பு விசை யை மீறி வெளியே செல்ல விமானிக்கு நேரம் கிடைக்கவில்லை எனவே மோதி விபத்திற்குள்ளானது, ஆனால் விமானி தன்னை காப்பாற்றிக்கொள்வதை விட விமானத்தை நல்வழிப்படுத்தும் முயற்சியிலேயே தன்னையும் இழந்தார் என்ற துயர செய்தியை பகிர்கின்றனர். மேலும் முறையான அறிக்கை வரும் வரை எந்த யூகங்களையும்   பரப்ப வேண்டாம் என்கின்றனர்.

இரண்டு இணைப்புகளையும் பாருங்கள் 1 ஆசிர் சாமுவேல் தெரிவித்தது 2 மேஜர் மதன் குமார் கூறும் கருத்துகள். இரண்டையும் பார்த்து நன்கு புரிந்து கொள்ளுங்கள்

https://www.youtube.com/watch?v=VqxUfcqV9Cc&t=8s ASIR SAMUEL

https://www.youtube.com/watch?v=hTIu9KLQxoI Tejas  accident Major Madan Kumar      

நன்றி  அன்பன் ராமன்

******************************************************

No comments:

Post a Comment

TEJAS ACCIDENT

  TEJAS  ACCIDENT  தேஜஸ் விபத்து தேஜஸ் விமானம் நமது வான்படையின் நவீன லகுரக போர் விமானம் என்பது மட்டுமல்ல உலக அரங்கில் இந்த...