Wednesday, February 18, 2026

GUITAR BRILLIANCE -2

 GUITAR BRILLIANCE -2

கிட் டார் ஒலியில் பரவசம் -2

பின் வரும் பாடல்கள் ஒவ்வொன்றிலும் திரு பிலிப் அவர்களின் கிட்டார் வழங்கியுள்ள ஓசைத்தொகுப்புகளை கூர்ந்து கவனித்து ரசியுங்கள் அந்தக்காலத்தில் அவர் இதுபோல் மீட்டி பெரும் புகழ் பெற்றார். அதியற்புதக்கலைஞர். இயன்ற அளவுக்கு ஒவ்வொரு பாடலுக்கும் சிறு குறிப்பு தந்துள்ளேன் . பாடலை நன்கு கேளுங்கள்.

"நீ என்பதென்ன"  வெண்ணிற ஆடை [1965]  பாடலின் இடை இசையில் கிட்டார் வாசிப்பில் ஒரு துடிப்பும் விறுவிறுப்பும் அவரது வாசிப்பின் சிறப்பு

https://www.youtube.com/watch?v=T0yX3NsDDiI NEE ENBADHENNA VA KD VR LRE GUITAR –DRUM GAME

"நீராடும் கண்கள்" [வெண்ணிற ஆடை 1965]            திரையில் இல்லாவிடினும் ரசிகர்\களின் மனத்திரையில் வியாபித்து நிற்கும் பாடல். பாடலின் துவக்கமே பிலிப்பின் பெருமை பேசும். பின்னர் வரும் பாடலில் இடை இசையில் எவ்வளவு நுணுக்கம் கிட்டார் வாசிப்பில் கேட்கக்கேட்க பரவசம்

https://www.youtube.com/watch?v=McMoitANALc NEERAADUM KANGAL INGE  VA KD VR P SUSHEELA

'முள்ளில் ரோஜா'   [கலைக்கோயில் -1964]  

போதை தலைக்கேறியவன் பாடும் நிகழ்வு, பாடல் நெடுகிலும் கிட்டார் அள்ளித்தெளித்துள்ள கோலங்கள் தான் எத்துணை எத்துணை , கேட்டு தான் லயிக்க இயலும். பாடலுக்கு ஆடியோ மட்டுமே , எனவே நன்கு கேட்டு இன்புறலாம்

https://www.youtube.com/watch?v=12UJ9UQts9U MULIL ROJA KK 1964 KD VR LRE PBS [START, IL, GUITAR DRUM BONGO COMBO]

'மீனே மீனே மீனம்மா'  [ என் கடமை 1963]

அற்புதமான பாடல், பியானோ குழல் இரண்டும் கொண்ட பாடல் ஆனால் அவ்வப்போது இசைக்கப்பட்டுள்ள கிட்டார் அற்புதமான ஒலி  தந்து பெருமை கொள்கிறது

https://www.youtube.com/watch?v=Uf6tQrMK-9I MEENE MEENE EN KADAMAI 1963 KD VR PS PIANO START ,GUITAR IL

'காத்திருந்த கண்களே'  [மோட்டார் சுந்தரம் பிள்ளை 1966]

ஒரே முறை ஒலித்தாலும் உள்ளத்தைக்கொள்ளைகொண்ட கிட்டார் வாசிப்பு பாடலுக்கு அலாதி சுவை ஊட்டியது

https://www.youtube.com/watch?v=oRS_BNiuWcA KAATHIRUNDHA MOTOR S.P 1966 VALI MSV PS PBS  GUITAR I INTERLUDE

 

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

3 comments:

  1. Amazing guitar bits by Philip in all these songs. Great picks.

    ReplyDelete
  2. எனக்கும் கிடார் ஓசை மிகவும் பிடிக்கும். திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் பயிலும் போது என்னுடைய சக மாணவர்களில் சிலருக்கு கல்லூரி நிர்வாகம் கிடார் வகுப்பு நடத்தியது. கல்லூரியில் நடக்கும் கலை நிகழ்ச்சிகளில் பலமுறை இவர்கள் கிடாரைக் கையில் வைத்துக்கொண்டு ஸ்ட்ரிங் செய்து கொண்டிருப்பதை பார்க்க பொறாமையாக இருக்கும்.

    ReplyDelete
  3. யாதோங் கி பாராத் திரைப்படத்தில் கடைசி பாட்டில் கிடார் இசை தான் முதலில். என்னை போன்ற மாணவர்கள் மயங்கி விழுந்து விட்டோம்

    ReplyDelete

I S MURUGESH -02

  Meesai again     I S MURUGESH -02 ஐ   எஸ் முருகேஷ்-02 திரு முருகேஷ் அவர்களின் பல திறமைகள் ஒரு புறம் இருக்க , சங்கர் - கணேஷ் , ...