Wednesday, July 29, 2026

CHANGING TIMES-4

 CHANGING TIMES-4

கால மாற்றம் -4

சென்ற பதிவில் சில பாடல்கள் குறித்த கேள்விகள் கொடுக்கப்பட்டன .ஆனால் அமைதியே விடை. இப்பதிவில் இடம் பெற்ற பாடல்களின் முக்கிய அம்சங்கள் பற்றிய விளக்கம் இதோ. இறுதியில் சில பாடல் இணைப்புகள் உள .அவை குறித்து என்ன உணருகிறீர்கள் என எழுதுங்கள்.

விண்ணோடும் முகிலொடும் [புதையல்]

இப்பாடல் ஜனித்த காலத்திலேயே ஏதோ மாறுபட்ட வடிவம் என்று நான் உள்பட பலர் யோசித்தது உண்டு / அது பாடலின் வேகம் சங்கிலித்தொடர் போல் பாடல் எங்குமே தங்காமல் விரைந்து பயணிக்க , குரலும் இசையும் ஒன்றை ஒன்று துரத்தி அமைந்த பாடல் அந்நாளில் புதுவடிவம்.பின்னாளில் புரிந்தது அதுதான் மெல்லிசையில் மன்னர்கள் வடிவமைத்த பாடல் இலக்கணம் என்று. 

https://www.youtube.com/watch?v=AR5vOoiE0A8  vinodum mugilodum CS J PS VR

முத்துக்களோ கண்கள் [நெஞ்சிருக்கும் வரை]  வி-ரா , எம் எஸ் வி என்றும் டி  கே ஆர் என்றும் பிரிவுற்றபின் எம் எஸ் வி வழங்கிய மாபெரும் வெற்றிப்பாடல் இது. .கவிதைநயம் மிக்க இப்பாடலில் எம் எஸ் வி அளித்த இசை உதவி இப்பாடலின் இமாலய வெற்றிக்கு ஒரு பெரும் காரணி. துவக்கத்தில் வீணை பின்னர் வரும் கிட்டார் போங்கோ பிணைப்பு அதிஅற்புதம். இதுபோன்ற டூயட் பாடல்கள் மிக அரிதானவை, நளினம் மிக்க பாடல்

 https://www.youtube.com/watch?v=_A6iNWIxtWk MUTHUKKALO KANGAL TMS PS MSV

ஒருவன் காதலன் [வெண்ணிற ஆடை]

உரைநடையை பாடலாக்கிய வித்தகம் இப்பாடலில். அதிலும் இடை இசையில் அமைந்த கருவிகள் தொகுப்பு தனி ஒரு அமைப்பு, முதல் இடை இசையில் பாடலில் காற்றில் மிதப்பது போல் தவழும் மேன்மையை என்ன சொல்ல? 61 ஆண்டு கடந்தும் நளினம் மாறா இசை சிறப்பு.

https://www.youtube.com/watch?v=_REICPqYXmk ORUVAN KAADHALAN  RECORD

பூஜைக்கு வந்த [பாத காணிக்கை]

மிகவும் மென்மையான டூயட் , தொய்வில்லாமல் முன்னேறும் பாடல் . இந்தக்காலத்தில் இடையே கோரஸ் அமைத்துள்ளனர் ;இதுபோன்ற 'நகாசுகள்' செய்ய எல்லோராலும் இயலுமா? வாய்ப்பில்லை ஆழ்ந்து ரசிக்கத்தக்க வடிவம் இப்பாடல்

https://www.youtube.com/watch?v=MGIhzHsZLpc POOJAIKKU VANDHA PBS SJ V R

இனி இன்றைய தேர்வுகளாக 4 பாடல்கள் உள்ளன, ஒன்று 2 புறமும் பதிவிடப்பட்டுள்ளது ஆகா மொத்தம் 5 என்று கணக்கிடலாம்.  பாடல்களின் துல்லியங் களை கேட்டு கருத்து சொல்லுங்கள். கருத்துக்கேட்டால் முகம் கறுத்து மௌன விரதம் மேலோங்கும். ஆனாலும் கேட்பதை விடப்போவதில்லை. அனைத்து பாடல்களுக்கும் ஒரே கேள்விதான். இப்பாடல்கள் சொல்வது என்ன? எங்கே சொல்லுங்கள் பார்ப்போம். 

https://www.youtube.com/watch?v=upy_irfeiWc amaidhiyaana nadhiyinile   record  2 SIDES

https://www.youtube.com/watch?v=3m3M8WeWAcw  nilavu oru pennaagi  usv

https://www.youtube.com/watch?v=AF_qobIMd3g  vannakkili  deivathaai

https://www.youtube.com/watch?v=cBu2e74I-LY&list=RDaub9hxjPYr4&index=49 paattukku paatteduththu

நன்றி

அன்பன்

2 comments:

  1. I am not a criyic to write about the dongs you have mentioned.
    But i enjoy hearing these songs.
    I very much like chidambarsam jaraman song

    ReplyDelete
  2. என்னுடைய ரசனை:
    பாடலின் மெல்லிசை
    குரல் வளம்
    பாடலின் கருத்து
    சூழ்நிலை
    இவற்றிற்குமேல் பகுத்தாய்வு செய்யும் திறன் இல்லை.
    ஆயினும் சுட்டிக்காட்டினால் புரிந்துகொள்ளும் ஆற்றல் உண்டு.

    ReplyDelete

MSV’s APPROACH TO SONG COMPOSITION

  MSV’s APPROACH   TO SONG COMPOSITION    எம் எஸ் வி அவர்களின் இசை அணுகுமுறைகள் இன்றைய பதிவின் மையப்புள்ளி திரு எம் எஸ் வி அ...