Tuesday, October 6, 2026

MAN PROPOSES………

 MAN PROPOSES………

மனிதன் நினைக்கிறான்……. ....

Man proposes, God disposes   என்றொரு ஆங்கில வாசகம் உண்டு. உண்மையிலேயே பெரும் பொருள்பொதிந்த வாசகம் அது. அதனை உணர்த்தும் விதமாக சென்ற வாரம் ஒரு நிகழ்வு உலகின் பேசுபொருளானது மட்டுமல்ல வெவ்வேறு நாடுகளை ஒருங்கிணைத்த ஒரு நிர்ப்பந்தத்தையும்தோற்றுவித்தது. ஆம் துபாயிலிருந்து இஸ்ரேல் நாட்டிற்கு பரந்த விமானம் உலகமகா பேராபத்திலிருந்து மீண்டு ஒரு சரித்திரநிகழ்வாக அமைந்தது. அதைத்தான் ஆங்கில வாசக க்கருத்தை உறுதி செய்தது என்று குறிப்பிடுகிறேன். அவ்விமானத்தை இயக்கிய முதன்மை விமானி ஒரு இந்தியர் ஸ்மித் மச்சார் -மும்பை யைசேர்ந்தவர். அவருடன் உதவி விமானி யாக வந்தவர் ஓமன் பிரஜை ஹமாமி.. இவர் திடீரென்று நடுவானில் முதன்மைவிமானியை பலமாக தாக்கி பெரும் ரத்தவெள்ளத்தில் ஆழ்த்தி   விமானத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்து , மனம் போனபடி இயக்கி எங்காவது மோதி அனைவரையும் கொன்று தான் இறந்தாலும் பரவாயில்லை என்று செயல் பட்டதாக விவரங்கள் வெளிவந்துள்ளன. இது ஒரு வெறித்தனமான செயல். 170 இஸ்ரேலியர்களை அழித்தொழிக்க கிளம்பிய மதவாத அடிப்படை வாதி அந்த துணை விமானி. இது குறித்து பல கருத்துகள் உலவுகின்றன. இதை நிகழ்த்தியிருந்தால் இந்திய விமானியின் செயலால் இத்துணை யூதர்கள் இறந்தனர் என்று வதந்தி பரப்பி , பல மதவாத கும்பல்கள்ஆயத்தம்  இந்தியா  வஞ்சகமாக யூ தர்களை கொன்றுவிட்டது என்று பரப்ப பலர் தயார்.

2    இஸ்ரேலில் உள்ள 3 கோபுரங்கள் மிக உயரமான வை. துணை விமானி அந்த கோபுரங்கள் மீது இந்த விமானத்தை மோதி அவ்விமானம் மற்றும் கட்டடத்தில் இருந்த ஆயிரக்கணக்கான உயிர்களையும் கோபுரத்தையும் சிதைத்து  பெரும் பேராபத்தை விளைவிக்க முயன்ற தாக சில தகவல்கள் உள்ளன. எப்படி ஆயினும் இறை நோக்கம் வேறாய் இருந்து பலரும் பிழைத்துவிட திட்டமிட்டவன் வசமாக சிக்கிக்கொண்டான். ஐக்கிய அரபு அமீரகம்  அந்த துணை விமானிக்கு மரண தண்டனை வழங்கியுள்ளது. -இதுதான் நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்க என்ற சொல்லாடலில் நிலைத்தன்மைக்கு சான்று.

3  இஸ்ரேலை பழிவாங்கவே அவ்வாறு செய்தேன் என்று துணை விமானி வாக்குமூலம் அளித்துள்ளதாக ஒரு தகவல். இது தொடர்பான பல விவரங்களை திரு ஆசிர்  சாமுவேல் விளக்குகிறார். எண்ணற்ற விவரங்கள் தருகிறார். கவனித்து கேளுங்கள் இணைப்பு இதோ

ஓமன் இஸ்லாமிய பயங்கரவாதி துணை விமானிக்கு மரண தண்டனை.பயங்கரவாதத்தை வேரறுத்த ஹனுமான் மந்திரம் fly dubai

மற்றுமோர் இணைப்பு மேஜர் திரு : மதன்குமார் அளித்துள்ளது இணைப்பு இதோ

https://www.youtube.com/watch?v=4lm_MRZvWy4 fly dubai horror Maj. M K

நன்றி

அன்பன் ம வ

1 comment:

  1. மச்சாரின் செயல் தெய்வச்செயலேயன்றி வேறொன்றுமில்லை

    ReplyDelete

POETIC SPLENDOUR

  POETIC SPLENDOUR                       கவி [தை] யின் நளினம்          நமது வாசக அன்பர் திரு ரகுநாதன் அவர்களின் வேண்டுகோளுக்கிணங...