Tuesday, September 22, 2026

A HAPPENING TO ABHOR

A  HAPPENING TO ABHOR

வெறுப்பு தரும் நிகழ்வு

இந்திய திருநாட்டை குறி வைத்து பலவித விரும்பத்தகாத  சம்பவங்கள் நிகழ்வதை நாம் அறிவோம். அவற்றுள் மிகவும் வெறுப்பும் கோபமும் தருவன ஊடுருவல் மற்றும் தேச விரோத செயல்களும் அவற்றிற்கு துணை நிற்பதும் தான். அது போன்ற ஒரு நிகழ்வினை விளக்குகிறார் திரு  வினோத்  க்ரிஷ்ணமுர்த்தி . கோர்வையாக பேசுவதில் திறன் கொண்ட இளைஞர் நல்ல சிந்தனையாளர். அவர் தரும் தகவல்கள் அதிர வைக்கும் வீரியம் கொண்டவை . தகவலை கவனமாக பாருங்கள் இணைப்பு இதோ. 

 https://www.youtube.com/watch?v=psnhF6OmfPc&t=14s Vinodh Krishnamoorthy

நன்றி 

அன்பன் 

 

Monday, September 21, 2026

VAISHNAVISM- 7

 VAISHNAVISM- 7

வைணவம் -7  [திரு DA ஜோசப்]

வைணவக்கோட்பாடுகள் குறித்து   திரு ஜோசப் அவர்கள் வழங்கியுள்ள 7ம் தொகுப்பு இன்று இடம்  பெறுகிறது. முன்னரே தெரிவித்திருந்த படி அன்பர்களுக்கு பல விவரங்கள் தெரிந்திருக்கக்கூடும். எனவே 'அதான் எனக்கு தெரியுமே' என்று முகம் சுளிக்காமல் வீடியோ பதிவை பார்த்து மகிழுங்கள். இணைப்பு கீழே  

https://www.youtube.com/watch?v=MBoDP-Jv8fU&list=PLPj-5KKm3ULagRkOyYJD-4V9PskBXYN7F&index=7

நன்றி     அன்பன்  

Sunday, September 20, 2026

Andal SRIDHARAN -3

 Andal SRIDHARAN -3

ஆண்டாள் -ஸ்ரீதரன் -3

ஸ்ரீதரன் ஸ்ரீரங்கம் ஆண்டாள் யானையின் அன்பு பாகன் . அவரது அறிவும் கூர்மையும் இறை பக்தியும் வியத்தகு அம்சங்கள் . பின் வரும் வீடியோ [part 3 ] பல தகவல் தரும் சுரங்கம். இணைப்பை கூர்ந்து பார்த்து பலன் பெறுவீர்

https://www.youtube.com/watch?v=gc0DaR5PILQ&t=10s 3

நன்றி அன்பன்

Friday, September 18, 2026

WILLIAM BLAKE -3

 WILLIAM BLAKE -3

Quotes -3

Another set of quotes from William Blake form the day’s blog. Curiously, these are a little longer than what we have so far had from Blake. That doesn’t anyway rob the merit of those quotes.

Energy is an eternal delight and he who desires, but acts not, breeds pestilence.

Creativity requires imagination and effort [energy]. Holding back this energy [urge to create] simply destroys creative impulse. Suppressed desires destroy the holder and the society around. Unfettered effort alone can lend positive form to imagination.

Imagination is the real and eternal world of which, this vegetable world is but a faint shadow. 

The quote implies that the world is more like a vegetable that has a temporary existence while what the human imagination conceives is the true form as the physical objects undergo changes.

If the Sun and Moon should ever doubt, they’d immediately go out

It is confidence that holds all the elements of the universe. If doubt overrules the mind, even celestial objects would fade and vanish. 

Always be ready to speak your mind and a base man would avoid you

The above quote is the most significant advice. It cautions us of dishonest [selfish/scheming] characters who cannot trick/fool/ handle honest people as the latter keep speaking the truth. Those speaking truth would buy falsehood even if presented in all elegance.                                 So, cheats do not like honest characters.

The fool who persists in his folly will become wise

The above is another quote from William Blake which lays stress on the value of experience. If a person keeps treading the wrong path [s]he would face setbacks/ failures. The failures would educate the person of the importance of following right path/ advice. The person would turn wise fr5om the experience of failures.

I trust the day’s compilation has delivered clear guidance for the good and peaceful living.

To continue….

MSV’s APPROACH TO SONG COMPOSITION [ A sample]

MSV’s APPROACH  TO SONG COMPOSITION  [ A sample]

எம் எஸ் வி அவர்களின் இசை அணுகுமுறைகள்         [ஒருசான்று ]

இது வரை எம் எஸ் வி யின் இசையின் உள்ளார்ந்த நுணுக்கங்களையும் வெகு பொருத்தமான ஸ்வர அமைப்புகளையும் வைத்து இயல்பாக பாவத்தை முன்னிலைப்படுத்தும் அதீத சரஸ்வதி கடாக்ஷத்தையும் இரு விற்பன்னர்கள் விவாதிக்க கேட்டீர்கள். அந்த கருத்துகள் எல்லாமே எம் எஸ் வி அவர்களின் இசையின் வெற்றிக்கான பின்னணி என்பதை என் போன்ற பாமரனும் அறிவான்.

இதை நான் சொல்லித்தான் நமது blog விற்பன்னர்கள் அறிந்து கொள்ள வேண்டுமா என்ன ?

அவை அனைத்தையும் அறிவர் அதற்கு மேலும் அறிவர். என்ன --அவர்களுக்கு நேரம் ஒதுக்க வோ கேள்விகளுக்கு விடை சொல்லவோ அவகாசம் /ஆர்வம் இரண்டும் இல்லை. எனினும் பதிவுகளை வழங்கி வருகிறேன். போகட்டும்,

திருமதி பிரியா பார்த்தசாரதி அவர்களும் திரு முரளி அவர்களும் விளக்கிய கருத்துகளை அசை போட்ட பொழுது

மூன்று தெய்வங்கள் படத்தில் எம் எஸ் வி இசையில் கண்ணதாசனின் 'வசந்தத்தில் ஓர் நாள் ' பாடலின் இசைத்தட்டு வீடியோ கிடைத்தது. கவிஞர் மரபு சார்ந்த சொற்களை கையாள்வதில் வித்தகர்

வைதேஹி என்ற பெயரை  நான் பார்த்தவரை கண்ணதாசன் தான் அதிகம் கையாண்டவர் ; இதே பாடலில் அவர் இறுதியில் சீதையை வாழ்த்த வந்தாரோ என்று வைதேஹி யார் என்று சொல்லாமல் சொல்லும் நேர்த்தியை காணலாம்.

மெல்லிசை மன்னர் இப்பாடலில் எவ்வளவு மென்மையான ட்யூன் கொடுத்து அதை எளிதாக வெற்றிபெறச்செய்தார் என்பது கவனத்திற்குரிய ஒன்று. 300, 400 இசைக்கலைஞர்களை கட்டி ஆண்ட சேனாபதி திரு எம் எஸ் வி அவர்கள்.

ஆனால் இப்பாடல் முழுவதிலும் 4 கருவிகள் மங்கல ஒலி வழங்கும் குழல், தபலா,  நாதஸ்வரமும் தவிலும், தான்.

குரலோடு ஒலிக்கும் தாளக்கருவி தவில் மட்டுமே .அதையும் அடக்கி வாசிக்க வைத்துள்ளார் .இடை இசையாக  முற்றிலும் ஒலிப்பது நாதஸ்வரம்.

எவ்வளவு கவனமாக இசையைதொகுத்துள்ளார் என்பதோடு எவ்வளவு பொருத்தமாக பாடலைக்கட்டமைத்துள்ளனர் இந்த மூன்று தெய்வங்கள், கண்ணதாசன், எம் எஸ் விஸ்வநாதன் மற்றும் பி சுசீலா அவர்கள்.

செய்வன திருந்தச்செய் அதையும் பொருந்தச்செய்   என்ற மரபில் வாழ்ந்தவர்கள் அவர்கள்.

திரு முரளி- திருமதி பிரியா பார்த்தசாரதி வீடியோ விற்கு  மேலும் ஒரு சான்று என்றெண்ணி இதை பதிவிட்டுள்ளேன். தவறெனில் மன்னிப்பீர் .இணைப்பு இதோ

https://www.youtube.com/watch?v=7z5UxZJKR6w vasanthaththil or naal                 

https://www.youtube.com/watch?v=uYr6uI824U8&t=149s QFR 188                 

 நன்றி  அன்பன்

A HAPPENING TO ABHOR

A   HAPPENING TO ABHOR வெறுப்பு தரும் நிகழ்வு இந்திய திருநாட்டை குறி வைத்து பலவித விரும்பத்தகாத   சம்பவங்கள் நிகழ்வதை நாம் அற...