Thursday, January 5, 2023

LASER IN SRIRANGAM -12

 LASER IN SRIRANGAM -12

ஸ்ரீரங்கத்தில் லேசர் – 12

கம்பீரமான 2 குத்துவிளக்குகள் அவ்விடத்தை அலங்கரிக்க , பத்ரி  சிறிய ஆட்டுக்குட்டி போல் கழுத்தில் தங்க செயின் மற்றும் முத்துமாலை யுடன் வந்தான் . உக்காருடா குழந்தே என்று வாத்யார் நரசிம்மன் அவனை உரிய இடத்தில் அமர்த்தினார்.. நான் சொல்றத ஒன்று விடாமல் சரியாக ஸ்பஷ்டமாக சொல் என்றார் .

 நிறுத்தி நிதானமாக சங்கல்பம் தொடங்கி அனைத்தையும் முறையாக பத்ரி க்கு புரியும் படி சொல்லி , பெற்றோரை மணையில் நிற்கச்சொல்லி பூர்வோத்தர தொடர்புகளை வரிசையாக சபையில் சொல்லி, கிரமமாக அரங்கேற்றி ,வந்திருந்த உறவினர்களை பையனை ஆசீர்வதிக்க சொல்லி தனித்தனியே அக்ஷதை சேர்ப்பித்தார்.. எதையும் புறக்கணிக்காமல் முறையாக நடத்தி,  குமார போஜனம், mini hair trim செய்வித்து , முடி திருத்தியவருக்கு வேஷ்டி சம்பாவனைமற்றும்   அது தொடர்பான  உள்ளிட்ட எல்லாவற்றையும்  நிறைவேற்றி வைத்தார்.

அனைவருக்கும் உதிரிப்பூவும் /அக்ஷதையும், சுமங்கலிகளுக்கு புஷ்பம் கொடும்மா என்று லேசருக்கு சொல்லிவிட்டு . பகவானே ஈஸ்வரா என்று எழுந்து சிரம பரிகாரம் செய்துகொண்டார்.  

ஏன் ஸ்வாமி கோவிந்தனை இன்னும் காணும் ? என்று வினவினார்    [ஸ்வாமி கோவிந்தன் பழுத்த வேத வித்து , மற்றும் பண்டிதர்களாலேயே மதிக்கப்படும் பாண்டித்யம் கொண்டவர்]  உதவியாளர் ரங்கன் “நேத்திக்கு சேலம் ஜட்ஜ் வைத்தமாநிதிக்கு சதாபிஷேகம் ராத்தரி வந்துடுவேன் னு சொல்லியிருந்தார் -டிரெயின்  லேட்டோ  என்னவோ”  என்று சொல்லிக்கொண்டே இருக்கும்போதே 12 திருமண் வைர கடுக்கன் ஜொலிக்க ---க்ஷமிக்கணும் சித்த கண் அசந்துட்டேன் என்று வாத்யார் நரசிம்மனை பார்த்து முஹூர்த்தம் ஆயிடுத்தா? என்றார் ப்ருஹஸ்பதி கோவிந்தன்

ஏ ள்ளா ஏ ள்ளா தேவரீர் வரணும் னு தானே காத்துண்டு இருக்கேன் . பையன் வந்ததும் ப்ரஹ்மோபதேசம் தான் . ஸ்வாமி அத நிறைவேத்திதரணும் னு பிரார்த்திச்சுக்கறேன் என்றார் கூப்பிய கரங்களுடன் வாத்யார் நரசிம்மன் .

பேஷா ஈஸ்வர சங்கல்பம் அப்பிடித்தான் னா - அடியேன் கட்டுப்பட்டுத்தான்னா ஆகணும்.

பட்டு உத்திரீயம் அணிந்து பத்ரி தாய் தந்தை இடையே நடந்து வந்தான் . அந்தக்காட்சியில் மெய் மறந்து நின்றார் ப்ருஹஸ்பதி கோவிந்தன்.

பூர்வாங்க ஜப -சிக்ஷைகள் ஆனதும் வெண் பட்டு கூடாரமென விரிய உள்ளே பத்ரி, வேதாந்தம், பிரஹஸ்பதி கோவிந்தன் அமர்ந்திருக்க லேசர் குள பாத்திரத்தில் தீர்த்தத்துடன் , ப்ரோக்ஷிக்க கூர்ச்சத்துடன் மற்றும் கூச்சத்துடன் ஒயிலாக வளைந்து நின்றிருக்க , காமெரா 2-3 முறை மின்னல் வெட்டியது. வீடியோ ஒளியை உமிழ்ந்து கொண்டே எல்லா காட்சிகளையும் விழுங்கிக்கொண்டே இருந்தது. 3 முறை காயத்ரி மந்த்ரம் சிறுவனின் காதில் தகப்பனாரை ஜபிக்கச்செய்து க்ரமாக ப்ரஹ்மோபதேசம் செய்து வைத்தார் ஸ்வாமி கோவிந்தன்.. குழந்தே இந்த மந்திரத்தை கெட்டியாக பற்றிக்கொள் ;காலம் காலமாக ரிஷிகள் வழங்கிய கொ டை போகப்போக இந்த மஹாமந்த்ரத்தின் சக்தியை நீ உணர்வாய் என்று ஆசீர்வதித்தார்.

கழுகின் அழைப்பில் கட்டுண்டு, ஒரு ஓரமாக கோவிந்தசாமி, தனம் நிற்க, சற்று தள்ளி லாவண்யா அவரவர் கையில் ஏதோ பரிசுப்பொருள் , பெருமாள் தாயார் , சக்கரத்தாழ்வார் படங்கள் . டிபன் சாப்பிட்டுட்டு வாங்கோ என்றான் ராமசாமி . சாப்பிட்டுட்டோம் சாமி என்றனர் மூவரும்.

அற்புத அனுபவமாக உணர்ந்தனர் பத்ரி,வேதாந்தம், வித்யா. மறக்காமல் கல்யாண கோஷ்டியினருக்கு  கோ. சாமி, தனம்    மற்றும் லாவண்யா ஆகியோரை அறிமுகம் செய்துவிட்டு , டேய் இவா இல்லே ன்னா , இவ்வளவு லக்ஷ்ணமா function நடந்திருக்குமா என்றான் கழுகு. உள்ளூர் நபர்கள் மூவரும் ஒரே குரலில் கழுகைப்பார்த்து நீங்க கேட்டு நாங்க செய்யாம இருப்பமா சாமி என்று நெகிழ்ந்தனர். அனைவருக்கும் வே -வி தம்பதி நன்றியும் வணக்கமும் தெரிவித்தனர், மேலும் இருந்து சாப்பிட்டுவிட்டு தான் போகணும் என்றும் தாம்பூலம் பெற்றுக்கொண்டே போகவேண்டும் என்றும், அவர்களுக்கு சேரவேண்டிய தொகையை சாப்பிட்டவுடன் வாங்கிக்கொள்ளலாம் என்றும் கௌரவமாக தெரிவித்தனர்.

பவ தி பிஷாந்தேஹி முறையாக செய்விக்கப்பட்டது .

கே.கு வின் நளபாகத்தில் விருந்தினர் அனைவரும் திளைத்தனர்.லேசர் உண்மையிலேயே வியந்தாள் - குழம்பு காய்வகைகள், சாற்றமுது, அக்கார அடிசல்,    பிற ஐட்டங்களை இவ்வளவுசுவையாக நிறைவேற்றிய வர்களுக்கு மனமார நன்றி பாராட்டினாள். இத்தனைக்கும் நடுவில் அம்ஜம் கை வண்ணத்தில் உருவாகியிருந்த திரட்டுப்பாலும் கொடிகட்டிப்பறந்ததை மறவாமல் நினைவு படுத்திக்கொள்ளத்தான் வேண்டும்.

சற்றுமுன் சொன்னபடி தாம்பூலம், பணப்பட்டுவாடா பிரஹஸ்பதி சம்பாவனை உள்ளிட்ட  இன்ன பிற செலவினங்களுக்கு ஆன தொகைகள் முற்றாக கொடுக்கப்பட்டு ஒரு ரம்யமான மன நிறைவு நிலவியது.

தொடரும்  அன்பன்  ராமன்     

 

 

Wednesday, January 4, 2023

PHOTOGRAPHY- 4

 PHOTOGRAPHY- 4

LENSES

Having reviewed certain aspects of ‘picture making’ with some essential basics of aesthetics, it is appropriate to recognize the relative merits of lenses. From the caption, it can be understood that a variety of lenses is available to suit specific tasks on hand.

Broadly, lenses belong to different classes named ‘Normal’ ‘Tele’ and ‘Wide’ based on the angle of view/ vision  that each version  serves to. Curiously , only those of the wide view capability are called |”Wide Angle lenses” while the others donot carry the ‘tag’ ‘angle’ as a part of the nomenclature.

It can be inferred that “Normal” lenses register images as ‘seen’ by human vision.

‘Tele’ lenses manage to register image details from reasonably far off locations. As for instance reistering a a bird of colourful plumage sitting atop a coconut tree or the fine details of fur on a squirrel nibbling some fruits on a tall tree without our having to climb the tree.

Every class of lens has a defined limit termed ‘focal length’

The longer the focal length the more the ‘tele effect’.

The shorter the focal lebgth the wider the coverage angle and so has ‘wide angle perspective’.

Those of optimal focal length limits are ‘normal lenses’ matching the perspective of the human eye.

TECHNICAL INFORMATION[ in mm]

Focal lengths in the range of 70 -200 are TELEPHOTO LENSES

Low limit lenses [85mm] are condidered ideal for portraiture – as they have right range of extending over human physical dimensional needs in a portrait.Long tele lenses [600 mm OR ABOVE] are of value in Wild life photography –[securing a safe distance from Wild animals.

Invariably tele lenses are ideal to capture details from distant objects without the risk of treading the ‘sensitive zone’. By 1980s there used to be a prominent claim that read “ It was our tele lens that cost Henry Kissinger –his place from the White House.

The purported impact was ascribed to a brand of Tele photo lens that could lay bare details of some deal between the then political bigwigs and HK was fixed for that lapse in guarding a secret from public gaze.

To continue

Prof. K.Raman

 

Tuesday, January 3, 2023

LASER IN SRIRANGAM -11

 LASER IN SRIRANGAM -11

ஸ்ரீரங்கத்தில் லேசர் - 11      

பரபரவென்று இயங்கினாள் அம்ஜம். ஐயோ மாமி இன்னும் திரட்டிப்பால் ஏற்பாடே ஆகலியே என்று ஓடிவந்தான் கே. கு.

நான் கிளறி கொண்டு வருகிறேன் நீ போ --மத்த வேலைகளைப்பார் என்றாள் அம்ஜம் . உயிர் வந்தவனாக சிரித்தான் கே.கு .

அம்ஜம் சூப்பர் திரட்டுப்பால் செய்து குங்கமப்பூ ஏலக்காய் , ஜாதி பத்திரி அளவாகக்கலந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டிவைத்தாள் . லேசர் கூட கேட்டாள் "ஏன் உருண்டை பிடிச்சுட்டேள்" அம்ஜம் சொன்னாள் "இல்லேன்னா ஒவ்வொருத்தியும் குழம்புக்கரண்டியால நெம்பி, பிள்ளை மாட்டுப்பெண் நாத்தனார் ஓர்ப்படினு வாரி வழங்கிட்டு ஊருக்குப்போயிடுவா. அப்புறம் நம்ப பாத்திரத்தை முகர்ந்து  பாத்துக்க வேண்டியது தான்.

லேசர் அதிர்ந்தாள் -அம்புஜம் பலே ஆசாமி தான் என்று.

கழுகு கேட்டான்  ஆமாம் அப்படியே பாத்திரத்தில் திரட்டுப்பால் வைப்பது தானே வழக்கம் .

அம்ஜம் கண்ணால் ஜாடை செய்து கழுகை உள்ளே அ ழைத்து தனியா கொஞ்சம் பாத்திரத்தில் இருக்கு அதை மணையில வெச்சுக்கலாம் என்றாள் . இப்போது கழுகு ஆஆ என்று வியந்தான்.

அனைத்துப் பொருள்களும் ஆட்டோவில் வீ யார் மண்டபத்தை சென்றடைந்தன. இரவு 10 மணிக்கு ராமசாமி தம்பதியினர் மண்டபத்திற்கு வந்து விட்டனர் . பின்னிரவு 3.30 க்கு காசிம் / பாபு குழுவினருடன் ஆஜர் . அதே சமயம் கே கு காப்பிக்கு ஏற்பாடு செய்ய, வாசலில் பிரம்மாண்ட கோலமிட சில மாமிகள் ஆயத்தம். இப்போது ஸ்கூட்டரில் போனி டெய்ல் தலையுடன் ஒருஇளம் சிட்டு வந்திறங்கி ராமசாமி இருக்காரா என கேட்க அம்ஜம்  ஆத்திரமும் மிரட்சியுமாக “நீ யாரம்மா” என்றாள் .

நான் பாரதிதாசன் யூனிவர் சிட்டியில் TRADITIONAL ART -HOD டாக்டர் சுபத்திரா என்றாள். இதற்குள் கழுகு வந்துவிட, வா வா வா என்று வாயெல்லாம் பல்லாக வரவேற்றான் .

உடனே ராமசாமி குதூகலமாக ஆகி விட்டது போல் தோன்றியது சின்ன  கழுகிற்கு. என்ன இளிப்பு என்று மனதிற்குள் பொங்கினாள்.     கழுகு அசருவாதாக இல்லை.. அவனே போய் சூடாக காபி வாங்கி வந்தான்   சுபத்திராவிற்கு      

 அடுத்த 4 நிமிடங்களில் சுபத்திரா வைக்காண வில்லை. . லேசருக்கு மடிசார் உடுத்திவிட்டுக்கொண்டிருந்தாள்  டாக்டர் சுபத்திரா. 12 நிமிடங்களுக்குப்பின் புதுப்புடவை சர சரக்க .லேசர் ஒரு அளவான சந்தன ச்  சிலைபோல் மிளிர்ந்தாள். ஹேமமாலினிக்கு வடகலை மடிசார் கன கச்சிதமாக உடுத்தப்பட்டிருந்தது. DRESSING TABLE கண்ணாடியில் தன்னைப்பார்த்துக்கொண்ட லேசரே -நானா இது என்று குழந்தை போல் பல கோணங்களிலும் தன்னைப்பார்த்து பொறாமை கொண்டாள்.       

  புடவை  உ டு த்திவிடுவதைக்கூட  ஆய கலைகள் போல் செய்து விட்ட்டாளே   அந்த குதிரை வால் கொண்டை  என்று மிகவும் ரசித்தாள் அம்ஜம்.

  டாக்டர் சுபத்திரா கேட்டாள் " வேறு யாருக்காவது மடிசார் உடுத்தணுமா?         3 பேர்  அவளைப்பயன் படுத்திக்கொண்டனர். இருந்து சாப்பிட்டுவிட்டு போ என்றான் கழுகு. இல்ல சார் ஆல் இந்தியா மீட் VALEDICTORY  9.30க்கு   ; போயிட்டு வந்து சாப்பிடறேன் என்று 4.50 க்கு விடை பெற்றாள். வேதாந்தம் வானில் மிதந்தான் எனில் மிகை அல்ல.

கே கு,  காசிம் உள்பட அனைவருக்கும் சுட சுட காபி வழங்கினான்.வேதாந்தம் இரண்டு ரவுண்ட் காபி பருகினான். அப்புறம் கழுகிடம் குதிரை  வாலியைப்பற்றி க்கேட்டதும்  -அப்புறம் சொல்றேண்டா என்ற கழுகு-- நான் அப்பவே சொல்லல சூப்பர் மாமியைப்பிடிச்சிருக்கேன்னு -என்றான்.

மாமியா இவ இத்துனூண்டு இருக்காளே? என்றான் வேதாந்தம். உடனே கழுகு டேய் அவளுக்கு 36 வயசு யூனிவர் சிட்டி ல HOD - அவளைக்கண்டாலே எல்லாருக்கும் நடுக்கம்டா பல்லை தட்டி கைல குடுத்துடுவா.

ஆனா உனக்கு எல்லாப்பல்லும் இருக்கே என்று வம்பிழுத்தான் வேதாந்தம்.

டேய் என்ன யார்னு நினைச்ச ? குதிரை ஒரு சிக்கல்ல இருந்த போது நான் தான் ஐடியா கொடுத்து எல்லா பணத்தையும் REFUND வாங்கிக்கொடுத்தேன். . அதுனால நான் சொன்னா  கட்டுப்படுவா .இன்னிக்கு அவ தான் மடிசார் உடுத்திவிட்டா - அவளப் போயீ இத்துனூண்டாங்கறியே என்றான் கழுகு.

பட பட பட பீ பி பீ என்று மங்கல வாத்தியம் முழங்கியது .

தொடரும்        அன்பன் ராமன்  

Monday, January 2, 2023

LASER IN SRIRANGAM- 10

 LASER IN SRIRANGAM- 10

ஸ்ரீரங்கத்தில் லேசர் --10

திடீர்னு பூவே இல்லங்கரா ளே சாத்தாரா வீதி முழுக்க என்று அதிர்ந்தாள்  அம்ஜம் . சரி அப்புறம் -இது கழுகு

திரட்டுப்பால் கிளற 3-லிட்டர் பால் வேணும் -இது அம்ஜம்

வேணும் வேணும் னா  கூரைலேர்ந்து குதிக்குமா ? இப்ப பார் நான் என்ன பண்ணறேன்னு  என்று ஸ்கூட்டரில் விர்  ரென பாய்ந்தான் வடக்கு வாசலில் . லாவண்யா வீட்டில் வந்து நின்றான். என்ன சாமி என்று ஓடி வந்தாள் லாவண்யா, மஞ்சள் பூசிக்குளித்துவிட்டு .

சுத்தமான பசும்பால் வேணும் 3 லிட்டர் அதுவும் இன்றே முடியுமா? என்றான் கழுகு.

 நேத்துதான் சாமி புது மாடு கரூரிலேர்ந்து வங்கியிருக்கோம். கண்டிப்பா உங்களுக்கு 4 லிட்டர் கூட தரேன் கொண்டு போங்க. உங்க ராசிக்கு எனக்கு நல்லா  ஓடும் வியாபாரம் , தரேன் கொண்டு போறீங்களா என்றாள்.  நல்ல பெரிய எவர்சில்வர் கூஜாவில் சுமார் 4 லிட்டர் பால் கழுகுவிடம் கொடுத்து ,பணம் நான் அப்புறமா வாங்கிக்கறேன் சாமி என்றாள். வெற்றிப்புன்னகையுடன் கழுகு வீடு திரும்பினான். 

பூ என்றாள் அம்ஜம் ;

என்ன “ப் பூ” இவ்வளவு தானாங்கறியா என்றான் கழுகு

அதில்ல நான் பூ வாங்கலியா னு கேட்டேன் என்றாள் . பாலைத்தூக்கிண்டு ஊர் சுத்தினா அது கெட்டுப்போய்டும். அதுனால அதை குடுத்துட்டு போகலாம்னு வந்தேன் . பூ கொஞ்ச நேரத்தில வாங்கித்தரேன் என்றான் கழுகு

இப்போது அம்ஜம் ஆச்சரியப்பட்டு கேட்டாள் -"சொன்ன உடனேயே வாங்கிண்டு வறேளே -எல்லா பால்காரனும் உதட்டை பிதுக்கிட்டு பாக்கலாம்மா னு நழுவறானே .

“நான் அப்பவே சொன்னேனே 'எல்லாம் இனிமே சஸ்பென்ஸ் தான் என்று” - கழுகு

அம்ஜம்  லேசாக ஜகா வாங்கினாள். பெரிய சஸ்பென்ஸ் என்று வலது கையை இடம் வலமாக ஆட்டினாள்.

கழுகுக்கு ப்புரிந்துவிட்டது அம்ஜம் தோல்வியின்  கோபத்தில்  அரற்றுகிறாள் என்று. 

சரி பூ எவ்வளவு முழம் என்ன பூ என்றான் கழுகு.

இவனை நன்றாக வேலை வாங்க வேண்டும் என்ற எண்ணத்துடன் 25 முழம் மல்லிகை , 15-16 முழம் கதம்பம்,  அரைக்கிலோ உதிரி என்று அடுக்கினாள்.

இதோ என்று ஸ்கூட்டரில்  ஹை ஸ்கூல் பக்கம் சுப்பிரமணி தெருவில் கோவிந்தசாமியை பிடிக்க போனான்.

கோவிந்தசாமிக்கு வேளை சரியில்லை போலும். தனம் [கோவிந்தசாமியின் மனைவி ] திருவானைக்காவல் பெண் பற்றிஅரசல் புரசலாக தெரிந்துகொண்டு கோவிந்தசாமியை உண்டு இல்லை என்று பிய்த்தெறிவாள் போல ருத்ரதாண்டவம் ஆட , கழுகுக்கு மூக்கு வியர்த்தது. இவனை மடக்க இதுவே சரியான வாய்ப்பு என்றெண்ணி கழுகு “கோவிந்தஸாமீ “   என்று உரத்த குரலில் அழைத்தான். கோவிந்தசாமி யின் ஆயுளில் அப்படி ஒரு நடுக்கம் தோன்றியதே இல்லை

ஐயோ    இப்போது ராமசாமிவேறு எதையாவது பற்றவைத்துவிட்டால் , ஆயுசுக்கும் துயரமே என்று குலை நடுங்கினான்.

கழுகு வாயை திறந்தவுடன் --- கோவிந்தசாமி “உங்களுக்கு என்ன வேணும் குறை இல்லாம செஞ்சு தரேன்” என்றான்.

அம்ஜத்தின் பூ லிஸ்டை  [25 முழம் மல்லிகை , 15 -16 முழம் கதம்பம் அரைக்கிலோ உதிரி ] அப்படியே  நாளை கொடு என்றான். கழுகு

கோவிந்தசாமியின் காதில் நாளை 'கெடு ' என்றொலித்தது . நீங்க நம்பி போங்க சாமி நான் உங்களுக்கு பூரா சரக்கையும் கொண்டாந்து சேத்து ர் றேன் . என்று கழுகை வழி அனுப்பி வைத்தான்.

தனத்திடம் இருந்து தப்பிக்க இது நல்ல சான்ஸ் என்று திருச்சி மார்க்கெட்டுக்கு ஓடிவிட்டான் கோவிந்தசாமி இல்லையேல் அவன் அப்போதே கோவிந்தா   சாமி ஆகி இருப்பான்.

சிறிய சந்தேகங்கள் சீரிய வாழ்வில் சீறும் நாகமெனக்கிளம்புவதை தடுக்கவோ தவிர்க்கவோ இயலாமல் மக்கள் அல்லலுறுவதும் ஈசன் செயல் அன்றி வேறென்ன ? கழுகுக்கு கோவிந்தசாமி மீது அனுதாபம் பிறந்தது. அவன் என்ன  பேசினாலும்  எடுபடாது . பாவம் கோவிந்தசாமி.

சரியாக காலை 4. 40 மணிக்கு ஒரு கூடை நிறைய புஷ்பச்சரங்கள், உதிரிப்பூக்கள் மனம்/ மணம்  கமழ கழுகு வின் வீட்டில் கொண்டு போய் சேர்த்தான் கோ . சாமி [அம்ஜம் அசந்தே போனாள் கழுகின் திறமையைக்கண்டு }

ராமசாமி கேட்டான் எவ்வளவு பணம் தரணும்.? 400/- பொழுது விடிஞ்சு வாங்கிக்கறேன் சாமி என்றான் கோ. சாமி அதை சொல்லி விட்டு கோ. சாமி தயங்கி நின்றான்.

என்ன? என்றான் ராமசாமி

ஏதாவது வேணும்னா போன் பண்ணுங்கய்யா , நான் கரெக்ட்டா செஞ்சு தர் றேன் என்றான் கோ. சாமி.

கழுகுக்கு கோ. சாமி இருக்கும் குழப்பநிலை புரிந்துவிட்டது . கவலைப்படாதே கோவிந்தா , நான் எந்த நிலையிலும் உனக்கு இடைஞ்சல் ஏற்படுத்தமாட்டேன் , நான் உன் வீட்டுப்பக்கம் வந்தால் சிக்கலில் மாட்டிவிடுவேன் என்று நினைக்கிறாய் . இந்த ராமசாமி யாருக்கும் தீங்கு நினைக்காதவன் ; நீ ஏன் குழம்புகிறாய் என்று ஆறுதல் சொல்லி , இரு என்று உள்ளே சென்று ஒரு கப் அம்ஜம் காப்பியை சூடாக தந்தான். கவலை நீங்கிய கோ. சாமி " சாமி குண்டன் கடை காப்பி ய விட  நல்லாருக்கே , நம்ம வீட்டு மாமி செஞ்சதா என்று நன்றிப்பெருக்குடன் பாராட்டிவிட்டு தனது செல் போன் நம்பரை தந்து விட்டு கோயிலுக்கு பூ கொண்டு போகணும் சாமி , வரே ங்கம்மாஎன்று சொல்லி விட்டு தெருக்குழாயில் காப்பி சாப்பிட்ட தம்ளரை சுத்தமாக கழுவி திண்ணையில் கவிழ்த்து விட்டு சைக்கிளில்  ஏறி விரைந்தான்.

கழுகு மனப்பூர்வமாக கோ. சாமி நன்றாக இருக்கணும் "ரெங்கா" என்று வேண்டினான்

அம்ஜம்  நமக்கு இவனிடம் சொல்லி பூ வாங்கிக்கொள்ள தோன்றவில்லையே , இந்த ராமசாமி நிச்சயம் அசகாயசூரன் தான் என்று தீர்மானமாக புரிந்து கொண்டாள்.

தொடரும்         அன்பன்  ராமன்  


Sunday, January 1, 2023

PHOTOGRAPHY – 3

 PHOTOGRAPHY – 3

Having had some idea of portraiture and perspective, it is opportune to consider the advantages of making pictures of Landscapes. As the name suggests the area of coverage has to be quite large, practically denying opportunities to critics on ‘Focus’ or ‘depth of field’- two aspects ready to lend themselves for easy criticism. Still, a landscape being of a large physical territory,the critics may feel handicapped to suggest “what could have been  the most ideal spot to have focussed on”

Besides, landscapes are simultaneously vague and captive—so to say an oxymoron to view! Also, minds which get initiated in to any art need to tumble down afew times before coming to grips with the ‘likely pitfalls’ that one may readily play into. If every failure is a stepping stone to success ,how can photography be any different?

SOME BASIC IDEAS TO REMEMBER  

Plain flat landscapes are the least impressive. On the contrary slopes, meadows and valleys readily hold the viewer’s attention at least  for a while. So, elements varying in size / shape/ colour/ hue enhance the ‘picture value’ by kindling a variety of emotional responses to viewers. Also, each viwer gets to hava a select emotion –‘all too exclusive’ for self. That way landscapes have both scape and scope to impress the ‘on lookers’.

EXPLOITING SOME FEATURES  :     Any talented worker chooses to make the best use of certain elements on the scene. Practically, these are objects like electric poles, a solitary tree, if nothing the very road can be availed of to furnish “LEADING LINES” to a picture.

A LEADING LINE IS JUST A LONG OBJECT or ROAD which draws the attention of the viewer from one end of the picture to near centre of the picture. Thereafter the viewer should keep searching the area for details. That is, [s] he should not  run the view beyond a certain locale in the picture. If the viewer’s eye is arrested to stay on the picture, it is a good piece of work. If not some captivating element is missing is the message to the photographer.

While capturing a picture along the road, instead of viewing the road from its centre , a camera angle from one of the sides of the road can insert ‘life; to the picture from the naturally existing curvature  along a road. Central view of the road ‘loses sight of curvature’. If curves are a part of the scene , it turns the product picturesque.

A POND FULL OF WATER:  It is always a comforting experience; more so if it has the moon’s image in water. A plain unruffled water surface with moon’s image looks rather mundne; instead  throw a tiny stone into water causing circular wave series and record the picture of moon with ripples on water , the appeal is far superior.  More to follow       K.Raman

WILLIAM BLAKE -5

  WILLIAM BLAKE -5                     Quotes-5 The tigers of wrath are wiser than the horses of instruction This quote chooses Tiger an...