Thursday, September 7, 2023

CINE DIRECTION/ DIRECTOR-6

 CINE DIRECTION/ DIRECTOR-6

திரை  இயக்கம் / இயக்குனர்-6

பொதுவாக படப்பிடிப்பில் பயன்படும் செயல் முறைகளைப்புரிந்து கொண்ட நாம், இன்னும் சில கருவிகளின் தேவை மற்றும் பிரயோகம் பற்றி விளங்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது. அவை, க்ரேன் மற்றும் டிராலி .டிராலி சமதளத்தில் கமெரா ஜெர்க் என்னும் குலுங்கல் இல்லாமல் முன்னும் பின்னும் நகர உதவும் உபகரணம். அதாவது காமெரா இயங்கிக்கொண்டிருக்கும் போதே இந்த முன் பின் இயக்கம் செயல்படுத்தப்படும். இதனால் காட்சி அப்படியே உள்ளே இழுப்பதாகவோ, வெளியே மெல்ல விலகுவதாகவோ படம் பிடிப்பிக்கப்படும். படிப்படியாக குறிப்பிட்ட கதாபாத்திரம் முக்கியத்துவம் அடைவதையும், முகபாவங்களை தெளிவாகக்  காட்டவும், டிராலி பயன்படும். ; மேலும் குறிப்பிட்ட லென்ஸ் மூலம் க்ளோஸ் -அப் உருவம் பதிவிடப்படும். இதை காமெரா தலைமையும், நம்பர் 1 ம் இரண்டாம் நபர் அறியாமல், லென்ஸ் மாற்றும் வேலைகளை நொடிப்பொழுதில் செய்துவிடும்.. எப்போது என்ன ஷாட், என்ன லென்ஸ் எல்லாம் முன்னரே இயக்குனருடன் விவாதித்து முடிவு எட்டப்பட்டிருக்கும் .

1961   க்கு முன் தமிழ் சினிமா ஸ்டூடியோக்களில் டிராலி  வசதி கிடையாது . அப்போது,   இயங்கும் காமெராவை மெல்ல அசங்காமல் சுமந்து கொண்டே செல்வர். பலர் அந்த கடினமான வேலையை திறம்பட செய்வார்கள். பின்னர் டிராலி           [2 தண்டவாளங்கள் மீது ஒரு 10 அடி நீளம் முன் பின் நகரும் பிளாட்பார்ம் , மெல்ல வழுக்கும் அமைப்பு], 1 அல்லது இருவர் முன்/பின் தள்ளுவர். அதே பிளாட்பாரம் மீது ஒளிப்பதிவாளர் அமர்ந்து லென்ஸ் வழியே பார்த்தபடியே செயல் படுவார். டிராலி இயக்கங்கள் கை அசைவால் உணர்த்தப்படும்.

பின்னாளில் zoom வகை லென்ஸ்கள் டிராலிக்கான தேவையை அநேகமாக நீக்கி விட்டன என்றே சொல்லலாம். ஆம் zoom  லென்ஸ்களில்  பல range திறன் கொண்டவை இருப்பதால் , தேவையான zoom லென்ஸை மாட்டி/மாற்றி போகஸ் மாறாமல் காட்சியை பெரிதாக விரிக்கவோ, சிறிதாக சுருக்கவோ இயலும் . அவை ஒன் டச் [one touch ] zoom வகையான வை. ஒரு விரலால் நகர்த்தினாலே மெல்ல முன்னோ/ பின்னோ அசைவின்றி நகரும். இந்த வசதிகளை மாத்திரம் தெரிந்து கொண்டு சினிமாட்டோகிராபி மிக எளிது என்று சிலர் பேசுவது எனக்கு எரிச்சலை த்தருகிறது. சரியான இயக்குனர்கள் இந்த நுணுக்கங்களை தலைமை மற்றும் நம்பர் 1 உடன் தெள்ளத்தெளிவாகப்பேசி அனைத்து லென்ஸ் வகைகளும் பட ப்பிடிப்பில் இருக்குமாறு பார்த்துக்கொள்வர். தேவைப்பட்டால் இயக்குனரே கூட டிராலியில் அமர்ந்து frame அமைப்பை சரி தானா என உறுதி செய்து கொள்வார்.

இவ்வளவையும் முறையாக திட்டமிடாமல் படப்பிடிப்பு துவங்கினால், நேர விரயம், பண விரயம் மன அழுத்தம் போன்ற திக்குமுக்காடல்களை எதிர்கொள்ள வேண்டி வரும். எனவே தேர்ந்த தொழில் நுட்பக்கலைஞர்களை முறையாக அணுகி, பயன் படுத்திக்கொண்டதிறமையான இயக்குநர்களால் 20-25 நாட்களுக்குள் அனைத்து வேலைகளையும் முடித்து வெகு விரைவில் படத்தை திரையிட முடிந்தது.பெரும் தொகைகளை க்கடன் வாங்கி படம் தயாரிப்பவர்கள், விரைந்து செயல்படாமல் இழுத்தடித்தால் பெருத்த நஷ்டமும் அவமானமும், மீளாத்துயரும், தலைமுறையைச்சூழ்ந்து கொள்ளும்.

சரி படச்சுருளை கழுவிப்பிரதிகள் எடுக்க ப்ராசெஸ் லேப் பொறியாளர்களுக்கு சில முக்கிய குறியீடுகள் உணர்த்தப்பட்டால், பிலிம் தன்மையை முழுவதும்பயன்படுத்தி,  வெற்றிகரமாக படத்தின் காட்சிகள் பளிச்சென திரையில் தோன்ற, [சரியான அடர்த்தியில் காட்சிகள் வெளிப்பட] சில துல்லியமான பிராசசிங் அணுகுமுறைகளை மேற்கொள்ள முடியும். அதற்கான குறியீடுகளை ஒளிப்பதிவாளர் தான் தெரிவிக்க இயலும். அவர் தரவேண்டிய குறியீடுகள் film brand , ASA ,emulsion batch no. ஜெனரல் லைட்டிங் மற்றும் தேவையான காமா இவையே.

அது என்ன காமா [GAMMA]?

காமா என்பது படம் பிடிக்கும் போது காட்சியில் இருந்த ஒரிஜினல் ஒளியின் அளவிற்கும், பில்மில் பதிவாகும் ஒளியின் அடர்த்திக்கும் உள்ள RATIO என்னும் விகிதம். ஒரு நாளும் 1 : 1 என்ற நிலையை ப்ரம்மனாலும் எட்ட முடியாது .ஏனெனில் பில்மின் ஒளி ஈர்ப்பு த்தன்மை  , பிலிம் வயது, பிலிம் STORE செய்யப்பட விதம் லென்ஸ்கள் கடத்தும் ஒளியின்  அளவு போன்ற காரணிகளால் 1 என்ற அளவுக்கு கீழாகத்தான் GAMMA இருக்க முடியும் எந்த குறையும் இல்லாத நிலையில் காமா 1: 0.8 என்ற உச்சத்தை அடைவதே கடினம்.

அந்த நாளைய ஒளிப்பதிவு அசுரன் அ .வின்சென்ட், பிராசஸ் பொறியாளர்களுக்கு தேவையான முக்கிய குறியீடுகளைக்கொடுத்து GAMMA 1:0.68 [அதாவது காமா 0.68] வருமாறு பார்த்துக்கொண்டு ஒளிப்பதிவின் தரம் குன்றாமல் பார்த்துக்கொள்வாராம். உழைப்பின் அருமை உழைத்தவனுக்குத்தானே தெரியும்.

வளரும்                  அன்பன் ராமன்

Wednesday, September 6, 2023

JANMAASHTAMI BONUS

JANMAASHTAMI BONUS  

Kannan songs 

Kannan pirandhaan engal https://www.youtube.com/watch?v=Y4vs1fau3CU

 

3Kannan vandhaan https://www.youtube.com/watch?v=tshIW-0nwOE

 


CINE MUSIC-6 –STRATEGIES-2

 CINE MUSIC-6  –STRATEGIES-2

திரைஇசை -6  உத்திகள் -2  

உத்திகள் பலவாறாக அறியப்பட் டும் அறிமுகப்பட்டும் இருந்த நிலையில் ஒரு மாறுபட்ட உத்தியாக சில குரல் ஒலிகள் ஊடாட விடப்பட்டு, உணர்ச்சிப்ரவாகம் கட்டவிழ்த்து விடப்பட்டு கேட்பவர்களை பரவசத்தில் ஆழ்த்துவது அல்லது துயரில் ஆழ்த்துவது. இரன்டையுமே தமிழ்த்திரைப்பாடல்கள் 1960 களில் அரங்கேற்றி ஒரு புத்துணர்ச்சியை வெளிப்படுத்தின.   பாடலில் இல்லாத ஒலி யில் [சொல்லில்] நாயகியோ  / நாயகனோ/ இருவருமோ  அவ்வப்போது பாட பாடல் ஒரு மாறுபட்ட பரிமாணத்தை வெளியிட்டது. இந்த நுணுக்கத்தை சிறப்பாக அரங்கேற்றியவர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி, பின்னாளில் எம் எஸ் விஸ்வநாதன். அதை பொருத்தமான இடத்தில் செய்ததனால் பாடலின் வீச்சும் தாக்கமும் பன்மடங்கு அதிகரித்தது .

சொல்லில்லா சுவை கூட்டுதல்

1961 ம் ஆண்டின் வரவான 'பாக்கிய லட்சுமி ' படத்தில் மொத்தம் 11 பாடல்கள். அவற்றில் பல வெற்றி வாகை சூடி வி-ரா எனும் இரட்டையரின் இசை சாம்ராஜ்யத்தை மேலும் விரிவு படுத்த உதவியது. மெ . ம   முத்திரைகளாக விளைந்த பாடல்களில் ஒன்றான காதலெனும் வடிவம் கண்டேன் பாடல் ஏற்படுத்திய திரை விந்தையை ப்பார்ப்போம்                  குரல் [P. SUSEELA]

இதோ இந்தப் பாடலை படியுங்கள் .                                                                                                    உங்கள் மனதில் என்ன உணர்வு தோன்றுகிறது?  சொல்லாடலின் சிறப்பு பொதிந்து கிடைப்பதென்னவோ உண்மை தான்.                     

காதலென்னும் வடிவம் கண்டேன்
கற்பனையில் இன்பம் கொண்டேன்
மாலையிடும் நாளை எண்ணி
மயங்குகிறேன் ஆசை கன்னி

                                                            [2]
ஓ ஓ ஓ ஓ ஓஹோ ஓ ஓ ஓ ஓ
ஆ ஆ ஆ ஆ..ஆஅஆஅ..ஆஅ..ஆஅ.ஆ. [RED]

துள்ளாமல் துள்ளும் உள்ளம்
மின்னாமல் மின்னும் கன்னம் [2]
தொட்டவுடன் மேனி எல்லாம்
துவண்டு விடும் கொடியைப் போலே
தொட்டவுடன் மேனி எல்லாம்
துவண்டு விடும் கொடியைப் போலே
                                                   [பல்லவி ]                    

ஓ ஓ ஓ ஓ ஓஹோ ஓ ஓ ஓ ஓ
ஆ ஆ ஆ ஆ..ஆஅஆஅ..ஆஅ..ஆஅ.ஆ.[ RED]

நாளெல்லாம் திருநாளாகும்,

நடையெல்லாம் நாட்டியமாகும்’
                                                     [2]
தென்றலெனும் தேரின் மேலே

சென்றிடுவோம் ஆசையாலே

                      [2]                 

           [பல்லவி]

பாடல் துவங்கு முன் இசையின் ஒலி அலைகள் ஒரு மாறுபட்ட களத்தில் சஞ்சரிப்பதாக தோன்றுகிறது

ஆனால் இந்த கவிதையை படித்த போது உணரமுடியாத சில உணர்வுகளை மெல்லிசை மன்னரின் கருத்தாழம் மிக்க கற்பனை பாடலுக்குள் புதைத்து வைத்துள்ள விந்தையை எண்ணி எண்ணி வியப்ப தைத் தவிர வேறொன்றும் சொல்வதற்கில்லை. ஆங்காங்கே சிவப்பு வண்ணத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் சொற்கள், கவிஞரின் கற்பனையில் உதித்தவை அல்ல என்றே எனக்குத்  தோன்றுகிறது. அதைக்குறிப்பிடவே இந்த வண்ண அமைப்பை பயன் படுத்தி உள்ளேன். ஏனெனில் இவை மெல்லிசை மன்னர் பாடலுக்குள் படரவிட்ட ஓசை நயம் மட்டுமல்ல, பெண்ணின் மனதில் கிளர்த்தெழுந்த உல்லாசம் என்றே உணர முடிகிறது. பொருத்தமான இடங்களில் இடை இசை நிறைவானதும் இந்த நளின ஆலாபனை பாடலை மேலும் வளப்படுத்தி உள்ளதை நன்கு உணரலாம்..       

என்னதான் கவிஞர் பாடலை ஆக்கி இருந்தாலும், மன்னர் அதே பாடலை உணர்ச்சிகரமாக மாற்றும் போது ரசிகனின் மனத்தில் முன்னர் இல்லாத குதூகலம் கொப்பளிப்பதைக்காணலாம். பாடல் துவங்கு முன் இசையின் ஒலி  அலைகள் ஒரு மாறுபட்ட களத்தில் சஞ்சரிப்பதாக தோன்றுகிறதை கவனிக்கலாம். மன்னர் என்னதான் செய்துள்ளார் என்று தேடினால், ஒரு இளம் பெண்ணின் [அதுவும் காதல் வயப்பட்ட நிலையில்] மனதில் கிளர்ந்தெழும் உணர்வுகளை எவ்வளவு ரம்மியமாக குதூகல இசை வடிவாய் பரிமளிக்க வைத்துள்ளார். கவிஞர் தந்தது பாதி, மன்னர் தந்தது மீதி என்பதே சாலப்பொருத்தம். இந்தப்பாடலை நான் சிலாகிக்க வலுவான காரணம் உண்டு. என்னவெனில் இயல்பான சொற்களில் கவி புனையப்பட்டிருப்பினும், சொல்லில் இல்லாத நளினம், பாடப்படும்  முறையில் மேலோங்கி நிற்கிறது என்பதே. இதில் மன்னர் தனது கை வரிசையை எங்கெல்லாம் நிறுவி உள்ளார் எனில் சில குறிப்பிட்ட சொற்கள் பாடப்பட்டவுடன், இசைக்கருவிகளின்  குறிப்பாக குழலின் குழைவு பாடலை வான் வெளியில் தவழச்செய்வது போன்ற உணர்வு ரசிகனைப் பற்றிக் கொள்வதை கவனியுங்கள். 'துள்ளாமல் துள்ளும் உள்ளம்' 'மின்னாமல் மின்னும் கன்னம் ' என்ற சொற்கோவை பாடப்பட்டதும், எவ்வளவு எளிதாக குழலின் ஆதிக்கம் தொடங்கி நம்மை பரவசப்படுத்துகிறது. மேலும், சொல்லை மீறிய சுவையாக பெண்ணின் குதூகலம் வெளிப்படும் வண்ணம் மன்னர் வடிவமைத்த இடை இசையின் நளினம் அடங்கும் பொழுது, ஓ ஓ ஓ ஓ ஓ மற்றும் அ அ ஆ ஆ என்று ஆலாபனை செய்தபடிபெண் ஆடி மகிழ்வது உண்மையிலேயே குதூகலத்தின் அடையாளமாகவே பரிமளிக்கிறது .மீண்டும் அதே போல ‘நாளெல்லாம் திருநாளாகும், நடையெல்லாம் நாட்டியமாகும்’ என்று கவிதை வரி பாடப்பட்டவுடன் இசைக்கருவிகளின் ஒலி சங்கமத்தில்  பாடல் ஆடல், இளமை, ரசனை அனைத்தும் ஐக்கியப்படும் தன்மையை விவரிக்க இயலாது. பாடலை கேட்டு ரசிக்கத்தான் இயலும்.

https://www.youtube.com/watch?v=5A9sX_rStpA 

சொல்லில்லா சுவை கூட்டுதல் போலவே வேறு பல உத்திகள் இசை அமைப்பாளரின் கற்பனையால் வலுவாக நிறுவப்பட்டு பாடல்கள் மேம்படுத்தப்பட்டுள்ளதை நாம் அறிவோம்.  

பிறிதொரு பாடலுடன் பின்னர் சந்திப்போம்.   அன்பன் ராமன் 

              

Tuesday, September 5, 2023

EDUCATION-6

 EDUCATION-6

கல்வி-6

புரியவில்லை என்று புத்தகத்தை மூடிவிட தெரிந்துகொண்ட நாம், புரிந்துகொள்ள என்ன வழி என்று ஏன் யோசிப்பதில்லை? ஊர் உலகமே ட்யூஷன் வகுப்புக்கு போகிறது என்று ஒரு கோர முடிவுக்குள் பயணிக்கிறோம். ட்யூஷன் ஒரு கல்பதரு - பணம் கொழிக்கும் முறை அநேக ஆசிரியர்களுக்கு; வெகு சில ஆசிரியர்கள் ட்யூஷன் வகுப்பினால் மாணவர்களுக்கு சிறப்பான கல்வியை தருகிறார்கள் ஆனால் அவர்களை மாநில அளவில் கூட   விரல் விட்டு எண்ணிவிடலாம் .

ஹோட்டலுக்கு போகுமுன் இது நல்ல ஹோட்டலா? சினிமாவுக்கு போகுமுன் இது நல்ல படமா என்பது போன்ற கேள்விகளை ட்யூஷன் ஆசிரியர் குறித்து கேட்பதில்லை. மாறாக கந்தன் ,சுந்தர், டேவிட் , சுமதி படிக்கிறார்கள் என்பதே நமது அளவுகோலாக இருக்கிறது . இறுதியில் நல்லவேளை பாஸ் ஆகிவிட்டான் என்று பேருவகை கொள்ளும் பெற்றோரே, ட்யூஷனுக்கே போகாதவர்களும் பாஸ் ; இந்த அழகில் ட்யூஷன் போனதால் பாஸ் என்றால் கேவலமாகத்தோன்றவில்லையா?.

1960 களி ல் ட்யூஷன் படிக்கிறேன் என்று வெளியில் சொல்ல கூசுவார்கள். நோட் / புத்தகத்தை பனியனுக்குள் திணித்துக்கொண்டு சுவர் ஓரமாக மங்கிய ஒளியில் பயந்து பயந்து ட்யூஷன் போவார்கள் . அப்போது ட்யூஷன் சமுதாயக்கேவலம். அன்றைய, ட்யூஷன் தேவை பெரும்பாலும் 70%கணக்கு, 15% ஆங்கிலம் கற்க என்ற அளவில் தான் இருந்தது. அந்த 15% மாணவர்களும் இன்றைய மதிப்பீட்டில் ஆங்கிலத்தில் 60% மார்க் பெரும் அளவுக்கு ஆங்கிலம் அறிந்தவர்கள் தான் ஆனால் அந்த வல்லமைக்கு அன்றைய மதிப்பீடு 25-30 % என்ற அளவில் இருந்தது என்ற உண்மையை அறியாது இன்றைய தலை முறை.

எனவே இயன்ற அளவு ட்யூஷனைத்தவிர்த்தல் நலம் . ஏனெனில் பல பாடங்களுக்கும் ட்யூஷன் பயிலும் எவரும் தன்னம்பிக்கை இன்றி குலை நடுங்கிக்கொண்டிருப்பதை என்போன்ற பேராசிரியனால் உணர முடியாதா என்ன? உள்ளதைச்சொன்னால் கோபம் பற்றி எரிகிறது எனவே தான் பிழை அகற்றும் உத்தியை அறியாமல் வீண் கோபமும் அகந்தையும் கண்ணை மறைக்க மேலும் மேலும் தீமையை வளர்த்துக்கொண்டே போகிறோம்.

புரிதலுக்கான முயற்சிகள்

ஆசிரியர் சொல்வதை நன்கு கவனியுங்கள். எந்த தெளிதலுக்கும் ஆசிரியன் ஒரு வழிகாட்டி. அவர் சொல்வதை செவி மடுத்தால் சொல்-பொருள் தொடர்புகள் விளங்கும். பொருள்விளங்காத எந்த தகவலும் மனதில் தங்காது. எனவே சொல் தான் ஆரம்பப்புள்ளி  சொல் மற்றும்  சொல்லை ப்புரிந்துகொள்ள ஆர்வம் கொள்ளுங்கள் எந்த சொல்லும் வசப்படும் . சொல் வசப்பட வேடுமெனில் பொருள் புரிய வேண்டும் .அதற்கு முதல் துணை ஆசிரியர்.

ஆசிரியர் எவ்வளவு திறன் குன்றியவராயினும் நிச்சயம் கருத்தை விளக்குவார். அப்போது கவனிக்காமல் விட்டுவிட்டு பின்னர் 'புரியவில்லை" என்பது உங்களுக்கு அணுகுமுறை புரியவில்லை என்பதை வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது. . இந்த கட்டத்தில் பயில்வோரின் உற்ற நண்பன் டிக்ஷ்னரி என்னும் அகராதி. அனைத்து துறைககளு க்கும் தனித்தனியே பிரத்யேக DICTIONARY கள் உள. காலப்போக்கில் அவற்றை வாங்கிவைத்துக்கொண்டால் பாடங்களில் மொழியினால் தோன்றும் இடர்ப்பாடுகளை முறையாக க்கடந்து தெளிவான புரிதலை வளர்த்துக்கொள்ளலாம். டிக்ஷனரி உபயோகிக்க பழகிக்கொண்டுவிட்டால், பிறர் உதவி இன்றி அறிதல் எளிதாகும் மேலும் சரியான பொருளும், சொல்வழக்குகளும் பயன்பாடுகளும் மிகச்சரியாக கற்றுக்கொள்ள முடியும். சில நேரங்களில் தனி மனிதர்கள் தவறான பொருளை கற்பித்துவிடும் தீங்கு நிகழாமல் தவிர்க்க இயலும்..   தன்னம்பிக்கை வெகுவாக வளரும். கற்றவனின் பலம் தன்னம்பிக்கையே அது ஆன்ம பலம் போன்றது;ஏனெனில் எந்தத்தகவலையும் சரியாகப்புரிந்து கொண்டு செயல்பட தன்னிறைவு, தன்னம்பிக்கை இரண்டையும் ஒரு நாணயத்தின் இரு முகங்கள் போல இணைத்தே உருவாக்கும் திறனில் கல்விக்கு நிகர் கல்வியே என்பதே உண்மை. வேறு எந்த பலமும் ஏதோ ஒரு காரணத்தால் சிதைவுறலாம்/ மதிப்பிழக்கலாம், கற்ற கல்வி உங்களின் ஆழ்மனச்சொத்து அதன் பூரண உரிமையாளர் நீங்களே, பிறர் யாசித்துப்பெறலாம் ஆனால் ஒருபோதும் அபகரிக்க இயலாது.எனவே புரிந்து கொண்டே படிப்பது என்ற தீவிர நிலைப்பாட்டை கற்கும் குழந்தைகளுக்கு ஆழமாக உணர்த்திவிட்டால் கல்வி ஒரு விளையாட்டு போல் ஊக்கமும் ஆக்கமும் தரும்.

மேலும் வளரும்

அன்பன் ராமன்

 

7

FLOWER ENGINE

  FLOWER ENGINE              18-11-26 அஹிரவதா மலர் எஞ்சின் என்னடா இது தலை வேதனை என்கிறீர்களா ? நீங்கள் சொல்வது இருக்கட்டும் பல...