Thursday, April 11, 2024

Director P MADHAVAN

  Director P MADHAVAN

இயக்குனர் திரு பி. மாதவன்

திரு பி மாதவன் துவக்கத்தில் இயக்குனர் TR ரகுநாத் அவர்களிடம் உதவி இயக்குனராக இருந்தார். பின்னர் ஸ்ரீதரிடம் இணை இயக்குனராக பனி புரிந்தார். 1963 முதல் தனித்து இயக்குநராகபயணித்து தனக்கென முத்திரை பதித்தவர். திரு சிவாஜிகணேசனின் பல படங்களை இயக்கிய பெருமை திரு பி. மாதவன் அவர்களுக்கு உண்டு. கிட்டத்தட்ட அதே பெருமை திரு சி வி ராஜேந்திரன் அவர்களுக்கும் உண்டு. இவர்கள்           இருவருமே வெவ்வேறு காலகட்டங்களில் இயக்குனர் ஸ்ரீதரின் உதவியாளர்கள் .அதன் தாக்கமோ என்னவோ, இவர்களின் பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் திரு பி என் சுந்தரம் அவர்கள், அதேபோல இவர்களின் பெருவாரியான படங்களுக்கு இசைத்துறைக்கு கண்ணதாசனும் ,எம் எஸ் விஸ்வநாதனும் அளித்துள்ள பங்களிப்பு மகத்தானது.மாதவன் அந்தக்காலத்திய BA பட்டதாரி. கம்பீரமாக ஆங்கிலம் பேசுபவர். யதார்த்தகதைப்போக்கு இவரின் சிறப்பு. அடிதடி சண்டைகள் இவர் படங்களில் வெகு குறைவு ஆனால் மனப்போராட்டங்கள் தொடர்பான காட்சிகள் இருக்கும். எனவே இவரின் அநேக படங்கள் கருப்புவெள்ளை வகையினை, சில வண்ணப்படங்களும் உண்டு.

இவரின் முதல் படம் மணி ஓசை

மணி ஓசை [1963] ஆட்டுக்குட்டி ஆட்டுக்குட்டி மாமாவைப்பாரு " கண்ணதாசன் இசை வி-ரா , குரல் எல் ஆர் ஈஸ்வரி . [ஆட்டுக்குட்டிக்கு குரல் சதன் ]

பாடல்,   நாயகன் கல்யாணகுமாரின் பண்புகளை விவரிக்கும் களம்.  இந்தப்பாடலில் சிங்கள் கிளாப் [SINGLE CLAP ]அழகாக ஒலிக்கிறது .எவ்வளவு உழைத்திருக்கின்றனர் அந்தக்காலத்தில்? . கேட்டு ரசிக்க

https://www.google.com/search?q=AATTUKKUTTI+AATTUKKUTTI+MAAMAAVAIPPAARU+VIDEO+SONG&oq=AATTUKKUTTI+AATTUKKUTTI+MAAMAAVAIPPAARU+VIDEO+SONG+&gs_lcrp=EgZjaHJvbWUy

தேவன் கோயில் மணி ஓசை கண்ணதாசன் , வி-ரா , சீர்காழி கோவிந்தராஜன்

நம்மை அறியாமல் ஒரு மௌன சூழலை விதைக்கும் பாடல். கண்ணதாசன் சொல்லாட்சி மிளிரும் பாடல், துன்பப்பட்டோருக்கு ஆறுதல் தரும் சொற்கள், தெய்வீக இசை மற்றும் விசேஷமாக ஒலித்த மணி [அதற்கு ஒரு பின்னணி உண்டு ]உரிய நேரத்தில் அதைப்பற்றி பேசுவோம்]. பாடலு க்கேற்ற  ஒளிப்பதிவு [சுந்தரம்].. கேட்டு ரசிக்க இணைப்பு

https://www.google.com/search?q=devan+koilk+mani+osai+video+song+download&newwindow=1&sca_esv=835ba0ee2498b9ce&sca_upv=1&sxsrf=ACQVn0_M85HDWAjE-wNEedOAf1B2lEmm8w%3A171282

அன்னை இல்லம் [1963], மடிமீது தலை வைத்து -கண்ணதாசன் , கே வி மஹாதேவன் , டி எம் எஸ், பி சுசீலா

அமைதியான இரவுப்பாடல் அச்சு அசல் மஹாதேவ இசைக்கருவிகள் , அவற்றின் மென் அதிர்வுகள் , நிகழ்வுகளை மிகவும் கௌரமாக வர்ணித்த பாடல். மீண்டும் சுந்தரம் ஒளிப்[பதிவாளராக  பரிமளிக்க பாடல்.கேட்க இணைப்பு

https://www.google.com/search?q=MADIMEEDHU+THALAI+VAITHTHU+VIDEO+SING+&newwindow=1&sca_esv=28539f6bd3358b60&sca_upv=1&sxsrf=ACQVn0_FYXr76S8i4XBhAKMVvb5OZNmPZg%3A1

தெய்வத்தாய்  ஒரு பெண்ணைப்பார்த்து நிலாவைப்பார்த்தேன் -[1964]   வாலி, விஸ்வநாதன் ராமமூர்த்தி டி எம் எஸ்      பி சுசீலா

நான் பேசி விளக்கவொண்ணாத வகைப்பாடல்

பட்டையை கிளப்பிய டிரம்ஸ் போங்கோ சஞ்சாரம், குரலில் கம்பீரம் நடையில் மிடுக்கு , சொல்லில் துடுக்கு, என்று அடுக்கலாம். மிகவும் துடிப்பான நடன அசைவுகள். எடுத்த எடுப்பிலேயே மிரட்டும் [DRUM], NOEL GRANT/

[BONGO] GOPALKAKRISHNAN இருவரும் பின்னிப்பெடல் எடுத்த பாடல், அதுவும் இறுதியில் விழும் தாள வீச்சு கள் அனாயாசம் கேட்டு குதூகலிக்க இணைப்பு.

https://www.google.com/search?q=ORU+PENNAIPPAARTHTHU+NILAVAIPPAARTHTHEN+VIDEO+SONG&oq=ORU+PENNAIPPAARTHTHU+NILAVAIPPAARTHTHEN+VIDEO+SONG+&gs_lcrp=EgZjaHJvbWUyBggAE

இன்னும் வளரும்

நன்றி

அன்பன் ராமன்

Wednesday, April 10, 2024

SINGER-- P LEELA

 P LEELA

பி லீலா

தாய் மொழி மலையாளம் எனினும்  தமிழில் ஒலித்த முதல் சில பெண் குரல்களில் லீலா மிகவும் பிரசித்தம் . அந்தககாலகட்டத்தில் முற்றிலும் கர்நாடக வகை பாடல்களில் பாட சங்கீத ஞானம் ஒரு பெரும் மூலதனம். அவ்வகையில் லீலா முன்னணிப்பாடகி எனில் மிகை அன்று [அன்றைய பிறர் ஜமுனா ராணி, ஜிக்கி, ஏபி கோமளா , எம் எஸ் ராஜேஸ்வரி -இவர்களே. பின்னர் தான் சுசீலாவின் இசையப்பயணம் துவங்கியது]. லீலா ஒரு மகத்தான பாடகி என்பதை மறுப்பதற்கில்லை .

1 மிஸ்ஸியம்மா [1955] என்னை ஆளும் மேரி  மாதா , தஞ்சை ராமையாதாஸ் , இசை ராஜேஸ்வரராவ் ,குரல் பி லீலா

 

மிகவும் உருக்கமான பாடல் நான் அறிந்தவரை , தமிழ் சினிமாவில் தோன்றிய முதல் சர்ச் வகைப்பாடல் இதுதான் என்றெண்ணுகிறேன். பெரும் வரவேற்பு பெற்ற இசை குரல், கவிதை. சாவித்ரியின் அசாத்திய திறமைகளில் மிளிர்ந்த பாடல்களில் இப்பாடலும் ஒன்று . கேட்டு ரசிக்க

https://www.youtube.com/watch?v=zAdH32ONpJY

2  மிஸ்ஸியம்மா [1955] வாராயோ வெண்ணிலாவே , தஞ்சை ராமையாதாஸ் , இசை ராஜேஸ்வரராவ் ,குரல் பி லீலா

வாராயோ வெண்ணிலாவே என்று ஏ எம் ராஜா அழைத்துப்பாட , சாவித்திரியும் அதே நிலவை வைத்துப்பாட ஒரு சுவையான பாடல் , லீலாவின் மென் குரலில் சாவித்ரியின் வெகு இயல்பான நடிப்பை காணலாம். இருவர் இடையே நிகழும் வாதங்கள் தான்  பாடல் ;அன்றைய வெற்றிப்பாடல்களில் ஒன்று .

 இணைப்பிற்கு

https://www.youtube.com/watch?v=IgwgUekr-68

3 குலேபகாவலி [1955] வில்லேந்தும் வீரரெல்லாம்  -தஞ்சை ராமையதாஸ் , விஸ்வநாதசுன் ராமமூர்த்தி, பி லீலா, ஜி கே வெங்கடேஷ் .

இது ஒரு பகடை விளையாட்டுப்பாடல் பின்னணியில் சதி செய்து ஏமாற்றுவதாக கதை.டீ ஆர் ராஜகுமாரிக்கு குரல் கொடுத்துள்ளார் பி லீலா . கேட்டு உணர இணைப்பு இதோ

https://www.google.com/search?q=villendhum+veerarellaam+song+video&oq=villendhum+veerarellaam+song+video+&gs_lcrp=EgZjaHJvbWUyBggAEEUYOTIHCAEQIRigATIHCAIQIRigATIHCAMQIRigATIH  P LEELOA, GK V V-R,

4 உத்தம புத்திரன் [12958] காத்திருப்பான் கமலக்கண்ணன் பாடல் -சுந்தர வாத்யார் , இசை ஜி ராமநாதன், குரல் பி லீலா .

அந்நாளில் பலரையும் கட்டிப்போட்ட நாட்டியப்பாடல் , ஜி ஆர் அவர்களின் இசை நளினம் பரிமளிக்க உத்தம புத்திரன் [12958] காத்திருப்பான் கமலக்கண்ணன் பாடல் -சுந்தர வாத்யார் , இசை ஜி ராமநாதன், குரல் பி லீலா .அந்நாளில் பலரையும் கட்டிப்போட்ட நாட்டியப்பாடல் , ஜி ஆர் அவர்களின் நளினம் பரிமளிக்க உலவிய பாடல் லீலாவின் குரலில், சங்கதிகளை எப்படி உள்வாங்கிப்பாடியுள்ளார் லீலா. பாடலுக்கு இணைப்பு இதோ 

 பாடல் லீலாவின் குரலில், சங்கதிகளை எப்படி உள்வாங்கிப்பாடியுள்ளார் லீலா. பாடலுக்கு இணைப்பு இதோ

https://www.google.com/search?q=KAATHTHIRUPPAAN+KAMALAKKANNAN+VIDEO+SONG&oq=KAATHTHIRUPPAAN+KAMALAKKANNAN+VIDEO+SONG+&gs_lcrp=EgZjaHJvbWUyBggAEEUYOTIJCAEQIR

5 பாகப்பிரிவினை [1959] தாழையாம் பூ  முடிச்சு -கண்ணதாசன் , வி-ரா , டி எம் எஸ், பி லீலா அந்த நாளில் பெரிதும் வலம் வந்த கிராமியப்பாடல் . எம் எஸ் வி யின் நெடிதுயர்ந்த குரலில் கிராமத்து ஆலாபனை முழங்கி இறுதியில் சட்டென்று '' என்று நிறுத்தி அசாதாரண தாக்கம் தந்த பாடல். கவிஞர் தந்த சொற்களில் எவ்வளவு கருத்துச்செறிவு. . கேட்கக்கேட்க நம்மை ஆட்கொள்ளும் கம்பீரம். லீலா கிராமத்து மரபில் சொற்களைப்பாடி அசத்தி இருக்கிறார். அது ஒருபுறம். . கை ஊனம் ஆயினும் குதித்துக்களித்து நடம் புரியும் சிவாஜி.

ஒரு கேள்வி. இன்று எந்த ஹீரோவாவது எருமையின் மீது அமர்ந்து நடிப்பாரா? அப்படி எனில் கிராபிக்ஸ் எருமையை வைத்து வேண்டுமானால் நடக்கலாம் . போகட்டும் . காட்சியில் தான் ஏழ்மையே அன்றி கவிதையோ செழிப்பானது . வாதப்பிரதிவாதங்களை கேளுங்கள். இந்தக்கவிஞன் அசாத்திய திறமையாளன்

"தாயாரின் சீதனமும் தம்பி மார் பெரும் பொருளும் மாமியார் வீடுவந்தால் போதுமா? அது மானாபிமானங்களைக்காக்குமா ?” என்று கேட்கும் ஆண்  

மானமே ஆடுகளாம் , மரியாதை பொன் நகையாம் , நாணமாம் குணம் இருந்தால் போதுமே , எங்கள் நாட்டுமக்கள் குலப்பெருமை தோன்றுமே என்று பெண் பதில் சொல்ல பாடல் இயல்பாக பயணிக்கிறது. இந்தப்பாடலை அதி அற்புதமாக சுபஸ்ரீ அவர்களின் விளக்கத்துடன் திரு நாராயணன் மற்றும் சாஸ்வதி இருவரும் வழங்கி பாடல் கம்பீரமாக ஒலிக்கிறது .எனவே முதலில் QFR பாடலை கேட்டு விட்டு பின்னர் ஒரிஜினல் [திரைக்காட்சியை ] மிகுந்த கவனத்துடன் கேளுங்கள் .சில கருத்துகளை முன் வைக்கிறேன்

https://www.google.com/search?q=thaazhaiyaam+poo+mudichu+qfr+song&newwindow=1&sca_esv=40ca4543c95fb865&sca_upv=1&sxsrf=ACQVn09PFJxprLBd6x_Gcosn0wI8lZHLwA%3A1712537078240&ei=9j0TZou qfr 110

சொல்லை ப்புரிந்து கொள்ளாமல் பாடி, கவிதையின் நேர்த்தி குன்றி கதாபாத்திரங்களின் நிலைப்பாடு தடுமாறுகிறது. இது போன்ற குறைகளை தவிர்ப்பது நல்லது ஏன் என்றால் இந்தப்பழி கவிஞருக்கு போய் சேரும் அபாயம் உள்ளது.

மானமே ஆடுகளாம் , மரியாதை பொன் நகையாம் என்ற விளக்கத்தை

மானமே ஆடுகளாம் , மரியாதை புன்னகையாம் என்று பாடி, பொன் நகைக்கு ஈடாக புன்னகையை வைத்துவிட , [பொன் நகையும், ஆடுகளும் சீதனம் ஆகும்], புன்னகை எப்படி சீதனம் ஆகும்? இந்த சொல்லாட்சி பொருந்துமா? கவிஞர் மானம்[ஆடு] மரியாதை[பொன் நகை]  இரண்டும் சீதனம் என்கிறார் அதை மாற்றி புன்னகை என்று பாட,  பொருள் மாறிவிட்டதே என்பதே ஆதங்கம் .இப்போது திரையில் வந்த பாடலைக்கேளுங்கள் , நான் சொல்வது என்ன என்று புலப்படும்

https://www.google.com/search?q=thaazhaiyaam+poo+mudichu+video+song&oq=thaazhaiyaam+poo+mudichu+video+song+&gs_lcrp=EgZjaHJvbWUyBggAEEUYOTIHCAEQIRigATIHCAIQIRigATIHCAMQIRigAd thazhaiyaam poo pl tms msv tkr

இது போன்ற பல பெருமைமிக்க பாடல்களை வழங்கிய லீலா 2005 ம் ஆண்டில் மறைந்தார்.

நன்றி

அன்பன் ராமன்

Tuesday, April 9, 2024

HONESTY

HONESTY 

நேர்மை

'நேர்மை' பற்றி DEFINITION [விளக்கம் ] யாதெனில்

உதட்டில் உறைவதும் , உள்ளத்தில் ஒளிந்து மறைவதும் என்ற ஒற்றைப்பண்பே 'நேர்மை' எனப்படும் .                                                

 நீ தர்மத்தைக்குழி தோண்டி புதைத்துவிடுவாய் போலிருக்கிறதே என்று ஓர் நேர்மையாளர் பொங்கிக்கொதித்து நெற்றிக்கண் திறக்கிறார்.                அன்புடையீர் சற்று அமைதி கொள்வீர். அடியேனின் கூற்று இன்றையய வெகுஜன நிலைப்பாடு  இதில் தாங்கள் குமுறுதல் ஏனையோரை எள்ளளவும் பாதிப்பதில்லை என இன்னுமா உணர வில்லை.. அண்ணாமலையே தெய்வம் என்று படை எடுக்கும் பக்தர் கூட்டம் கோயிலுக்கு வெளியே எவன் ஏமாறுவான் என்று வலை விரித்து காத்திருப்பதை அறியாதவரா தாங்கள்? போகட்டும் இதுநாள் வரை இதே  நேர்மையின் பின் அணிதிரள்வோர்  செய்துகொண்டிருந்தது என்ன? நமது [அதாவது நம் மக்களின்] நேர்மை பற்றிய புரிதல் எல்லோரும் நேர்மை வழி நடக்கவேண்டும் , நான் அவ்வப்போது கருத்து சொல்வேன்.இயன்றபோதெல்லாம் வேறு வழியில்லாமல்  நேர்மையை பின் பற்றுவேன் என்பதே பலரின் நிலைப்பாடு   .     

என்ன நாட்டில் நேர்மையாளர்கள் இல்லையா? என்று வினா எழுப்புவோர் கவனத்தில் கொள்க--. 'நேர்மை 'என்பது ஒரு கொள்கை வடிவில் அதிகமும் செயல் வடிவில் அருகியும் விட்ட ஒரு செயல் முறை உபதே கள யதார்த்தம். . சரி இது ஏன் எனில் -கண்ணெதிரில் நிகழும் நடைமுறைகள்., ஊழல், லஞ்சம் , அபகரிப்பு போன்ற செயலில் திளைத்து பொருள் குவிப்போர் பல்கிப்பெருகி விட  , நேர்மையை பின்பற்றநினைப்போர் படும் துயர் எண்ணற்றது. ஏன் எனில் நேர்மை என்பது .வேள்வி போன்றது . வேள்வியில் செயல் முறைகள் கடுமையானவை.. எதையும் வழுவாமல் பின்பற்றி நியாயத்தின்பால் நிற்பது எளிதன்று. ஒரு சாதாரண செயல்பாட்டில் கூட நம்மால் நேர்மையைகைக்கொள்ளுவது 'வேப்பங்காய்'  போல தோன்றுகிறது.

எங்கே மனசாட்சியை அடகு வைக்காமல் சொல்லுங்கள். .. ஒரு விண்ணப்ப பாரம்  வாங்கும் வரிசையில் எப்படியாவது இடையில் நுழைந்துவிட முயற்சிக்காதவர்களா நாம்? நான் அப்பவே வந்துவிட்டேன் தண்ணி குடிக்க போயிருந்தேன் என்று நமக்கு முன்னே நிற்க எல்லா ஜாலவேலையும் நடப்பதை அன்றாடம் பார்க்கிறோமே. இதோ இருக்கே பானை -இதிலா என்று யாராவது கேட்டால் ஒருவினாடி முகம் மாவடுவாய் சுருங்கி உடனே சுதாரித்துக்கொண்டு நான் அங்கே ஐஸ் வாட்டர் குடிக்கப்போனேன் என்று ஒரு குழப்பமான திக்கில் கை காட்டி தப்பிக்கப்பார்ப்பார். அங்க ஏது ஐஸ் வாட்டர் என்று வேறொருவர்க்கேட்க, போனேன் ஐஸ் வாட்டர் இல்ல -சரினு திரும்பி வந்துட்டேன் [பதில் =வந்துட்டேன் னு சொல்லு ரகம் ]. ஆஹா என்னே நமது நேர்மை?. பார்க்கவேண்டும் இவர்கள் மகரிஷி போல் உபதேசிப்பதை.-- காணக்கண்  கோடி வேண்டும்..  சரி நிகர் சமான சமத்துவம் க்யூ வரிசையில் நிகழ்கிறது அல்லவா.? ஆம் சரி நிகர் தான் பெண்கள் இது போல் நுழைவதில் கைகாரிகக்ள் என்பதை என்னால் அடித்துச்சொல்ல  முடியும்.இயல்பாகவே பெண்கள் குறித்து 'போகட்டும்'என்று பலரும் அனுமதிப்பதனால்  இந்த மாதிரி இடைச்செருகல் முயற்சிகளைவெகு சரியாக நிறைவேற்றிக்கொள்கின்றனர்.

நான்இந்த வகைஇடைச்செருகல் முயற்சிகளை    முற்றாக வெறுக்கிறேன் , என் வாழ்நாளில் அதை நான் செய்யவே மாட்டேன் என்று சொல்ல எத்தனை பேரால் முடியும்? இதில் போலித்தனம் இல்லாமல் விடை தேடுங்கள் அப்போது தெரியும் நாம் நேர்மைக்கு தரும் மதிப்பு என்னவென்று. மற்றும் இரு  நிகழ்வு கள் இவற்றையு ம் 'நேர்மையின் சான்றாக 'பார்க்கலாம்.. கல்லூரிகளில் செயல்முறை ரெக்கார்ட் /விடைத்தாள் / அசைன்மென்ட் கட்டுரையை ஆசிரியரின் மேசையில் வைக்கும் போது, நாலா புறமும் கண்ணை சுழலவிட்டு யாராவது பார்க்கிறர்களா என்று கவனித்து -யாரும் இல்லாதபோது தான் அது வைக்கப்படுகிறது . எப்படி? பலரின் நோட் /கட்டுரை / விடைத்தாள் இவற்றிற்கு அடியே சொருகுவார்கள் [ஆண்  /பெண்  இருபாலரும்]. ஆசிரியர் இதை[ [எனது பேப்பரை]  முதலில்பார்த்துவிட்டால் . --ஈவு இரக்கமின்றி முட்டை போட்டுவிடுவான்; அதனால் மெதுவாகப்பார்க்கட்டுமே என்றொரு நிலைப்பாடு. இரண்டாவது நான் முதலிலேயே வைத்துவிட்டேன் என்று சொல்லிக்கொள்ள ஏதுவாக அடியில் சொருகிவிடுவது. என்ற ஒரு கெட்டிக்கார த்தனம்.. இந்த ஜாலவித்தை அறியாதவனா என்ன அந்த ஆசிரியன்?   

ரேஷன் கடை உட்பட எந்த க்யூ வரிசையிலும் யாரை யாவது தனது பினாமி போல் நிறுத்தி , பொருள் வழங்க இன்னும்2  நிமிடம் என்ற நிலையில் பினாமிக்குப்பின் நின்று கொண்டு நான் அப்போதே வரிசையில் இருந்தேன் என்று சால்ஜாப்பு சொல்லி பலர் கண்ணில் மண்ணைத்தூவி ரேஷன் பொருள்வாங்கும் ஆண்  பெண் ,யுவன் யுவதி, ஏழை பணக்காரன் எந்த பாகுபாடும் இன்றி எளிதாக ஏமாற்றும் அன்றாட வித்தையில் நம்மை வீழ்த்த யாரால் முடியும்? புதிதாக யாரவது பிறந்து வந்தால் தான் உண்டு. இவை அனைத்தும் உணர்த்துவது யாதெனில் concept ஆவது கத்தரிக்காயாவது, convenience தான் முக்கியம் என்று சொல்லாமல் சொல்லும் ஜாலம் இதற்கு நேர்மை உதவாது ; எனக்கு உதவாத நேர்மை எதற்கு என்று நேர்மையின் முகமதிப்பீடு [face value ] நம்மை விட அறிந்தோர் இவ்வுலகில் உளரோ ?  ஈசனுக்கே வெளிச்சம் .

தொடரும்

அன்பன் ராமன்

Monday, April 8, 2024

SALEM SUNDARI- 3

 SALEM SUNDARI- 3

சேலம் சுந்தரி-3

சுந்தரி, இன்னும்ஒரு நபர்  வேலை க்கு வரவில்லை என்று புகார் சொன்னது திரு மாடசாமியைப்பற்றித்தான்

சுந்தரி நல்லவள்  தான் தாயில்லாப்பெண் . நன்கு படித்து சொந்த முயற்சியில் போட்டித்தேர்வு எழுதி வேலை யில்  சேர்ந்து இப்போது 14 மாதமாக வேலைபார்க்கிறாள். வேளையில் நல்ல கெட்டிக்காரி, கம்பியூட்டர் பயன்பாடு அறிந்தவள். சொந்த ஊரிலேயே தனியார் வியாபார ஸ்தலம் ஒன்றில் பில்லிங் செக்ஷனில் வேலைபார்த்தவள் . ஆனால் பலரின் போக்கு பிடிக்காமல் [குறிப்பாக சில மேலதிகாரிகள் மற்றும் உரிமையாளரின் மகன்கள் இருவர் -இவர்களின் பார்வையே பிடுங்கித்தின்பதாக இருப்பது] அவளால் பொறுக்கவோ புறக்கணிக்கவோ முடியவில்லை. 

அதனால் அந்த நரகத்தை விட்டு வெளியேற அரசு வேலை குறிப்பாக மத்திய அரசு வேலை யில் எப்படியாவது தகுதி அடிப்படையில் சேர்ந்தால்  தான் வாழவும் தங்கையை கரை சேர்க்கவும் இயலும் , என்று தீர்மானித்து விடா  முயற்சியால் இப்போது வேலையில் இருக்கிறாள் .

[சுப்புரத்தினத்தின் ஹோட்டல் தோசை வயிறு காட்சி தற்செயல் நிகழ்வு] ;மேலும் அனுபவத்தில் இவர்கள் ML என்று கிளம்பிவிட்டால் , சில மாதங்களுக்கு டைப்பிஸ்ட் இல்லாமலே வேலைகளை கண்காணிக்க நேரும் என்ற எச்சரிக்கை உணர்வினால் வயிற்றை கவனிப்பவர் வேறு விபரீதங்களை அவர் இன்றளவும் நினைத்ததில்லை

சுந்தரியின்  தங்கை 8 வகுப்பு தான் படித்துள்ளாள் ஆனால் நல்ல திறமை சாலி ; டெய்லரிங் /எம்பிராய்டரி இரண்டிலும் நல்ல திறமையை வளர்த்துக்கொண்டு கௌரவமாக ஒரு பெண்மணியின் கார்மெண்ட் ஷோரூமில் குறைந்த வருமானத்தில் கௌரவமாகவாழ்கிறாள்.அவளுக்கு வயது 20 தாண்டிவிட்டது , அவளுக்கு ஒரு நல்ல பையனைப்பார்த்து கல்யாணம் செய்ய உள்ளூர தீவிர யோசனையில் இருக்கிறாள் சுந்தரி  

சரி இப்போது என்ன சுந்தரி புராணம் ?என்றொருவர் நறநறக்கிறார்.

இந்த தங்கை ப்பாசம் தான் காலையில் தன்னிலை மறந்து ஏதேதோ தவறுகளை செய்து HR வரை போய் வசவு வாங்கி வேதனையில் ஆழ்த்தியது. இதில் ஒரு வினோதம் இன்னும் சுந்தரிக்கே [26] மணமாகவில்லை. 

நறநறத்தவர் இப்போது இரண்டு தாடையும் விலகி பரிபூரணமாக பற்கள் தெரிய சிரிக்கிறார் வேறொன்றுமில்லை சுந்தரிக்கே இன்னும் திருமணம் ஆகவில்லை  என்ற தகவலை நான் சொல்லிவிட்டேன் அல்லவா. மேலும் அவர் ELIGIBLE BACHELOR எனவே கொஞ்ச்சம் நிலை தடுமாறிட்டார் , பட்டால்,  தானே திருத்துவார்.

சரி லெட்டர் அடிக்க சொன்னாரே சுப்புரெத்தினம் ....... 

திடீரென்று அது ஞாபகம் வர 2 லெட்டரையும் நீட்டாக அடித்து 2 ROUGH காபி எடுத்து சுப்புரெத்தினம் டேபிளில் வைத்டுவிட்டு திரும்பினாள் மணி 12.05 ஒரு கையில் பெரிய மூட்டை மறுகையில் சூட்கேஸ் , அய்யனார் மீசையுடன் ஆஜானுபாகுவாக உள்ளே வந்தார் திரு மாடசாமி இப்போது திரு மாடசாமி ஸ்பெஷல் SQUAD LEADER , தென்னக ரயில்வேயின் கேரளப்பகுதியில் ட்யூட்டி முடித்து வருகிறார் வண்டி 3 மணி நேரம் லேட். நல்லா இருக்கீங்களா  என்று சுந்தரிக்கு தான் முதல் விசாரிப்பு. பின்னர் ஒவ்வொருவராக விசாரித்துவிட்டு பெரிய மூட்டையை பிரித்தார் .

மூட்டையில் என்ன என்று உள்ளூர எல்லோருக்கும் ஆவல் , இருக்காதா  பின்னே ?

தொடரும்

அன்பன் ராமன்

WILLIAM SHAKESPEARE- 10

  WILLIAM SHAKESPEARE- 10              The day’s compilation of ‘quotes’ from Shakespeare are indeed crisp and powerful. I request our vie...