Thursday, April 10, 2025

P B SRINIVAS -10

 P B SRINIVAS -10

பி பி ஸ்ரீனிவாஸ் –10

யார் யார் அவள் யாரோ [பாசமலர் -1962] கண்ணதாசன் , விஸ்வநாதன்-ராமமூர்த்தி , பி பி ஸ்ரீனிவாஸ், பி சுசீலா.

இது போன்ற பழைய பாடல்களை கேட்டால் தான் தெரியும் தமிழ் சினிமா எந்த உயரத்தில்  இருந்து சறுக்கி சரிந்துவிட்டது என்று. அதனால் உனக்கென்ன? என்போர் அநேகர். ஆனால் நடுத்தர வர்க்கத்தினருக்கு எளிதில் கிடைத்துக்கொண்டிருந்த பொழுதுபோக்கு இப்போது அருவருப்பாக மாறிவிட்டதை சொல்லாமல் விட முடியவில்லை. கருப்பு வெள்ளைப்படத்தில் அன்றைய கொடைக்கானலின் அமைதியான சாலைகள், சோலைகள் , பனிபடர்ந்த சூழலில் காரிலும், காலிலும் பயணித்த இந்த சினிமா ஜோடி [ஜெமினி-சாவித்ரி] பாடல் கேட்கவே மகிழ்ச்சி தோன்றும்.

நேர்த்தியான இசை ஆஹா ஹஹ் ஹஹ ஹாஹா , மற்றும் ஹஹா ஹஹா ஒஹோ என்று ஹம்மி விட்டு யார் யார் யார் அவள் யாரோ என்று ஆண் துவங்க, ஊர் பேர் தான் தெரியாதோ என்று காதலிக்க வந்தனை சாவித்ரி எவ்வளவு முகபாவம் காட்டி [அதுகூட தெரியாம வந்துட்டியாக்கும் என்பது போல ] மடக்கி முடக்குகிறார். ஒவ்வொரு சரணத்திலும் ஆண்  வாங்கிக்கட்டிக்கொள்ளும் நிலையை கவிஞர் வெகு எளிதாக - பெண் மூலம் 'மயங்க வைத்தாளோ ? மற்றும் மஞ்சள்  குங்குமம் மலர் கொண்டாள் ,, மனதையும் சேர்த்து ஏன் கொண்டாள் ? [நீ தான் ஜொள்ளு விட்டாய்] என்ற இலக்கிய நய நையாண்டி  . முக பாவங்களை ஊன்றி கவனித்து நடிப்பின் பரிமாணங்கள், சொல்லாடல் இசையின் வசீகரம் எதையும் நன்கு ரசிக்க இணைப்பு

yar yar yaar [pasa malar 1961] kd  v r pbs ps

https://www.google.com/search?q=tamil+movie+pasamalar+1961+yar+yar+yar+aval+video+song+download&newwindow=1&sca_esv=929e6fda5b57cc4c&sxsrf=AHTn8zp_nY4viLC9Q-fRxakrbhCs0MIk7g%3A1744181405423&ei=nRj2Z8LKGd_g1e8Ppe74iAw&oq=TAMIL+MOVIE+PAsa+malar+1961yar+yar+yar+aval+video+song+&gs_lp=Egxnd3Mtd2l6LXNlcnAiN1RBTUlMIE1PVklFIFBBc2EgbWFsYXIgMTk2MXlhciB5YXIgeWFyIGF2YWwgdmlkZW8gc29uZyAqAggAMgcQIRigARgKSNN9UOkFWIBwcAF4AZABAJgBsgKgAYUyqgEIMC40LjI0LjG4AQHIAQD4AQGYAh

காலங்களில் அவள் [பாவ மன்னிப்பு -1961]] கண்ணதாசன் , விஸ்வநாதன்-ராமமூர்த்தி , பி பி ஸ்ரீனிவாஸ்

இந்தப்படம் தமிழ் சினிமாவின் இசை வரலாற்றைப்புரட்டிப்போட்டதைப்போலவே திரு பி பி எஸ் அவர்களின் வாய்ப்பினையும் பன்மடங்கு உயர்த்திய பெருமை இதே "பாவ மன்னிப்பு" படத்திற்கு உண்டு. மேலும் ஜெமினி கணேசனுக்கு ஏற்ற குரலாக்க பரிணமித்து எண்ணற்ற வாய்ப்புகளை பெற்றார் திரு பி பி எஸ் . இப்பாடல் பகவத் கீதையின் சில கருத்துகளை பயன்படுத்தி அமைந்தகிது. அற்புதமான அமைப்பு மென் இசை மற்றும்முற்றிலும் புதிய இசைக்கருவித்தொகுப்புகள் என பெரும் வெற்றி ஈட்டியப்பாடல். கேட்டு மகிழ இணைப்பு

kalangalil [pavamannippu-1962] kd v r pbs

https://www.google.com/search?q=pava+mannippu+movie+1962+kalangalil+aval+vasantham+video+song+&newwindow=1&sca_esv=929e6fda5b57cc4c&sxsrf=AHTn8zqDhMluErcY66REPft1ex_A6RaWGg%3A1744181900495&ei=jBr2Z9n0HdeZvr0PrZrX8As&ved=0ahUKEwjZ6uj0r8qMAxXXjK8BHS3NFb4Q4dUDCBA&oq=pava+mannippu+movie+1962+kalangalil+aval+vasantham+video+song+&gs_lp=Egxnd3Mtd2l6LXNlcnAiPnBhd

மாடி மேலே மாடி கட்டி [கா. நேரமில்லை] கண்ணதாசன், விஸ்வநாதன் ராமமூர்த்தி , பிபி ஸ்ரீனிவாஸ் குழுவினர்.

 

உனக்காச்சு எனக்காச்சு என முதலாளியை வம்பிழுக்கும் ஊழியனின் பாடல். இப்படி ஓர் பாடலை எவருக்கும் கொடுத்திருக்கலாம். னால் ரவிச்சந்திரனுக்கு குரல் பொருந்திவந்ததால் பி பி எஸ் பாடியுள்ளார். ஆழியார் விருந்தினர் இல்லம் அருகே  படப்பிடிப்பு.வின்சென்டின் வண்ண ஒளிப்பதிவின் ஆளுமை பளிச்சிடக்காணலாம் .67 வயதிற்குப்பின்னும் காட்சியில் கேமரா பேசுவதை  கவனியுங்கள்.ரசித்து மகிழ இணைப்பு இதோ.  

https://www.google.com/search?q=you+tube+madimela+madi+katti+video+song+download&oq=YOU+TUBE+MADIMELA+MADI+KATTI+VIDEO+SONG+&gs_lcrp=EgZjaHJvbWUqCQgBECEYChigATIGCAAQRRg5MgkIARAhGAoYoAEyCQgCECEYChigATIJCAMQIRgKGKABMgkIBBAhGAoYoAEyBwgFECEYjwLSAQkzMDczM2owajSoAgCwAgE&sourceid=chrome&ie=UTF-8#fpstate=ive&vld=cid:bbf5b0fe,vid:mEXrU_TYBdA,st:0 

எங்கெங்கும் உன் உருவம் [கண்ணம்மா] கண்ணதாசன், இசை :சங்கர்   -கணேஷ் , குரல் பி பி ஸ்ரீனிவாஸ்

வெகு இயல்பான நடையும் , நடிப்பும் கிராமத்து சூழலில் புல்புல் தாரா இசை நிகழ்ச்சியில் ஊடாடும் காதல் , காதல் பார்வை, பொது மக்களின் பங்கேற்பு என பயணித்த நல்ல பாடல் முத்து ராமன் -கே ஆர் விஜயா பங்கு கொண்ட காட்சி. கண்டு மகிழ இணைப்பு இதோ .

https://www.google.com/search?q=tamil+movie+kannammaa+%27engengengum+un+uruvam+%22+video+song+&newwindow=1&sca_esv=4b2a9fe84d6be48a&sxsrf=AHTn8zq8QTsPN5xpPsrYSn0Cfw78YkE5vg%3A1744032251877&ei=-9HzZ_unNZne1e8Pr_Ca8QY&ved=0ahUKEwi7kea2gsaMAxUZb_UHHS-4Jm4Q4dUDCBA&oq=tamil+movie+kannammaa+%27engengeng S G  1972 pbs

நிறைவு

அன்பன் ராமன்

Wednesday, April 9, 2025

DIRECTOR - P MADHAVAN -4

 DIRECTOR - P MADHAVAN -4

இயக்குனர் பி மாதவன் -4

உன் கண்ணில் நீர் வழிந்தால் வியட்னாம் வீடு-1970, கண்ணதாசன் இசை ; கே வி மஹாதேவன் , குரல் டி எம் எஸ்

நீண்ட நெடு வாழ்வு வாழ்ந்து வயோதிக நிலை எட்டிய தம்பதியாக சிவாஜி, பத்மினி , இவள் மட்டுமே தன்னுடன் பயணிக்கிறான் என்பதை உணர்ந்து உணர்த்தும் கணவன். உன் கண்ணில் நீர் வழிந்தால் என பாவம் கொட்ட. அவளின் மகத்துவத்தை " வேரென நீ இருந்தாய் , நான் வீழ்ந்து விடாதிருந்தேன் " என்று அவளின் சிறப்பை கவியரசர் பேச , மாமா கே வி மஹாதேவன் இசையில் டி எம் எஸ் உணர்ச்சி பொங்க பாடியுள்ளார். பாடலுக்கு இணைப்பு இதோ

UN KANNIL [VIETNAM VEEDU 1970] KD KVM TMS

https://www.google.com/search?q=vietnam+veedu+movieunkannil+neer+vazhindhaal+video+song+download&newwindow=1&sca_esv=51482c3aa25c1847&sxsrf=AHTn8zqXpSp-G58RUqXLpB4Bs73QjAW15Q%3A1744171026960&ei=EvD1Z6iwOvLgseMPx_7l-QI&oq=vietnam+veedu+movieUNKANNIL+NEER+VAZHINDHAAL+VIDEO+SONG+&gs_lp=Egxnd3Mtd2l6LXNlcnAiOHZpZXRuYW0gdmVlZHUgbW92aWVVTktBTk5JTCBORUVSIFZBWkhJTkRIQUFMIFZJREVPIFNP

'தொடுவதென்ன தென்றலோ' [சபதம் 1971] கண்ணதாசன்  இசை : ஜி கே விங்கடேஷ் குரல்: எஸ் பி பாலசுப்ரமணியன்

விரக தாப பிடிப்பில் உழன்று பாடும் வாலிபன் . ஆரம்ப கால எஸ் பி பி, பாவங்களை பிழிந்து கொப்பளிக்க , பாடல் வெண்  மோகம் போல் மிதக்க, கேட்பவர் வயப்பட  மிக்க மென்மையான இசைக்கோலம் கருவிகளும் குருவிகள் போல் மென் குரலில் ஒலிக்க , கேட்க தெவிட்டாத பாடல். புன்னகை அரசி-ரவிச்சந்திரன் முக பாவங்களை ரசிக்க இணைப்பு இதோ

THODUVADHENNA THENDRALO SABATHAM [1971 ] KD  GK V , SPB

https://www.google.com/search?q=thoduvadhenna+thendralo+video+song+download&newwindow=1&sca_esv=51482c3aa25c1847&sxsrf=AHTn8zqCRxTuLZbdXAw-ldB58-m15uwE9Q%3A1744169391040&ei=r-n1Z8iWApKxseMPiaDssQo&oq=THODUVADHENNA+THENDRALO+VIDEO+SONG+&gs_lp=Egxnd3Mtd2l6LXNlcnAiI1RIT0RVVkFESEVOTkEgVEhFTkRSQUxPIFZJREVPIFNPTkcgKgIIADIFECEYoAEyBRAhGKABMgUQIRigATIFECEYoAEyBRAhGKABSKq4AlCxZVic9gFwA3gBkAEAmAG8AaABuyKqAQQwL

மண மேடை [ஞான ஒளி -1972] கண்ணதாசன் , எம் எஸ் வி, பி சுசீலா

ஒரு சோகம் இழையோடும் காதலை சொல்லும் பாடல். . இருவரும் கிறித்தவ மரபினர் என்று உணர்த்தும் இசையின் நடை . பாடல் நெடுகிலும் தேவாலய ரீங்கார இசை அமைப்பைக்காணலாம்; பூங்காற்று, பெருமூச்சு போன்ற சொல் அமைப்புகள் சோகபிம்பங்கள். என்று கேட்டாலும் சஞ்சலம் ஏற்பட வைக்கும் மகோன்னதம் பாடலுக்கு இணைப்பு இதோ 

MANA MEDAI [GNAANA OLI-1972] KD MSV PS

https://www.google.com/search?q=gnaana+oli+movie+mana+medai+video+song+download&newwindow=1&sca_esv=51482c3aa25c1847&sxsrf=AHTn8zol8l179XqVfRtsQ_CQWkwYREhJnA%3A1744170534225&ei=Ju71Z8DCDa2fseMP_oT7mA4&oq=gnaana+oli+movie+MANA+MEDAI+VIDEO+SONG+&gs_lp=Egxnd3Mtd2l6LXNlcnAiJ2duYWFuYSBvbGkgbW92aWUgTUFOQSBNRURBSSBWSURFTyBTT05HICoCCAAyBxAhGKABGAoyBxAhGKABGAoyBxAhGKABGAoyBxAhGKABGAoyBxAhGKABGApI52ZQoAZYxE9wAXgBkAEAmAHzAaAB7CKqAQ

சிவகாமி ஆட வந்தால் [பாட்டும் பரதமும் - 1975] கண்ணதாசன் , எம் எஸ் வி, டி எம் எஸ் , பி எஸ்

காட்சியில் இரு பெரும் கலைஞர்கள் போட்டியிட , பாரதக்கலையின் மாண்பினை உணர்த்திய ஆக்கம். நடன இயக்கங்களுக்கெனவே ஆக்கப்பட்ட இசை , தாள நடைகள். பாடலை சிதம்பரம் ஆலய அமைப்பில் காட்சிப்படுத்தி உள்ளனர். கேட்டு ரசிக்க இணைப்பு இதோ 

SIVAGAAMI  AADA PAATTUM BHARATHAMUM,1975, KD MSV TMS PS

https://www.google.com/search?q=paattum+barathamum+movie+sivakami+aada+video+song+download&newwindow=1&sca_esv=51482c3aa25c1847&sxsrf=AHTn8zrxgWKexdMfcm6cFjBdSCMNwFHXcA%3A1744170015284&ei=H-z1Z5qVEZWTseMPoc_bgQU&oq=PAATTUM+BARATHAMUM+MOVIE+SIVAKAMI+AADA+VIDEO+SONG+&gs_lp=Egxnd3Mtd2l6LXNlcnAiMlBBQVRUVU0gQkFSQVRIQU1VTSBNT1ZJRSBTSVZBS0FNSSBBQURBIFZJREVPIFNPTkcgKgIIADIHECEYoAEYCjIHECEYoAEYCjIHECEYoAEYCjIHECEYoAEYCkj6gwFQ6gdYoGpwAXgBkAEAmAHaAaABwBmqAQYwLjI1LjG4AQHIAQD4AQGYAhmgAtUYwgIKEAAYsAMY1gQYR8ICBxAjGLACGCfCAgo KD MSV TMS PS 1975

காதல் ராஜ்ஜியம் எனது [மன்னவன் வந்தானடி -1975] கண்ணதாசன் , எம் எஸ் வி, டி எம் எஸ், பி சுசீலா

அதியற்புதமான காவியச்சொல்லாடல் , ஓசை நயம் இசை நளினம், ஓங்கி மிளிர்ந்த இசைக்கூறுகள் நிறைந்த  காதல் பாடல். ஒரு சில பாடல்களில் மட்டுமே காணக்கூடிய சொற்கட்டுகள் என பன்முக சிறப்பு கொண்ட ஆக்கம். மெல்லிசை மன்னர் ஒவ்வொரு சொல்லுக்கும் முக்கியத்துவம் தந்து சொற்களை அழகு படுத்தி , பிரத்யேக இசை வழங்கும் ஒரு ராட்சசன் . ஒரு கல்லில் இரண்டு மாங்காய்அல்ல மூன்று மாங்காய்கள்  என்பது போல படப்பிடிப்பு என்ற ஒரே செயலில், கவிதை, இசை மற்றும் அதன் உள்ளார்ந்த சிறப்புகள் அனைத்தையும் குழி தோண்டி புதைத்த  ஒரு கொடூரம் இந்தப்பாடல். பாடல் துவக்கம் முதல் ஓடும் குதிரையின் குளம்பொலி ஒலிக்க, திரையில் குதிரை கழுதை போல் நடந்து வரும் காட்சியை எவ்வாறு மனம் உவந்து உருவாக்கினார்?கொடுமை . இணைப்பு இதோ

KAADHAL RAAJJIYAM [MANNAVAN VANDHAANADI -1975\ KD MSV TMS PS

https://www.google.com/search?q=MOVIE+MANNAVAN+VANDHAANADI-KADHAL+RAAJJIYAM+ENADHU+VIDEO+SONG+&newwindow=1&sca_esv=51482c3aa25c1847&sxsrf=AHTn8zqp29J_wf9Z1MtOtK-X-BFqj3dxsQ%3A1744171318589&ei=NvH1Z-nlI_WdseMPponrqAg&ved=0ahUKEwjp2Py-iMqMAxX1TmwGHabEGoUQ4dUDCBA&oq=MOVIE+MANNAVAN+VANDHAANADI-KADHAL+RAAJJIYAM+ENADHU+VIDEO+SONG+&gs_lp=Egxnd3Mtd2l6LXNlcnAiPk1PVklFIE1BTk5BVkFOIFZBTkRIQUFOQURJL

நிறைவு

நன்றி

அன்பன் ராமன்

Tuesday, April 8, 2025

LET US PERCEIVE THE SONG – 17

LET US PERCEIVE THE SONG – 17

பாடலை உணர்வோம் -17

பொன்னெழில் பூத்தது புது வானில் [கலங்கரை விளக்கம் -1966] பஞ்சு அருணாச்சலம், எம் எஸ் விஸ்வநாதன் , டி எம் எஸ் , சுசிலா

கதைக்களம் மஹாபலிபுரம் . நாயகன் நாயகி இருவரும் பல்லவர் காலத்து பாத்திரங்களாக சித்தரிப்பு. சமகால நபர்கள் எனினும் மனதளவில் சரித்திர காலத்தில் இருக்க உடையும் அணிகலன்களும் பல்லவ பாணியில் அமைத்துள்ளனர். தற்கொலைக்கு முயலும் நாயகியை தடுத்து நிறுத்த துவங்கும் சொல் ' சிவகாமி ' என வெளிப்பட, நாயகனை நோக்கி அவள் திரும்ப, காட்சி துவங்குகிறது. பெண்ணின் பின்னோக்கிய பார்வையை ஈர்க்க ஒரே சொல் தான் பாடலை துவங்குகிறது.

ஆம் -சிவகாமி, சிவகாமி என்ற ஆண்  குரல் ; குரல் ஈர்ப்பில் நாயகி ஐக்கியம் கொண்டு ஓ ஓ ஒ ஓ ஓ என்று பங்களிக்க , மெல்லிசை மன்னரின் இசைக்கோலம் துவங்குகிறது ; அதுவும் எப்படி ? ஒரேகூட்டம் --வயலின் கூட்டம் , bow என்னும் வில் அனைத்தும் முனைக்கு முனை தந்திகளை உரசி முன்னும் பின்னும் போய் வர , ஒரு தேவலோக சூழல் பின்னிக்கொள்ள மென் குரலில் 'பொன்னெழில் பூத்தது புதுவானில் , வெண்  பனி தூவும் நிலவே நில் என்ற பல்லவிக்கேற்ப இசையும் நின்று விட  ஜல் ஜல் ஜல் என்று சிவகாமி ஓட மீண்டும் பாடல் உயிர் பெறுகிறது. சொற்களுக்கான இசை பாடல் நெடுகிலும் வியாபிக்க, ஒருவருக்கொருவர் முன்னாளில் காட்டிய நெருக்கம் வர்ணனையில் பாடலாக பயணிக்க இது ஒரு 'தொற்று' ப்பாடல் ஆம், கே ட்டவரை தொற்றிக்கொண்டு , உள்ளூர ரீங்கரித்து சிறைப்படுத்தும் . இந்த வகை பாடல் அமைப்பில் எம் எஸ் விக்கு நிகர் அவரே தான்.

இது அற்புதமான சொல்லாடலும், இலக்கிய மணமும் ,மரபும் நிறைந்த ஆளுமை. இப்போதும் கூட இது கவியரசரின் எழுத்துதான் போலும் என நினைப்போர் ஏராளம் அவ்வளவு நயமும் நேர்த்தியும் அன்றைய சமகால பாடல்களை விட தூக்கலாக மிளிர்வதைக்காணலாம். கருப்பு வெள்ளை படம், எனினும் பாடலில் எந்த ஈர்ப்புக்கும் பஞ்சம் இல்லை. இப்பாடல் ஆய்வுக்குகந்தது -குறிப்பாக, சொற்கட்டுகள், இசைக்கருவிகள், தாள அமைப்புகள், வேறுபாடுகள் என பன் முகங்கள்.. அடுத்த பதிவில் விரிவாக பேசுவோம் .

பாடலுக்கு இணைப்பு 

முதலில் கவிதையை நன்கு உள்வாங்குதல் நலம்   

https://www.google.com/search?q=ponnezhil+pooththadhu+pudhu+vaanil+video+song&oq=ponnezhil+pooththadhu+pudhu+vaanil+video+song+&gs_lcrp=EgZjaHJvbWUyBggAEEUYOTIJCAEQIRgKGKABMgkIAhAhGAoYoAEyBwgDECEYjwLSAQkyMDU5NmowajSoAgCwAgE&sourceid=chrome&ie=UTF-8#fpstate=ive&vld=cid:f72525db,vid:aU4M0bdlcXc,st:0 kalangarai vilakkam 1966 panju , msv tms ps

கணேஷ் க்ருபா இசைக்குழுவின் மேடை கச்சேரியில் பாடலை கேட்க , மேலும் பல பண்புகள் . பளிச்சிடக்காணலாம் . இணைப்பு இதோ

PONNEZHIL POOTHATHU by KOVAIMURALI & JANAKI in GANESH KIRUPA Best Light Music Orchestra in Chennai

தயவு செய்து பாடலையும் இசைக்குழுவின் நிகழ்ச்சியையும் கேளுங்கள்; இவன் வேலையற்ற வீணன் என நீங்கள் நினைத்தாலும் பரவாயில்லை , பாடலை ஆழ்ந்து கவனித்துக்கேட்க பழக்கப்படுத்திக்கொள்ளுங்கள் , அப்போது புலப்படும், கவிதையின் ஆழம், சொல்லின் நேர்த்தி , இசையின் அனுசரணை மற்றும் மேலோங்கிய குரல் பாவங்கள் , தாள அமைப்புகள் தரும் ஆதரவு என எண்ணற்ற பண்புகளை நாம் தவற விடுகிறோம் என்பதும் விளங்கும் 

பாடலின் நுணுக்கங்கள் அடுத்த பதிவில் .

 K.RAMAN 

Monday, April 7, 2025

ADAMANCY

 ADAMANCY

அடம் பிடித்தல்

முற்பிறவியில் பாவம் செய்திருந்தால் 25- 28 வயதிற்குள் இந்த தலைப்பு உங்களை பல வகையிலும் பிடித்து உலுக்கி நிலை  குலைய செய்திருக்கும். இதனை வாழ்வியல் அனுபவமாக உணர்ந்தவர்கள் இட்ட பெயர் தான் பிராரத்ம். விடைசொல்லியேஆகவேண்டிய வினைப்பயன்/ ஊழ்வினை ] என்ன முயன்றாலும் விட்டு விலக முடியாத துயர் எனில் அது 'அடம் பிடித்தல் ' தான். 

தனி ஒருவனாக தேருக்கு 'வடம் பிடிப்பதை விட கொடூரம்' இந்த அடம் பிடித்தல் கொடூரத்தில் மாட்டுவது தான் .. தீவிரமாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டிய ஒன்று உண்டென்றால் அது என்னைப்பொறுத்தவரை 'அடம் பிடித்தல்' தான்.

ஏன் எனில் அடம் பிடித்தல் என்பதில் பல்வேறு அமைப்புகள்/அவதாரங்கள் பரிமாணங்கள் மற்றும் எதிர்கொள்ளவொண்ணா  தீவிரங்கள் உண்டு. 

மகப்பேறு போல் எப்போது வேண்டுமானாலும் [இரவு, பகல். காலை , மாலை, நண் பகல் நள்ளிரவு, திருமண வீடு , ரயில்/ பஸ் நிலையம், திரை அரங்கு என அனைத்துலக வியாபகம் மற்றும் ஞாபகம்  கொண்டது . 

திடீரென வெடித்துக்கிளம்பி பெரும்பாலும் "இப்பவே இப்பவே "என்ற ஓலத்துடன் துவங்கும். என்ன எது என்று தெளிவாக சொல்லாமலேயே  "இப்பவே இப்பவே " என்று அந்த வட்டாரத்தையே கலக்கும். இந்த களேபரத்தில் அவமானம் கொள்வது இளம் பெற்றோர்கள் தான். 

நையப்புடைத்துவிட கையும் மனமும் துடிக்கும். பொதுவெளியில்  'சார் அடிக்காதீங்க 'என்றுபுதியதாய் முளைத்த  திடீர் மைத்துனர்கள் நமக்கு அறிவுரை சொல்லும் அவலம் நேர்ந்துவிடப்போகிறதே என்று சமூக அந்தஸ்துக்கு குந்தகம் விளையாமல் காத்துக்கொள்ள கையை மடக்கிக்கொண்டு காத்திருக்க, இப்பவே இப்பவே இப்பவே இப்பவே " என்று ஏலம் போல கூவிக்கொண்டிருக்க, தகப்பன் பல்லை இருகக்கடித்துக்கொண்டு

"வீட்டுக்கு வா உன்னை என்ன பண்றேன் பாரு "என்று கருவிக்கொண்டிருக்க , தாயார் யாருக்கும் தெரியாமல் அழுத்தமாக அடி  வயிறு இடுப்பு சந்திப்பில் 45-70 டிகிரி கோணத்தில் வலுவாக திருக   பே பே என்று பையன் அலற , 

“சத்தம் சத்தம் சத்தம் மூச் என்று முதுகில் சாத்த பையன் விழிக்க இப்பவே இப்பவேனு ராகம் பாடினாயே அதான் இப்பவே சாத்துப்படி என்பார் தாயார். ஆனால் இந்த விசும்பல் சிறிது நேரம் தான். மீண்டும் 'இப்பவே இப்பவே' தொடங்க வெகு நேரம் ஆகாது. 

 அடம் பிடித்தல்   என்பது சும்மா சாதாரண வேலையா ? ஒன்றரைஅடி — 2அடி  உயர உருவம் ஊரைக்கூட்டுவது எவ்வளவு திட்டமிடல் நிறைந்தது தெரியுமா?                               இதில் ஒரு வினோதம் , பெண் குழந்தைகள் ஆண்  குழந்தைகளை விட 'அடம் பிடிப்பது' சற்று குறைவு. ஆனால் வேறுவைகையான அழிச்சாட்டியம் செய்வதில் தேர்ந்தவர்கள் . 

திட்டமிடல் நிறைந்தது என்று எதைக்குறிப்பிடுகிறேன் என்றால் , எப்போது வேலையை ஆரம்பிப்பது [இப்பவே இப்பவே ஓலம் ] என்று துல்யமாக அறிவர். எப்போது துவங்கினால் எளிதில் கைகூடும் என்று முக்கிய விருந்தினர் முன்னிலையில் முயற்சி துவங்கும். 

விருந்தினர் நமக்கு உற்றவர் எனில் அவரே [அவர்களே] குறுக்கிட்டு அப்புறமா வாங்கித்தருவார் என்று இப்பவே இப்பவே தீயை அப்போதே அணைத்துவிடுவார்கள் . வேறுவகை புதிய திருமண வழி உறவு எனில், தகப்பன்-- வா வாங்கித்தருகிறேன் என்று பையனை வெராண்டா பகுதிக்கு அழைத்து சென்று நடுமண்டையில் 'நறுக் 'என்று இறுகமூடிய விரல்களால் "ணங்  ணங்"  என்று குட்டி , பையனுக்கு கண்கள்  குளமாகும்; ஏதாவது வாயை திறந்தால் 'தெரியும் சேதி' என்று பொது எச்சரிக்கை கொடுத்து தெருவில் போய் விளையாடு என்று பையனுக்கு வேண்டாத நேரத்தில் துரத்தி விடுவர்.

தொடரும்                     அன்பன் ராமன்

CHANGING TIMES-6

  CHANGING TIMES-6    கால மற்றம் -6 பழைய பாடல்களின் வளம் ஏன் பேசு பொருள் ஆகிறது என்ற கேள்வி எழுவது இயற்கை தான் . அதற்கான அ...