Monday, July 31, 2023

WHEEL HAS TURNED

 WHEEL HAS TURNED

சுழன்ற சக்கரம்

The wheel has turned a full circle என்று கால மாற்றத்தை மென்மையாக உணர்த்துவர் .இப்போது கோவிந்து  என்னும் கோவிந்தனின் வாழ்வில் அது நிகழ்ந்துள்ளது.. அது ஒரு சனிக்கிழமை காலை மணி. 10.45, அன்று விடுமுறை நாள் . கோவிந்துவின் தகப்பனார் ஐயோ நெஞ்சு வலிக்குதே என்று கட்டிலில் அமர்ந்தார். கோவிந்து வெராந்தாவில் இருந்து வெளியே கிளம்ப தயாரானான்.. அவன் தாய் பரமேஸ்வரி ", டே கோவிந்து யாராவது டாக்டரை கூட்டிக்கிட்டு வாடா அப்பாவுக்கு நெஞ்சு வலி சீக்கிரம் வாடா' என்று அழுதுகொண்டே அலற கோவிந்து அம்பெனப்பாய்ந்தான் இரண்டாம் தெருவுக்குள்.. அவனுக்கு பரிச்சயமான வீடு Dr .Subashchandran , MD [Cardiology ] என்ற போர்டை பலமுறை பார்த்துள்ளான் .2 நிமிட த்தில் அவர் வீட்டின் போர்டிகோவில் கோவிந்து . "சார் சார் என்றான் நடுங்கிய குரலில் . வெராந்தாவில் நின்றிருந்த டாக்டர் என்னப்பா என்றார் முனகிக்கொண்டே. .அவரது வலது கால் கணுக்கால் பகுதியில் படி இறங்கும் போது சுளுக்கி க்கொண்டு ஒரே வலி . அவர் பல்லைக்கடித்துக்கொண்டு நடக்க முடியாமல் சொல்லவும் முடியாமல் நடக்கவும் இயலாமல் நொந்து இருந்தார். சீக்கிரம் வாங்க சார் அப்பாவுக்கு நெஞ்சு வலி என்று ஓ என்று அழுதான் -பாவம் 7 ம் வகுப்பு படிப்பவன் ஏதாவது அசம்பாவிதம் நடந்திடுமோ என்று கணேசமூர்த்தி சாரை மனதில் நினைத்தபடியே பிள்ளையாரை மனதால் வணங்கினான்..

டாக்டர் "தம்பி எனக்கு கால் ல சுளுக்கு விழுந்திருக்கு , கார் ஸ்கூட்டர் எதுவும் ஓட்ட முடியாது , நடக்கக்கூட முடியல வேறு யாரையாவது கூப்பிட்டுக்க என்றார். மன்னிக்கணும் சார் உங்க பெயரையும் வீட்டையும் என் மனதிலிருந்து நீக்க முடியாம நேர இங்க தான் வந்திருக்கேன். கொஞ்சம் பெரிய மனசு பண்ணுங்க, நான் சைக்கிள் எடுத்துட்டு வரேன், பின் சீட்ல உக்காருங்க நான் பத்திரமா கொண்டுபோய்ட்டு கூட்டிக்கிட்டு வந்து நீங்க சொல்ற எடத்துல விட்டுடறேன் என்று அழுதான். சரி சீக்கிரம் வா என்றார் கார்டியாலஜிஸ்ட் . 1 நிமிடத்தில் வாடகை சைக்கிளுடன் கோவிந்து வந்து டாக்டர் பையை எடுத்துக்கொண்டு பின்சீட்டில் டாக்டரை உட்கார வைத்து மின்னல் வேகத்தில் அற்புத பாலன்ஸிங் மற்றும் வெகு நேர்த்தியாக இடை வெளிகளில் புகுந்து நேரே வீட்டின் பின் பகுதிக்கு டாக்டருடன் சைக்கிளை ஒட்டி சென்றான், பின் கதவை தபதப என்று தட்டினான். பின் அறை கட்டிலில் அப்பா முனகிக்கொண்டிருந்தார் . டாக்டர் ஸ்டெதஸ்கோப் வைத்து பார்த்ததும் நிலைமையை புரிந்து கொண்டு ஒரூ இன்ஜெக்ஷனை செலுத்திக்கொண்டே பையன் “என்ன கோல்டன் மொமெண்ட் டைம் க்குள்ள கொண்ட வந்து சேர்த்துட்டான். சைக்கிளைக்கூட ambulance மாதிரி ஓட்டமுடியும் னு இன்னக்கி தான் இந்த பையன் கிட்ட கத்துக்கிட்டேன். இன்னும் ஒரு 2 நிமிடம் போயிருந்தா நிலைமை ரொம்ப விபரீதமா போயிருக்கும். இந்தப்பையன் உங்களை காப்பாத்துன தன்வந்திரினு நெனச்சுக்குங்க.. ரொம்ப மரியாதைப்பட்ட பையன்”. என்றார் டாக்டர் . பெற்றோருக்கு ஒன்றும் புரியவில்லை. அம்மா டாக்டருக்கு பணம் கொடுங்க என்றான் கோவிந்து . அம்மா எவ்வளவு டாக்டர் என்றார். வெறும் 500/- ரூபாய் இன்ஜெக்ஷன் விலை தாங்க போதும் . இந்த பையனுக்கு பெற்றோர் கிட்ட போய்  பணம் கேட்க என் மனசு இடம் கொடுக்கல. 2 நாள் முழு ரெஸ்ட் ல இருக்கட்டும் பெரியவர். மூன்றா வது நாள் நானே வந்து என்ன செய்யணும் னு பாத்து சொல்றேன் தைரியமா இருங்க –

எதுனால அட்டாக் ஆரம்பிச்சதுனு கண்டுபிடுச்சுட்டா எல்லாம் குணப்படுத்திடலாம். நம்பிக்கையோட இருங்க என்று நொண்டியபடியே கிளம்ப கோவிந்து மீண்டும் டாக்டரை சைக்கிளில் இருத்தி எங்க சார் போவணும் என்றான். காந்தி ரோட்டுல என் க்ளினிக் இருக்கு அதாவது சரஸ்வதி தியேட்டர் ல இருந்து 4 வது பில் டிங் என்றார் .இப்போது மிக நிதானமாக சைக்கிளை செலுத்தினான் .சொன்ன இடத்தில் மிக கவனமாக டாக்டரை இறக்கிவிட்டு கண்ணீர் மல்க டாக்டருக்கு நன்றி செலுத்தினான். தம்பி அழாத அப்பா குணமாயிடுவாரு , கவலைப்படாதே ,3 நாள் ல வந்து பாக்கறேன் என்றார் . நான் சைக்கிள் கொண்டாறேன் சார் கோவிச்சு க்காம பெரியமனசு பண்ணுங்க என்று கை கூப்பினான். இப்போது கோவிந்து வின் சைக்கிளை வேண்டாமென்று சொல்ல டாக்டருக்கே மனம் வரவில்லை அவ்வளவு நேர்த்தியான சைக்கிளிங் திறமை. பரஞ்சோதியின்  தயாரிப்பு அல்லவா, இவன். எப்படி சோடை போவான்?  

மீண்டும் சைக்கிள் , டாக்டர் கோவிந்து 3 ம் நாளில் அடிப்படை சோதனைகள் செய்து விட்டு ஒன்றுமில்லை இனிமேல் ஓடி சென்று பஸ் ரயில் பிடிப்பது வேண்டாம் .சைக்கிள் ல கொண்டு போய் விட சொன்னா  பையன் செஞ்சுருவானே. சூப்பர் பாய் .சைக்கி ளை இவ்வளவு அழகா யாராலும் ஓட்ட முடியாது , வேகமோ , பாலன்சிங்கோ எல்லாம் அவன் சொன்னபடி ஆடுது . வீட்டுல சைக்கி ளை நல்லா பயன்படுத்தி கத்துக்கிட்டான் னு நினைக்கறேன் என்றார் டாக்டர் . இங்க வீட்டிலே சைக்கிள் இல்லை என்றனர் பெற்றோர். ஆச்சரியத்துடன் பார்த்த டாக்டரிடம் கோவிந்து சொன்னான் "ஸ்கூல் AHM சார் உத்தரவில் PT மாஸ்டர் ஒரு மாசம் ட்ரெயினிங் குடுத்து எனக்கு சைக்கிள் ல எல்லா வித்தையும் பண்ற அளவுக்கு கத்துக்குடுத்தாங்க".

கோவிந்து வின் பெற்றோர் பேந்த பேந்த விழித்தனர்.

சரி அவங்க ஏன் உனக்கு கத்துக்குடுத்தாங்க? என்றார் டாக்டர். நானா FRIEND சைக்கிள் ல ஓட்டும்போது AHM சாரை  இடிச்சு கீழ தள்ளிட்டேன். ஆனா சார் பெரிய மனசு பண்ணி இந்த வயசுல தான் கத்துக்கணும் னு 2 வருஷம் முன்னால பயிற்சி கொடுத்து நான் 2 தடவை ஜில்லா மெடல் முதல் பரிசு  வாங்கியிருக்கேன் என்று 2 மெடல்களை காட்டினான். டாக்டர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். கோவிந்துவின் அப்பா வெட்கி தலை குனிந்து அன்றொருநாள் "படிச்சுக்கிழிச்சாச்சு "போடா போய் உருப்படற வழியைப்பாரு" என்று உறுமியதை நினைவுகூர்ந்தார். உறுப்படுவது என்றால் என்ன எனும் கேள்வி எழத்தானே செய்கிறது ?

 

நன்றி                      அன்பன் ராமன்

 

 

 

Sunday, July 30, 2023

SCIENCE – V A C C I N E

 SCIENCE – V A C C I N E

அறிவியல் - வாக்ஸின்

வாக்ஸின் [vaccine ] - சமீப காலத்தில் கொரோனா நோய் உலகை வாட்டும் போது அனைத்து மருத்துவ நிலையங்களிலும் , மருத்துவ விஞ்ஞான ஆய்வுக்கூடங்களிலும் , ஏன் அரசியல் கூடாரங்களிலும் கூட தெரிந்தோ தெரியாமலோ முணுமுணுக்கப்பட்ட சொல் 'வாக்ஸின் ' எனும் தடுப்பு மருந்து.

நீ என்ன பெரிய immunological protein formulator அல்லது Drug designer அல்லது Antigen -Antibody mapping expert என்று சிலர் அங்கலாய்ப்பது தெரிகிறது. உங்கள் கேள்வி நியாயமானது தான் .ஆனால் இதுவரை சொன்ன மற்றும் இனி சொல்ல இருக்கிற பெயர்களும் அவற்றின் உண்மையான பொருளும் புரிந்து வைத்திருக்கும் ஒரு எளிய ஆசிரியன் அதாவது உயிரியல் [BIOLOGY ]ஆசிரியன் -கல்லூரி ஆசிரியன். அப்படியே நான் ஏதாவது தவறு செய்தால் சுட்டிக்காட்ட /தட்டிக்கேட்டு திருத்தம் சொல்ல அருமை அன்பர் பேராசிரியர் டாக்டர் கே .வெங்கடராமன் [நல்லதொரு immunologist /Biochemist ] இருக்கவே இருக்கிறார் .அதுதான் எனது நம்பிக்கை.

 பலரும் "வாக்ஸினை"' மருந்து என்பதாக நினைத்துக்கொண்டுள்ளனர். நிச்சயமாக மருந்தல்ல ஆனால் அதைவிட உயர்ந்தது. அதெப்படி? என்கிறீர்களா

மருந்து --நோய் வந்தபின் சரி செய்யும் பொருள் . அது வேதிப்பொருளாக [chemical ] இருக்கலாம், பல பொருட்கள் சேர்ந்த கலவையாக[MIXTURE ] ஆக  இருக்கலாம். அல்லது வேறொரு உயிரினத்தின் தயாரிப்பான [பொருளான]  [ANTIBIOTIC ] ஆக இருக்கலாம். ANTIBIOTIC வகையினவும் மருந்துகளே -அதாவது நோய் வந்தபின் அதை கட்டுப்படுத்தி , நம்மை நோயிலிருந்து மீட்பது. .இவை அனைத்தும் CURATIVE எனப்படும் நோய் தீர்ப்பன. இவை நோய் வந்த பின் தீர்ப்பன. ஆனால் வாக்ஸின் கள் PREVENTIVE எனப்படும் வருமுன் காப்பன.

எதற்கு வருமுன் காக்க வேண்டும், வந்த பின் மருந்து உட்கொண்டால் போதாதா? என்று கேட்கலாம். சில வகை தாக்குதல்களில் இருந்து பிழைப்பதே அரிது, பிழைத்தாலும், ஊனம், உடல் உறுப்புகள் சிதைவு நிரந்தர விகாரம் [கொரோனா அம்மை, போலியோ  போன்ற ] கொடிய நோய் வகைகளிலிருந்து முன்கூட்டியே காத்துக்கொள்ளுதல் விவேகம் . ஆகவே தான் வீரியம் மிக்க நோய் தாக்குதல்களை எதிர்கொள்ள வாக்ஸின் எனும் தடுப்பு மருந்து தவிர்க்கக்கூடாத தற்காப்பு என்று அடிப்படை உயிரியல் தெரிவிக்கிறது. 

அப்படியானால் மருந்து வேறு வாக்ஸின் வேறு என்பது புரிகிறது அல்லவா? எப்படி வேறு படுகின்றன எனில்   

 நோயின் பிடியிலிருந்து மீட்பது மருந்து , நோயையே வரவிடாமல் [நோய் செயல் பட முடியாமல் ] ஒழித்துக்கட்டுவது - வாக்ஸின் .அதாவது நமது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு பண்புகளை வலுவாக கட்டமைத்து நோய் தாக்கினாலும் நமது உடலே அதை எதிர்த்து வெற்றிகரமாக ஒழிக்கும் திறனை மேம்படுத்திக்கொடுப்பது தான் வாக்ஸின் புரியும் விந்தை . முறையான அளவில் வாக்ஸின் செலுத்திக்கொண்டால் , நோய் வந்து அதனால் துன்பப்பட வேண்டியதில்லை .

வாக்ஸின் செலுத்திக்கொண்ட நபர்களுக்கு நோய் கிருமிகள் உடலில் புகுந்தது கூட தெரியாது .அந்த அளவுக்கு திறம்பட வேலை செய்யும் ஆற்றல் வாக்ஸினேஷன் மூலம் கிடைக்கிறது. வாக்ஸின் செலுத்துதல்  வாக்ஸினேஷன் எனப்படுகிறது. இவற்றின் செயல் பாடுகளைப்புரிந்துகொள்ள வேறு சில அடிப்படை உண்மைகளை புரிந்து கொள்வது மிகவும் அவசியம்.

நாம் நம் வாழ்வில் பல நேரங்களில் ஒவ்வாமை எனும் ALLERGY ஏற்பட்டு பலத்த இன்னலை சந்திப்பதுண்டு. இந்த ஒவ்வாமை உருவாவதே இரு மாறுபட்ட ப்ரோடீன் [PROTEIN ] அமைப்புகளுக்கு இடையே நிகழும் யுத்தம் தான்.அதாவது நமது உடல் ப்ரொடீனும் , வெளியிலிருந்து உடலில் புகுந்த வேறொரு ப்ரொடீனும் உனக்காயிற்று -எனக்காயிற்று என்று மோதிக்கொள்வதன் விளைவாக அலர்ஜி தோன்றி , அரிப்பு, தடிப்புகள், தோலின் நிறம் சிவப்பு போன்ற பல்வேறு வழிகளில் அமைதியின்மையை ஏற்படுத்தும் .

நம் மக்களிடம் உள்ள இன்னொரு பற்றாக்குறை [அறிவியல் ரீதியில்] என்னவெனில் ப்ரோடீன் என்றால் அது ஒரு ஊட்டச்சத்து என்பதான ஒரு எண்ணம். சில வகை ப்ரோடீன்கள் உணவுச்சத்துதான். ஆனால் எல்லா ப்ரொட்டீன் களும் உணவு அல்ல. கிட்டத்தட்ட எல்லா தமிழர்களும் இந்தியர்கள் தான் ஆனால் எல்லா இந்தியர்களும் தமிழர்கள் அல்லர் என்பது போன்ற நிலை தான் இந்த ப்ரோடீன் விவகாரமும்.

எல்லா உயிர் இனங்களின் உடலும் ப்ரோடீன்களால் கட்டமைக்கப்பட்டவை தான். எனவே எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்று அரசியல்வாதிகள் அலறுவதைப்போல எங்கும் ப்ரோடீன் எதிலும் ப்ரோடீன் என்று BIOCHEMIST/IMMUNOLOGIST ம் அறிவான் ஆனால் பின்னவர் அறிவியல் ரீதியாக பேசுகிறார் -உணர்வியல் அடிப்படையில் அல்ல.

தொடரும் அன்பன் ராமன்

Saturday, July 29, 2023

SCIENCE, CONSCIENCE, INTELLIGENT, INTELLIGIBILITY

 SCIENCE, CONSCIENCE, INTELLIGENT, INTELLIGIBILITY

These terms keep surfacing in speech/ writings/ discussions /debates and at times in classrooms too.My ‘too’ here is too specific in that the term preceding it [classrooms] has          of late been chosen to transact things unintended. Such is the decadence that classrooms have come tobe venues of ‘presenting’ ideas too well known since persons on either side of the podium seem to share near ‘like-levels’ of intellect –a status that is not easy to achieve for the really qualified, except by stubborn recalcirtance . In this situation of ‘free for all” ,  one draws the freedom to view Science and Conscience as if they are any related.

Science is a ‘product ofprecision-’ in that it is a derivative of exhaustive tests and verifications before its final presentation to explain a phenomenon. Conscience on the other hand is a natural faculty working within –drawing a certain line and level of moral code politely suggesting ‘Dos and DON’Ts   to the person on a pure self volition even if not sought to sort out. Conscience is thus a natural gift that seems to have been ‘built’ on the principle of moral correctness. When some gross or blatant violation of moral dictate causes ‘damage’ to persons or processes in an administrative system –it constitutes an instance of moral turpitude –meaning a deliberate disobedience of conscience. Though Science and Conscience are not related terms ,a certain level of justifiable relevance appeals to me in portraying Conscience as a Science of morals; thus Science is an integral component of Conscience much like the way the two terms are spelt.                                                                                                                                

Intelligence [noun] is interpreted as an ability to understand , learn and think. Anyone possesing these vital components is ‘INTELLIGENT’ [adjective] With some more abilities like quickly adapting to situations and making the best of a happening-[s]he is ‘Clever’. But the term ‘clever’ implies a negative connotation because ‘clever’ suggests of being unscrupulous. The society at large ‘accepts’ intelligence /intelligent but feels disturbed of ‘clever’ [fox–like] functioning .

‘Intelligible’ does not mean the ‘ability to be intelligent’. The language [English] is tricky by its word-structuring that appears to be something while officially [by the lexicon] it is something else. In this instance, ‘Intelligible’ means understable/ clear/ lucid/ plain. Ironically, the meaning of the word is too plain while the term looks less clear.

In making use of these terms one has to be intelligent to abide by his/her conscience to obey the Science of Lexicon, if the person prefers being called/accepted of being  ‘intelligent’ .

GOOD LUCK

Prof. K.Raman

Friday, July 28, 2023

AN ANNOUNCEMENT

 AN ANNOUNCEMENT

ஒரு அறிவிப்பு

அன்பர்களே --

வரும் திங்கள் [31-07-2023 ] முதல் ஒரு அட்டவணை அடிப்படையில் BLOG பதிவுகளை வெளியிடலாம் என்று நினைக்கிறேன். அதற்கு சில முக்கிய காரணங்கள் உள்ளன. அன்றாடம் எதையாவது பதிவிட வேண்டியுள்ளது 

அதற்காக உப்பு சப்பு இல்லாத தகவல்களை எழுதி பிறரை நோகடிக்க விருப்பமில்லை. சரி ஏதாவது கதை எழுதலாம் என்றால் என்னதான் எழுதிவிட முடியும் ? எவ்வளவு ஜென்மத்துக்கு கஸ்தூரி ரெங்கனையும், கௌரியையும் ,அல்லாடுபவர்களாகவே காட்சிப்படுத்த முடியும்

அன்பார் ஒருவர் தமாஷாக சொன்னார் "நான் கௌரியும், கஸ்தூரி ரெங்கனும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்த்தேன் ",நான் ஆடிப்போய் விட்டேன்

பொருந்தாத ஜோடி மட்டும் அல்ல நண்பர்களிடையே கசப்பை விதைத்துவிடும். அதுவும் மாடசாமியும் ராமசாமியும் கௌரிக்கு மாமியாராக 2400/- ரூபாய் சாணிக்கிழவி யை ஒரு போதும் ஏற்க மாட்டார்கள்

இவ்வளவு குழப்பங்களை உருவாக்க கதை எழுத வேண்டுமா. மேலும் திரும்ப திரும்ப ஒரே மாதிரி கதைகளை எழுதினால் காலையில் வாட்ஸாப் பார்க்கும் செயலை கொலை செய்த பாவம் எனக்கு  ஏற்படும் 

.இப்போது கல்யாண பரிசு சினிமாவில் தங்கவேலு கதை எழுத ஆரம்பித்து, "என்ன கதை எழுதறது? ஆமைக்கதை எழுதலாமா என்று தனக்குத்தானே புலம்புவார். அதே நிலையில் தான் அடியேன் இப்போது இருக்கிறேன்.

எனவே ஒரு அட்டவணை அடிப்படையில் எழுதினால் என்ன என்று தோன்றுகிறது . வாசக அன்பர்கள் ஆர்வம் கொள்வார்கள் என்று நம்புகிறேன். சரி சரி ஹூம் நீ நம்பிக்கொண்டே இருஎன  சிலர் புலம்புவது நன்றாகவே புரிகிறது .                         

                                                  சரி அட்டவணை இதோ:

ஞாயிறு - ஆங்கிலம்

திங்கள் - அறிவியல் [SCIENCE ] தலைப்பு

செவ்வாய் - சிறு கதை

புதன் - கல்வி

வியாழன் - திரை இசை

வெள்ளி - திரை இயக்குனர்

சனி- பொது கட்டுரை .

இந்த செயல் திட்டம் வாசக அன்பர்களுக்கு ஏற்புடையதாக இருக்கும் என நம்புகிறேன்.

திங்கள்----------சனி நாட்களில் தமிழிலும் ஞாயிறு ஆங்கிலத்திலும் பதிவுகள் இடம் பெறும்

 

நன்றி     அன்பன் -ராமன்

 

 

INDIAN RAIL LOCOMOTIVE-6

 INDIAN RAIL LOCOMOTIVE-6

ரயில் எஞ்சின் – 6

நீராவி எஞ்சின் குறித்த அநேக தகவல்களும் பிற வகை என்ஜின்களுக்கும் பொருந்தும் .எனவே பிற முக்கிய தகவல்களை பார்ப்போம் .

ரயிலின் இயக்கம் குறித்த கண் காணிப்பு.

எதிர்பாராத விதமாக ஏதேனும் வேகக்கட்டுப்பாட்டை நிர்வகிக்க நேர்ந்தால் ரயில் நிலைய அதிகரி [ஸ்டேஷன் மாஸ்டர் , இப்போது ஸ்டேஷன் சூப்பிரென்டென்ட் ] குறிப்பிட்ட ரயிலின் guard க்கு தகவல் சொல்ல, அது டிரைவருக்கு தெரிவிக்கப்பட்டு உரிய வேகக்கட்டுப்பாடு அமல் படுத்தப்படும். .

அன்றாட கட்டுப்பாடு:

ரயில் நிலையங்களில் ஒரு பெரிய பிரம்பு வளையம் [சாவி என்பார்கள்] வலுவாக பின்னப்பட்டு ஒரு 2 அடி நீள  கைப்பிடியுடன் இருக்கும். அதன் கீழ் மையத்தில் ஒரு தோல் பை இருக்கும் ,அதில் ஒரு இரும்பு ஆணி போல் கம்பி பொருத்தப்பட்டிருக்கும் . அந்தக்கம்பியில் பொருந்தி அமர துளை யுடன் ஒரு உலோகப்[பந்து இருக்கும்   அப்பந்தின்  மீது நம்பர் பொறிக்கப்பட்டிருக்கும் .இந்த உருண்டை தான் அதிகாரப்பூர்வ சாவி. . இந்த உருண்டை ஒரு இரும்புப்பெட்டகத்தில் இருந்து கோழி முட்டை இடுவது போல் வெளி வரும். ரயில் நிலைய அதிகாரி ரயில் தங்களது எல்லைக்குள் வந்து விட்டதை [போன் தகவல் முந்தைய நிலைய அதிகாரி இடமிருந்து ]  அறிந்ததும் இரும்புப்பெட்டகத்தின் வயிற்றில் இருக்கும் பிடியைத்திருகுவார். பந்து வெளி வரும் .அதன் நம்பரை ஒரு பதிவேட்டில் குறித்துவிட்டு சாவியை பிரம்பு வளையத்துள் வைத்து விட்டு  , அடுத்த நிலைய அதிகாரிக்கு போன் மூலம் நம்பர் சொல்வார். உரிய ரயில் நின்றாலும் நிற்காமல் சென்றாலும் இந்த சாவி எஞ்சின் டிரைவரிடம் ஒப்படைக்கப்படும் . நிற்காமல் கடக்கும் ஸ்டேஷன் எனில் ஒரு ஊழியர் பிளாட் பாரத்திற்கு வெளியே ஒரு உயர்ந்த பீடத்தின் மீது நின்று கொண்டு , சாவி வளையம் எஞ்சின் பக்கம் சாய்வாக இருக்குமாறு தளர்வாக பிடித்துக்கொண்டு நிற்பார். அப்போது புழுதியைக்கிளப்பிக்கொண்டு எஞ்சின் பாய்ந்து வர , ட்ரைவர் -II தனது முன்கையை வளையத்துக்குள் செலுத்தி , கையை மடக்கிக்கொள்ள சாவி இப்போது எஞ்சினில்.

சாவி கொடுப்பது ஒரு கலை

ஆம் ஓடும் எஞ்சினில் சாவியை கை மாற்றுவது ஓர் நுண்கலை .சாவியை வலுவாகப்பற்றிக்கொண்டிருந்தால் ,எஞ்சின் வேகத்தில்சாவியுடன் சேர்ந்து , கொடுப்பவனையும் இழுத்து ரயில் மீது மோதி சாவி கொடுத்தவர் உயிர் இழக்க நேரிடும்..தேவையான 'பிடி' இல்லாவிடில் சாவி கீழே தொங்கி , ட்ரைவர்-II வின் எல்லைக்கு வெளியே போய்விடும். வண்டியை நிறுத்திதான் சாவியைப்பெற்றுக்கொள்ள நேரிடும் . அது ஒரு அவப்பெயர் உண்டாக்கும் நிகழ்வு.

மேலும், விரைந்து செல்லும் எஞ்சின் புழுதி, தூசி , குப்பை அனைத்தையும் வாரி வீசும். சாவி கொடுப்பவன் கண், காது மூக்கு வாய் அனைத்திலும் இந்த இயற்கைச்செல்வம் அமர்ந்து கொள்ளும் . எனவே சாவி கொடுப்பவர் சாவியை சரியான கோணத்தில் வைத்து , முறையாகப்பிடித்துக்கொண்டு , முகத்தை ரயில்போகும் திசையில் திருப்பிக்கொள்வார் . ரயில் முற்றிலும் கடந்தே பிறகே கீழிறங்குவார். ஒவ்வொரு ரயிலும்  ஸ்டேஷனைக்கடைக்கும் பகுதியில் தான் சாவி வழங்குவர் . நின்று செல்லும் ரயில்களுக்கு , ரயில் புறப்படும் முன் எஞ்சினில்கொண்டு போய் சாவியை கொடுப்பர். . இந்த சாவியை அடுத்த ரயில் நிலையத்தில் நுழைவுப்பகுதியில் ட்ரைவர்-II , இந்தா  வைத்துக்கொள்  என்பது போல பிளாட்பாரத்தில் வீசி விடுவார். நிலைய ஊழியர் ஸ்டேஷன் அதிகாரியிடம் சாவியை சேர்ப்பார். அவர் அந்த எண்ணை  சரிபார்த்துவிட்டு , இரும்புப்பெட்டகத்தில் தலைப்பகுதியில் உள்ள ஓட்டையில் , உலோகஉருண்டையை போட்டுவிடுவார். இதுபோல வந்து போன ரயில்களின் உருண்டைகள் பெட்டகத்தில் உள்ளே இருக்கும் RANDOM முறையில் முட்டை வெளியே வரும் , இன்ன நம்பர் தான் வரும் என்ற ஹேஷ்யம் பலிக்காது. ஏதோ ஒரு நம்பர் வரும் எனவே ஒரு அச்ச உணர்வுடன் இந்த கோழி முட்டைகளை கையாள்வர். குறிப்பிட்ட . எல்லைக்குள் ரயில் வந்ததும் தான் மெஷின் முட்டையிடும். அதற்கு முன் திருகி பயன் இல்லை.

இதனால் ரயில்கள் சரியான இடங்களில் நின்று செல்வது உறுதி செய்யப்படுகிறது. டிரைவர்கள் உரிய ஸ்டேஷன்களில் நின்றுதான் செல்ல முடியும். 

நீராவி எஞ்சின்களில் நிலக்கரி தான் எரி பொருள் . எனவே சாம்பல் கரி துகள்கள் உலையின் அடிப்பகுதியில் குவியும். அவற்றை அகற்ற எஞ்சின் கீழ் பகுதியில் உள்ள அகன்ற மூடி திறந்து அவை கீழே கொட்டப்படும். அதற்கென்றே சில பகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கும் .அவ்விடங்களை இரும்பு ஸ்லீப்பர் கட்டைகளால் அமைத்து  பொருத்தப்பட்டிருக்கும். தீ பிடிக்கும் அபாயம் இல்லை. இப்படி உருவான ஒரு பகுதி தான் மதுரையில் கரிமேடு என்று அழைக்கப்படுகிறது. இவ்வாறாக பல சுவையான தகவல்களை கொண்டது தான் ரயில்வே துறை..

நன்றி அன்பன் ராமன்

Thursday, July 27, 2023

INDIAN RAIL LOCOMOTIVE-5

 INDIAN RAIL LOCOMOTIVE-5

ரயில் எஞ்சின் – 5

எவ்வகை எஞ்சின் ஆயினும் அடிப்படையில் பணிகளும் அவற்றின் நடைமுறை வழிகாட்டுதல்களும் அநேகமாக ஒன்றே தான். இயக்குகின்ற கருவிகளும் அவற்றின் செயல் பாட்டுக்கு உரிய ஸ்விட்ச்களும் சற்று மாறுபட்டிருக்கலாம் . எனவே எஞ்சின்கள்  தொன்று தொட்டு பலவாறாக பெயரிடப்பட்டுள்ளன .

அதில் வினோதம் யாதெனில் ஒவ்வொரு முறை ரயில்வண்டியைக்காண நேரிடும் போதும் எஞ்சினைப்பார்க்க பெரும்பாலோனோர் தவறுவதில்லை. ஆனால் அதன் புற  அமைப்பு , உருவபரிமாணம் , பெயர் இவற்றை ஆழ்ந்து கவனிப்பதில்லை.

எஞ்சினில் தான் எத்துணை வடிவங்கள்/ பெயர்கள் . பெயரிடுவதில் சில நுணுக்கங்கள் பின்பற்றப்பட்டு வந்துள்ளன., அவை M , Y மற்றும் W என்பன. இவற்றில் சிற்றினங்கள் [Species] உண்டு . அந்த சிற்றினங்கள் , எஞ்சின் எந்தவகை பணிக்கு உகந்தது என்பதை உணர்த்தும் .

W என்பது [WIDE /BROAD GAUGE ] என்பதன் சுருக்கம் பின் வருவனவற்றை கவனியுங்கள்

Y =[METER GAUGE =1000 mm wheel base ]

W =[BROAD GAUGE =1676 mm ]

Z = [NARROW GAUGE =762 mm ]

N =NARROW GAUGE = 610 mm ]  இவை தண்டவாள அமைப்பின் தகுதிக்கு ஏற்ப சக்கர அமைப்புடையன .

மேலும் எரிபொருள் அடிப்படையிலும் எஞ்சின்கள் பெயரிடப்படுகின்றன. அவை

D =டீசல் , DC =எலக்ட்ரிக் DC கரண்ட் , AC = எலக்ட்ரிக் AC கரண்ட் ,,CA =எலக்ட்ரிக் DC /AC . B =BATTERY

செயல் திறன் அடிப்படையில் எஞ்சின்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

G = கூட்ஸ் , P =PASSENGER ,  MIXED =GP =கூட்ஸ் அண்ட் பாசஞ்சர் ,S =Shunting

U =MULTIPLE  யூனிட் [-டீசல் /எலக்ட்ரிக் ]

R =RAIL CAR [முன்னாளில் மோட்டர் கோச் என்பர் ]

Class WAG-9

தற்கால எஞ்சின்களில் மிகவும் வலிமையானது .அசுர பலம் கொண் டுசரக்குகள் நிறைந்த  55 கூட்ஸ் பெட்டிகளை அனாயாசமாக இழுத்துக்கொண்டு விரைவாக ஓடும் திறன் கொண்டது.

WDM-3A

இந்திய ரயில்வேயின் புகழ் பெற்ற பந்தையக்குதிரை இது. இதன் அம்சங்கள் வருமாறு.1993இல் இந்தியாவில் வாரணாசி டீசல் லோகோமோட்டிவ் ஒர்க்ஸ் நிறுவனத்தினரால் வடிவமைக்கப்பற்று இயங்கிக்கொண்டிருக்கிறது.

W =BROAD GAUGE ,D =டீசல் , M = MIXED [கூட்ஸ் + பாசஞ்சர் ]பயன்பாட்டுக்குரியது , மிகுந்த பலம் கொண்டது.

இது போன்ற அசுரர்கள் இன்றைய இந்திய ரயில்வேயின் தயாரிப்புகள். MIXED என்பன பணியிலும், தேவைகள் அடிப்படையிலும் அமையும் பெயர்கள். உதாரணமாக அவை கூட்ஸ்/பாசஞ்சர் எனவும், எலக்ட்ரிக் /டீசல் எரிபொருள் இரண்டிலும் இயங்க வல்லது . மேலும் தற்கால எஞ்சின்கள் டூயல் வகையினை. அதாவது இவ்வகை என்ஜின்களுக்கு முன் புறம்/ பின் புறம் என்ற பாகுபாடு இன்றி இருபுறமும் ஒரே திறனில் இயங்கும் வல்லமை கொண்டவை. .எனவே என்ஜினை திருப்பி வைத்து இணைக்க வேண்டியதில்லை ,இருபுற இயக்கம் கொண்டதால் DUAL எனப்படுகின்றன.

தொடரும்       அன்பன்  ராமன்

TM SOUNDARARAJAN-38

  TM SOUNDARARAJAN-38 டி எம் சௌந்தரராஜன் -38                    POSTING NO. 1225  திரு டி எம் எஸ் அவர்களின் குரலில் வெளிவந்த பாடல்கள் ...