Sunday, January 26, 2025

G PAY JEEVAA-5

 G  PAY JEEVAA-5                

ஜீ -பேஜீவா-5

மெல்ல மிகுந்த முயற்சியில் ஒருவாறு உள்ளே வந்தார்.

மெல்ல ஒரு மேடை மீது அமரவைத்து வலது கால் செருப்பை [விசேஷ வடிவமைப்பில் இருந்தது] கொண்டுவந்து, ஜீவாவே மெல்ல பொருத்தி மேல் பகுதியில் மெல்ல ஜிப் பை பூட்டினான், இறங்கி நடங்க என்றான் . கால் வெட வெட என நடுங்கியது பூமியில் பாவவே இல்லை; இருங்க இடது காலை  நல்லா பதியுங்க, பின்னர் வலது காலை , ஜீவாவே மெல்ல ஒரு கோணத்தில் வளைத்து பதியவைத்தான். 2 நிமிஷம் நில்லுங்க , அப்புறம் இடது காலை பின்னால் வையுங்க, வலது காலை 1/2 அங்குலம் தூக்கி வையுங்க என்றான் . கூச்சத்துடன் வலது காலை மெல்ல பதித்தார் சிறிதும் வலி இல்லை, புன்னகைத்தார்..

இந்தாங்க சாமி படம் கும்பிடுங்க என்று திரைச்சீலையை விலக்கினான்.  அனைத்து மத உணர்வுகளுக்கும் தேவையான தெய்வ உருவங்கள்/ அடையாளங்கள் இருந்தன. தனவந்தர் நெகிழ்ந்தார் கைகூப்பி கண்ணீர் சொரிந்தார்.. ஜீவா ட்ரைவரை உள்ளே அழைத்து  இந்த செருப்பை காலில் எப்படி பொறுத்த வேண்டும் என்று செய்து காண்பிக்க, ட்ரைவர் நன்றாக புரிந்துகொண்டார்.

பில் தொகை மீதி 1420+ 80 என்றான் ஜீவா.

[சென்ற மாதம் புது செருப்புக்கு ஆர்டர்  கொடுக்க தனவந்தர் வந்ததுமே ஜீவாவின் மனதில் "இவர் தான் எனது ஏழ்மைக்காலத்தில் 80/- ரூபாயை தராமல் கணக்கில் போட்டுவிட்டதாக நாடகமாடி தங்கையை ஏமாற்றியவர் என்று.தெளிவாக புரிந்து கொண்டான்]. [அவர் முகச்சாயல், குரல் இரண்டும்] ஜீவாவின் மனதில் நன்கு பதிந்திருந்தன. எனினும்  தொழில் முறை கெளரவம் கருதி ஒன்றும் தெரியாதது போல்  அமைதி காத்து இருந்தான்  பிடாதி அம்மன்  மனக்கண்ணில் தோன்றி குறி காட்டினாள் -நினைவிற்கு வருகிறதா? ]

அது என்ன +80 ? என்றார்  தனவந்தர்.

சிரித்துக்கொண்டே ஜீவா சொன்னான் சார் cash ஆகவே கொடுத்துடுங்கநாங்க படிப்பறிவு இல்லாதவங்கனு போன்ல நம்பரை காமிச்சு பணம் போட்டாச்சுன்னு சொல்லி ஏமாத்திர் ராங்க..அப்படி நீங்க முன்ன ஒரு  வாடடி ஏமாத்துன 80/- ரூபாய் தான் +80 என்றான் ஜீவா. தனவந்தருக்கு பெருத்த அவமானம் அதுவும் ட்ரைவர் முன்னிலையில் . பேச முடியுமா?  

என் முகத்தைப்பாத்து பேசுங்க சார் - அது உங்களால முடியாது -நான் சொல்றேன் கேளுங்க என்றான் ஜீவா

80 ரூவாய்க்கு 4% வட்டி 8 வருசத்துக்கு [போஸ்ட் ஆபிஸ் ரேட்] கணக்கு பாருங்க நிச்சயம் அதிகமாத்தான் வரும். நான் வட்டியெல்லாம் வேணும் னு ஆசைப்படலை . அதுனால மறுபேச்சு பேசாம 1420+ 80/- கொடுத்தீங்கன்னா கவுரவமா இருக்கும். நீங்க பெரியமனுசங்க , நான் வேற என்ன சொல்ல முடியும்? என்று மனத்தாக்குதல் செய்தான் ஜீவா . இப்போது 'தனம்' கதி கலங்கியது. 

9ஆண்டுகள் முன்னர் வலது கால் செருப்பை சரி பார்த்து வாங்கிக்கொண்டு செல்போனில் வந்த 8 மணியை [08.00] தலைகீழாக 80 என்று காட்டி சிறுமியை ஏமாற்றியவர் தான் இன்றைய தனவந்தர் . அவருக்கு வலது கால் ஜீவன் பிச்சை, இட்ட[ஜீ]வன்  ஜீவா.

வாய் பேசாமல் தலைகுனிந்து பணத்தை கொடுத்துவிட்டு மெல்ல நடந்து ட்ரைவர் உதவி இல்லாமலே காருக்கு சென்றார்.

 [பி கு]:. கு 80 ரூபாயை ஏமாற்றிவிட்டுப்போன 20 வது நாளில் எதிர்பாரா விபத்தில் நெல்மூட்டைகள் ஏற்றி வந்த டிராக்டர் தனவந்தரின் வலது காலில் ஏறி காலை வெகுவாக சிதைத்துவிட்டது. 9 வருடம் வைத்தியம் கடைசியில்[2024ல்] கல்கத்தாவில் பிளாஸ்டிக் சர்ஜரி,  ஆனாலும் வலது கால் பாதம் வாழைக்காய் பஜ்ஜி போல் சிறுத்து சுருங்கி தட்டையாய் இருந்தது.

பாதம் தரையில் பதியாமல் அந்தரத்தில் ஊசலாடும் நிலையில் இருந்தது .ஜீவாவின் புகழ் அறிந்து மீண்டும் 80 ரூபாய்க்கடைக்கே வந்தான் தனம் .

 கல்கத்தாவில் அந்த செருப்புக்கு       12, 500/- முதல் 14000/- வரை கேட்டனர்; ஆனாலும் 6000/- ரூபாய்க்கு பேரம் பேசிய தனவந்தர் , இப்போது அந்நாள்  பரம ஏழையிடம் மாட்டிக்கொண்டு அவமானத்தால் தலை குனிந்து வேகமாக வெளியேறினார்   

போகும்போது வழியில பிடாதி அம்மனை கும்பிட்டு விட்டு போங்க என்று உரத்த குரலில் சொன்னான் ஜீவா. சரி என்று தலை அசைத்தது தனம் .    . 

                                      நிறைவு

நன்றி

அன்பன் ராமன்

2 comments:

  1. ஏமாற்ற நினைப்பவர்கள் கண்டிப்பாக தான் ஒருநாள் தனது குணத்திற்கான தண்டனையை வட்டியும் முதலுமாக அனுபவிக்க நேரிடும் என்பதை விளக்கும் அருமையான சிறுகதை. வாழ்த்துக்கள்.

    அன்புடன்
    K. லக்ஷ்மணன்.

    ReplyDelete

PASSENGER AIR CRAFT SJ 100

PASSENGER AIR CRAFT SJ 100 பயணிகள் விமானம் எஸ் ஜெ -100   இப்போது இது என்ன வகை தகவல் என்பவர்கள் மகிழ்வுற வேண்டிய தருணம் . ...