Tuesday, July 22, 2025

LET US PERCEIVE THE SONG -31

 LET US PERCEIVE THE SONG -31          

பாடலை உணர்வோம் -31 

ஆயிரம் பெண்மை மலரட்டுமே [வாழ்க்கைப்படகு -1965]  கண்ணதாசன் , விஸ்வநாதன் ராமமூர்த்தி , சுசீலா

1965 ல் இப்படி ஓர் இசைக்களஞ்சியமா

ஆம் -1965 ல் தான் இசையில் கோலோச்சிக்கொண்டிருந்த விஸ்வநாதன் -ராமமூர்த்தி , முதல் முதலாக ஜெமினி நிறுவனத்தில் கால் பதித்த ஆண்டு -படம் வாழ்க்கைப்படகு .

கவியரசரின் கீதம் , வி -ரா வின் ஆதிக்க இசை.. இசையில் வடஇந்திய சாயல் தெரிந்தால் -படம் வட இந்திய சூழலில்  நடைபெற்ற கதை..

எந்த சூழலுக்கும் இசை வழங்கும் பேராற்றல் கொண்ட மெல்லிசை மன்னர்கள் இசையால் படத்தை தூக்கிப்பிடித்தனர் என்றால் மிகை அல்ல. இசையின் நளினம் அப்படி.. ஆலாபனைகளும் ஜோடனைகளும் அதிகம் தான். எனினும் கேட்கும்போது ஒரு ஆனந்தம் தரும் வீச்சு பாடலில் விரவிக்கிடக்க காணலாம்.     

முதலில் மெல்ல பயிற்சியாக துவங்கி அதுவே காட்சிக்குள் பிரவேசிப்பதாக அமைந்த காட்சி

இயக்குனராக முத்துராமன் பயிற்சி தர, பெண்கள் பாடி நடனம் புரிய மெல்ல பாடல் கம்பீர இசையில் துவங்குகிறது

முகப்பிசையிலேயே பாடலின் தரம் விளங்குகிறது. தொடர்ந்து இயங்கும் கருவிகளும் , துரத்தி துரத்தி இழையும் வயலின்களும் -கேட்டு ரசிக்கத்தான் இயலும் .

பல்லவி துவங்கியதும் தொற்றிக்கொள்ளும் ராக நளினம். அடுத்தடுத்து ஆண் -பெண் கௌரவ நட்பின் ஆழம் பற்றிப்பேசும் பாடல்.

அதன் முத்தாய்ப்பாக 'காதல் நாயகன் ஒரு பாதி , காதலி தானும் மறுபாதி -இருமனம் அங்கே ஒரு மனம் என்றே சொல் சொல் சொல்' என்று முழங்கும் பெண் மனம் . அதே போல் 'ஒருத்தியின் நெஞ்சம் ஒருவனுக்கென்றே சொல் சொல் சொல்' என்று சூளுரைக்க , கோமாளி ராஜா செண்டை மேள ம் முழங்க  வரும் காட்சி

அப்போது கிளம்பும் தாள ஒலிகளை  கவனியுங்கள்  - காட்சியின் தன்மை மாறி இருப்பதை உணர்த்தும் இடம் .

மீண்டும் சிலிர்த்து எழும் பெண் மனம் 

"மன்னவனே ஆனாலும் பொன் அளந்து கொடுத்தாலும் , வாள்முனையில் கேட்டாலும் வெஞ்சிறையில் போட்டாலும் உடலன்றி உள்ளம் உன்னைசேராது என்று கம்பீர ஆலாபனை செய்து --

"தவறு
செய்யாதே அருகில் வராதே நில் நில் நில்" என்று               ஆணையி ட்டுத்தடுக்கும் கம்பீரம்  என்று பயணித்து மீண்டும் 1000 பெண்மை என சரணத்தில் படர்ந்து அடங்கும் பாடல்

பெண்குரல்களே எனினும் கம்பீரம் குன்றாத பாடல். சிறப்பான கவி நயம், வசீகரிக்கும் ஆலாபனை  , வெள்ளெமெனப்பாய்ந்த இசை கேட்டு மகிழ  இணைப்பு இதோ.

https://www.youtube.com/watch?v=2fnEp2K9gUs 1000 penmai –V P , KD VR PS

நன்றி அன்பன் ராமன் 

 

Saturday, July 19, 2025

KAVERI ENGINE

 KAVERI  ENGINE

காவேரி எஞ்சின்         

நம்மில் பலருக்கும் தோன்றாத ஒரு கேள்விதொழில் நுட்பம்பொறியியல் வளர்ச்சி கண்டும் கூட இந்தியா ஏன் விமானத்தயாரிப்பில் இறங்கவில்லை என்பதேஆனால் தொழில்துறையினர் , ராணுவ ஆய்வில் கவனம் கொண்டோர் இது குறித்து பல கருத்துகளை பதிவிட்டு வந்துள்ளனர். 

விமானதயாரிப்பில் மிகவும் இக்கட்டான பகுதி ஜெட்    - எஞ்சின் களை வடிவமைப்பது தான் . அது மிகுந்த நுணுக்கமும் ரிஸ்க் என்னும் ஆபத்தும் நிறைந்த ஒரு துறை என்கி-றார்கள்

எண்ணற்ற சாட்டிலைட் வடிவமைத்தவர்களுக்கு இது ஒரு பொருட்டா எனில் --ஆம் நிச்சயம் அப்படித்தான்

ஏனெனில் சாட்டிலைட்  இயங்காது தோல்வியுற்றால்,    பொருள் செலவோடு போகும்ஆனால் விமானம் அப்படி   அல்ல மனித உயிர்களோடு தொடர்புள்ளதுமேலும் பிற  நாட்டவர் கூட விபத்திற்குள்ளாகலாம்இது போன்ற எண்ணற்ற சவால்கள் இருப்பதால் ஜெட் எஞ்சின் தயாரிப்பில் பெரும் முன்னே ற்றம்  காண வில்லை.

 அப்படித்தானா எனில் இல்லை 

பின்?

சுமார் 45 ஆண்டுகளாக முயன்றும் ஒரு நம்பகமான ஜெட்   எஞ்சின் இறுதி வடிவம் பெறவில்லைஆனால் கடந்த சில ஆண்டுகளில் "என்னதான் நடக்கிறது ? " என்ற கேள்விக்கு விடை தேடும் போது , முறையான நிதி  ஒதுக்கீடு இல்லாமல் இந்த திட்டம் மூச்சு திணறுவதாக அறியப்பட்டது.. 

எனவே பொது அறிக்கை மூலம் "காவேரி எஞ்சின் " திட்டத்தில் பங்குகொள்ள வேண்டுகோள் வைக்கப்பட்டிருக்கிறது.

இதற்கிடையில் வெல்வேறு முயற்சிகள் அரைகுறை   வெற்றி கண்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது

இதற்காக FUND KAVERI என்ற வேண்டுகோள் பொது வெளியில் வைக்கப்பட்டுள்ளது. அது ஒரு புறம்  இருக்க, இந்த எஞ்சின் செயல் பட தேவை யான நுட்பம் மிக அதிகமான காற்றை உள்ளிழுத்து வெளியேற்ற மிக திறன்வாய்ந்த ஜெட் விமானஎஞ்சின் தேவை . 

இதன் நுட்பங்களை திரு. ஆசிர் சாமுவேல் விளக்ககுகிறார்

மிகவும் பொறுமையாகவும் கவனமாகவும் கேளுங்கள் பல அறிய தகவல்களை உணரலாம் . மேலும் இந்திய முயற்சி எல்லா துறைகளுள்ளும் பார்வையை செலுத்துவதையும் உணரலாம் . இது போன்ற பிற தகவல்கள் இன்னும் வரும்

India's victory-Indian jet's engine GTX-35VS Kaveri succeeded and when will it fly part-2.#jet #drd

நன்றி       அன்பன்     ராமன்            

LET US PERCEIVE THE SONG -31

  LET US PERCEIVE THE SONG -31            பாடலை உணர்வோம் -31   ஆயிரம் பெண்மை மலரட்டுமே [ வாழ்க்கைப்படகு -1965]   கண்ணதாசன் , விஸ்வ...